சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,17.ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடைபெற்றது.ஆண்டுதோறும் திருவையாற்றில் நடைபெறும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவினையடுத்து,இவ்விழா பொள்ளாச்சியில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சங்கீத மும்மூர்த்திகள் எனக்குறிப்பிடப்படும் ஸ்ரீ தியாகராஜர்,சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய மூவருள்,ஸ்ரீ தியாகராஜருக்கு ஆண்டுதோறும் ஆராதனைவிழா நடைபெறுவது வழக்கம்.திருவையாற்றில் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் முழவதுமிருந்து நூற்றுக்கணக்கான இசைக்லைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் இசையால் ஆராதனை செய்வது போல,கோவைமாவட்டம் பொள்ளாச்சியிலும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றவிழாவில்,கோவை மாவட்டம் மட்டுமின்றி,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து வந்திருந்த ஏராளமான இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு,நாதஸ்வரம்,தவில்,மற்றும் இசைக்கருவிகளுடன் ஸ்ரீ தியாகராஜருக்கு ஆராதனை செய்தனர்.
ஒருநாள் முழவதும் நடைபெறும் இவ்விழாவில்,ஒவ்வொரு அரைமணிக்கும் ஒரு குழுவாக,இசைக்கலைஞர்கள் ஆராதனை விழாவில் பங்கேற்றுவருகின்றனர்
மேலும்,வளரும் இசைக்கலைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கவும்,இசையின் முக்கியத்துவத்தை விளக்கவும்,அதன் மீதான தொடர் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவில்,25 ஆண்டுகளாக இசைத்துறையில் அனுபவமிக்க மூத்த கலைஞர்களுக்கு நாதப்பிரம்ம பூஷன் என்ற பட்டம் வழங்குவதோடு,இசைக்கலைஞர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் செய்வதாக சங்க நிர்வசாகிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment