pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Sunday, January 31, 2010

just re..laaax.- மேக்கப் போட்டபின் சில உருவங்கள்..!
















































மத்திய அரசே,இது நியாயமா.? துருவனின் குமுறல்..!

ஆபரேஷன் கிரீன் ஹன்ட்”--"OPERATION GREEN HUNT" என்றால் என்னவென்று தெரியுமா..?.நக்சல்பாரி இயக்கத்தையம்,மாவோயிஸ்ட் கட்சியையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு அறிவித்துள்ள உள்நாட்டுப்போரின் பெயர்தான் இது.
ஜார்கண்ட்,சட்டீஸ்கர்,ஒரிஸ்ஸா, மற்றும் மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாருண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்ட கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே,இந்த தாக்குதலின் நோக்கம் என்று,மத்திய உள்துறை அமைச்சரான “மாண்புமிகு” ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால்,அதில் என்ன தவறு.?,என்றுதான் உங்களுக்கு கேட்கத்தோன்றும். ஆனால் இதன் பின்னனியில் உள்ள குமட்டும் அரசியலும்,அதன் கோர நோக்கமும் நீங்கள் ஒரு இந்கியக்குடிமகன் என்பதால் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.தொடர்ந்து படியுங்கள்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும், விமானப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன.சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது.சி.ஆர்.பி.எஃப்,கோப்ரா,சி.60,கிரேஹவுண்ட்ஸ்,இந்திய-திபெத் எல்லைப்படை,நக்ஸலைட் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகிறது.இந்திய இராணுவ ஹெலிகாப்டர்களும்,அமெரிக்க இராணுவ செயற்கை;கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன.இந்திய இராணுவஅதிகாரிகள் போரை வழிநடத்துகிறார்கள்.சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும்,இந்தப் போருக்கு மத்தியஅரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ.7300 கோடி…,
மாவோயிஸ்ட்டுகளை
ஒழிப்பதற்காக ஏற்கனவே சட்டீஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வாஜுடும் என்ற கூலிப்படை,கடந்த நான்கு ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து,மூன்று லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது.ஐம்பதாயிரம் பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது ஆபரேஷன் கிரீன் ஹன்
ட்”டின் விளைவாக மேலும் பலஆயிரம் பழங்குடிமக்கள் காடுகளைத்துறந்து ஓடுகிறார்கள்.
“இலங்கை ராணு
வத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார் சட்டீஸ்கார் மாநில டி.ஜி.பி.விஸ்வரஞ்சன்.

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் ரகசியம் இதுதான்.தண்டகாரண்யாவின் காடுகளிலும்,மலைகளிலும் அற்புதமான அரிய கனிமவளங்கள்,புதைந்து கிடக்கின்றன.உயர்தரமான இரும்புத்தாது,செம்பு தங்கம்,வைரம்,அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட்,சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்புக்கற்கள்,நிலக்கரி,பளிங்கு கிரானைட்,சிலிக்கா,குவார்ட்சைட் போன்ற 28 வகையான கனிமவளங்களும்,காட்டுவளங்களும்,நீர்வளமும் நிறைந்திருக்கின்றன.
பன்னாட்டு கம்பெனிகளும் இந்தியத் தரகு முதலாளிகளும் இஷ்டம்போல இந்தப்புதையலை அள்ளிச்செல்லமுடியாமல் குறுக்கே நிற்கிறார்கள் மாவோயிஸ்ட் கொரில்லாக்கள்.சிதம்ரத்தின் கொலை வெறிக்கு காரணம் இதுதான்;..!
ஆம்,தண்டகாரண்யாவின் காடுகள் மலைகள்,ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான ப
ழங்குடி மக்களுக்கு தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது இந்தியஅரசு.
ஸ்டெரிலைட் கம்பெனியின் தாய் நிறுவனமான வேதாந்தா என்ற பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒரிஸ்ஸா அரசு 40 கிலோமீட்டர் நீளமுள்ள நியாம்கிரி மலையை தா
ரை வார்த்திருக்கிறது.இந்த மலையிலுள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் 7 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16 சதமும், இரும்புத் தாதுவில் 20 சதமும்,சட்டீஸ்கர் மாநிலத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாடா,ஜிண்டால்,போன்றவர்களுக்கு கிரையம் எழுதித்தந்து விட்டது அம்மாநிலஅரசு.
இரும்புத்தா
துவின் இன்றைய உலகச்சந்தை விலை ஒருடன்னுக்கு 210 டாலர்.இது இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம்ரூபாய்.ஆனால் இம்முதலாளிகள் அரசுக்கு, தரவிருக்கும் விலை டன்னுக்கு 27 ரூபாய் மட்டுமே.இதைப்போல ஒன்றிரண்டு அல்ல,நூற்றுக்கணக்காண ஒப்பந்தங்கள்..!
பழங்குடி ம
க்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை.அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்pன்றன.
சுpன்னஞ்சிறு ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும்,ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறிவிட்டது.இங்கிருந்து மட்டும் பத்துலட்சம் பழங்குடி மக்களும்,
விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.டாடா,பிர்லா,ஜிண்டால்,எஸ்ஸார்,மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும்,வேதாந்தா போஸ்கோ,ஹோல்சிம்,லபார்க்,ரியோடின்ட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளைப் போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ,டாடா, வேதாந்
தா,மிட்டல்,ஸ்டெரிலைட்,ரிலையன்ஸ்,ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எதிராகவும்,ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள்.அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டி முடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை.கோபால்பூரில் டாடாவின் இரும்பாலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது..ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம்தோண்டி தங்கமும்,பிளாட்டினமும் எடுக்கவந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை.இவையெல்லாம் மாவோயிஸ்ட் ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல.தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.

நமது நாட்டில் இயற்கைவளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில்,இடதுசாரி தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால்,அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும் என்று இந்தப்போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன் சிங்.
டாடா,அம்பானி,மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும்,அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன் சிங் கூறும்செய்தி.
இந்தப்போர் மாவோயிஸ்ட்டுகளு
க்கு எதிரான போர் மடடுமல்ல,இது மக்களுக்கு எதிரான போர்.
காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை.கனிமவளங்களை
கைப்பற்றுவதற்காக அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.கடல் மீனவர்களின் உரிமை.பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள்,மீன்வளத்தை அள்ளுவதற்காக மீனவர்களுக்கு கடலில் எல்லைக் கோடுகள் போடுகிறது.மீறினால் காட்டுவேட்டை போல,கடல்வேட்டை ஒன்றை இந்த அரசு அறிவிக்கும்.

வுpதை என்பது விவசாயிகளின் மரபுரிமை.ஆனால் அதனை பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு.இனி நமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமைகோரினால் போலீஸ் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும்.மீறினால் போரும் தொடுக்கும்.

பழங்குடிகள் விவசாயிகள்,மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மடடுமல்ல. பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன.
தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்காகத்தான் ஒரிஸ்ஸாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.அதே தென்கொரிய ஹ{ண்டாயின் முதலீட்டுச்சூழலைப் பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள்.பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்த பட்ச ஊதியம் முதல் பணிநிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றன.
கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித்தருவதற்காக அரசுப்பள்ளிகள்,கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச்சூழலுக்காக அரசின் இலவச மருத்துவமனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாக் காடுகளைத்தாண்டி,நாடு முழுவதும் வியாபித்திருக்pறது.போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன.ஆனால் போரின் நோக்கம் நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறு காலனியாக்கமாக மாறிவருகின்றது.

இந்தமறுகாலனியாக்க் கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும்,கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன.கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக் கொள்வதில் மட்டும் அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.

1994.ல் “காட்” ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து,மத்தியிலும்,மாநிலங்களிலும், வௌ;வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும்,தனியார்மைய, தாராளமயக் கொள்கையிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டுமுதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.
ஆம்..மறுகாலனியாக்கக் கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாயிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக,காண்ட்ராக்டர்களாக,பங்குதாரர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடீஸ்வரர்களின் மன்றமாக இருக்கிறது நாடாளுமன்றம்.அரசுஅதிகாரமும்,நீதியும்கூட பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டன.

சீரழிந்து நாறிக்கிடக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக,தன்னலனைத் துறந்தவர்களாக,லஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக பட்டங்கள்,பதவிகளுக்காக பல்லிளிக்காதவர்களாக,இழப்புக்கும்,தியாகத்துக்கும் அஞ்சாதவர்களாக நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல் பாரி புரடசியாளர்கள் மட்டும்தான் என்று பழங்குடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர் மாவோயிஸ்ட்டுகளும்,நக்சல்பாரிகளும்.எனவேதான் ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்துவரும் சூழலில் மறுகாலனியாக்க தாக்குதல்களின் தீவிரம்,மக்களை நக்சல்பாரி புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.
எனவேதான் நம்நாடு எதிர் கொள்ளும் மிகப் பெரிய உள்நாட்டுபாதுகாப்பு அபாயம் என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன் சிங். அத்வானி முதல்,புத்ததேவ் வரை அதனை வழிமொழிகிறார்கள்.தங்களுடைய எதிரிகள் யார்.? என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் நமது நண்பர்கள் யார்.? என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல் ஓட்டுக்கு லஞ்சம்.இலவசத்திட்டங்கள் போன்ற ஆயுதங்களால் அவர்களைத்தாக்கி ஓட்டுவேட்டையும் நடத்துகின்றனர். இந்த ஓட்டுவேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால்,உடனே காட்டுவேட்டை தொடங்குகிறது.
மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதால்தான்,அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக, ப.சிதம்பரமும்,மன்மோகன்சிங்கும் கூறிவருவது கடைந்தெடுத்த பொய்.அடுக்கடுக்காய் தொடங்கப்படும் மறுகாலனியாக்கத் தாக்குதல்களால் வாழ்க்கை பறிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு,எதிர்த்துக் கேட்டால் ஒடுக்கப்பட்டு கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள்.இதை அரசு அறிந்தே இருக்கிறது.இந்த வெடியின் திரியும் அதனைப்பற்ற வைக்கும் பொறியும்,நக்சல்பாரிகள்தான் என்ற உண்மையும் அரசுக்கு தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக்கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது.
மறுகாலனியாக்க எதிர்ப்பின் கூர்முனையாகஇருக்கும் நக்சல்பாரி இயக்கத்தை முறியடிக்க முயல்கிறது. “ஆப்ரேஷன் கிரீன்ஹன்ட்” என்ற நக்சல்வேட்டையின் நோக்கம் இதுதான்.

just re.....laaax..!

பேசாமல் கிடந்த பெரியசாமி, எண்பது வயதான,உடல் துரும்பாய் இளைத்த ஒருநோயாளி,மகன்கள் அவரை தனியாக வைத்திருந்த ஒரு அறையில், அதிகமானபுழுக்கம் என்பதால் காற்றோட்டத்திற்காக,எலக்ட்ரீசியன் ஒருவரை அழைத்துவந்து புதிய மின்விசிறி மாட்டினார்கள்.
மின்விசிறியை மாட்டி அதனை ஓடவைத்தபோது,பெரியசாமிக்கு கடுமையானமூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு,உடம்பும் உதறித் தூக்கிப் போட்டது.

இதனால் அரண்டுபோன பெரியசாமியின் மகன்கள்,அருகாமையிலிருந்தமருத்துவரை அழைத்துவந்து,செய்த சோதனையில் மருத்துவருக்கு ஒன்றுமேவிளங்காத நிலை.

எப்போதெல்லாம் இப்படியாகிறது..?.”

மின்விசிறியை போடும்போதெல்லாம் அவருக்கு தூக்கி,தூக்கிப் போடுகிறதுடாக்டர்
அப்படியா..சரி மின்விசிறியை போடுங்கள்..,

சுவிட்ச் போட்டதுதான் மாயம்;..,பெரியசாமி ஆவேசத்துடன் காற்றில் பறந்துசெல்லமுயன்றதுபோல இருந்தது.
பதறிப்போன டாக்டர்.உடனே சுவிட்சை நிறுத்திவிட்டு மீண்டும் பெரியசாமியைசோதனைசெய்ய,அப்படியொன்றும் வித்தியாசமான உடற்கோளாறு எதுவும்தென்படவில்லை.
இது என்ன மாயமாக இருக்கும்..?,மின்விசிறியைப் போட்டவுடன,பெரியசாமிபறக்கிறார் என்றால்,மின்விசிறியைப் போட்டவுடன்….’ யோசித்தபடியேமின்விசிறியை அவர் நோட்டமிட,அவரைப்பின்பற்றி எல்லோரும் மேலேயேபார்த்தபடி யோசிக்க..,
அதுவரை பேசாமல் கிடந்த பெரியசாமி, “டேய்..அந்த ஃபேனின் றெக்கையைதிருப்பி மாட்டுங்கடா..என்று கதறினார்.
“ …………………………”
இப்போதுஅந்த எலக்ட்ரீசியனைஉதைப்பதற்காக பெரியசாமியின் மகன்கள்தேடிக்கொண்டிருக்கின்றனர்.

டேய்.வெங்கடேசாஓடீரு..”



Tuesday, January 19, 2010

யானை பறிமுதல் ..!இருவர் கைது..!

















பொள்ளாச்சி.ஜன.19 கேரளமாநிலத்திலிருந்து,கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு எவ்வித அரசு ஆவணங்களுமின்றி கொண்டுவரப்பட்ட யானையை,ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக யானைப்பாகன் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சிஒன்றுக்கு கேரளமாநிலம் பாலக்காடு பகுதியிலிருந்து,ஏமனூர் பகவதியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான ராஜசேகரன் என்ற யானை கொண்டுவரப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆனைமலை புலிகள்காப்பக களஇயக்குனர் பசவராஜ் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில் வனத்துறையினர் கோவை சாலையில் தணிக்கைணில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கேரளமாநில எல்லையான நடுப்புணி வழியாக செல்வதற்காக யானையைக் கொண்டு சென்ற யானைப்பாகனான கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லேகுளங்கரை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-எ-மணி வயது.38-மற்றும் அவரது உதவியாளர் கிருஷ்ணன்குட்டி-வயது.24- ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கேரளம் மற்றும் தமிழகவனத்துறை உயர்அதிகாரிகளின் முன்அனுமதியோ,ஆந்திராக்ஸ் உள்ளிட்ட நோய்கள் இல்லை என்பதற்காhன மருத்துவசான்றிதழ்களோ இல்லையென்பது தெரியவந்தது.
இதனால் யானையைப் பறிமுதல் செய்த வனத்துறையினர்,யானைப்பாகனையும், உதவியாளர் ஆகிய இருவரையும் கைது செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சியில் யானை ஒன்று பறிமுதல் செய்;யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Monday, January 18, 2010

சிறுவனைக் கொன்ற சிறுத்தைப்புலி சிக்கியது..!

















பொள்ளாச்சி.ஜன.18 கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தோணி முடி எஸ்டேட்டில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுவனைக் கடித்துக் குதறிக் கொன்ற சிறுத்தைப்புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனையடுத்து சிக்கிய சிறுத்தைப்புலி, அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தோணிமுடி எஸ்டேட்.இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில், கடந்த ஜன.10.ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த முகேஸ்வரன் என்ற சிறுவனை, சிறத்தைப்புலியொன்று திடீரென்று தாக்கி இழுத்துச் சென்றதில் அவன் பரிதாபமாக இறந்தான்.
இதனையடுத்து வனத்துறையினர் சார்பில் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு,கடந்த சில தினங்களாக மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ்சேவியர் தலைமையில்,வனத்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த சிறுத்தை,வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.இதனால் அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு,வனத்துறை மருத்துவர் மனோகரன் மூலம் மருத்துவப்பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் அதன் காலடியை வைத்து,சிறுவனைத் தாக்கிக் கொன்ற அதே சிறுத்தைப்புலிதான் என்றும் உறுதி செய்துகொண்டனர்.
பின்னர் மருத்துவர் மனோகரன் மேற்பார்வையில், லாரியில் ஏற்றி வந்த வனச்சரகர்கள் ஆரோக்கியராஜ்சேவியர்,ஜெயராமன் உட்பட வனத்துறையினர்,திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட சின்னாறு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.கூண்டிலிருந்து பாய்ந்து வெளியேறிய சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
மேலும்,வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் வனவிலங்குகளை கவரும் வகையில்,கோழி,நாய் ஆகியவற்றை வளர்க்கவும் ,வாழை உட்பட பழவகைகளை பயிரிடவும் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.


Sunday, January 17, 2010

டாப்ஸ்லிப் யானை பொங்கல் ..!
















பொள்ளாச்சி.ஜன.16 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்ஸ்லிப்பில் இன்று யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.வனத்துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட,டாப்ஸ்லிப்பில் வனத்துறையினர் சார்பில்,யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் பசவராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,கோழிகமுத்தி முகாமைச் சார்ந்த, நான்கு குட்டியானைகள் உட்பட 21 யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதனையடுத்து பொதுமக்கள் சார்பில் புதுப்பானைகளில் பொங்கல் வைத்து யானைகளுக்கு வழங்கப்பட்டது. புpன்னர்,யானைகளுக்கு பிடித்தமான கரும்பு,வெல்லம்,வாழைப்பழம் ஆகியவையும் வழங்கப்பட்டன.
மேலும் இவற்றை யானைகளுக்கு வழங்குவதில் பொதுமக்களும்,குழந்தைகளும் மிகுந்த ஆர்வம் காட்டியதோடு,புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளன்று நடைபெறும் இவ்விழாவில்,முகாம் யானைகளின் உழைப்பை நினைவுகூறும் வகையிலும்,வனம் மற்றும் வனவளத்தில் யானைகளின் பங்கு குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விழா கொண்டாடப்படுவதாக ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் பசவராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், யானைகளைக் குறித்து ஏராளமான செய்திகளை தாங்கள் அறிந்துகொள்ள உதவியதாகவும் தெரிவித்தனர். கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கலந்து கொண்டனர்.
ஏராளமான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக 500.க்கும் மேற்பட்ட,கார்களில் இங்கு தொடர்ந்து வந்ததால் சேத்துமடை முதல் டாப்ஸ்லிப் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Saturday, January 9, 2010

திருட்டு வி.சி.டி பறிமுதல்.!-நான்கு பேர் கைது..!



பொள்ளாச்சி.ஜன.9 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் உரிமம் பெறாத மற்றும் சமீபத்தில் வெளியான தமிழ்ப்படங்களின் திருட்டு விசிடியை விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து திருட்டு விசிடிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்,இன்று பொள்ளாச்சியில் உள்ள சில விசிடி மற்றும் டிவிடிக்களை விற்பனை செய்;யும் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
உடுமலை சாலை,சுப்ரமணியசாமி கோவில்தெரு,பத்ரகாளியம்மன் கோவில் வீதி உட்பட பல இடங்களில் நடைபெற்ற,இச்சோதனையில்.சமீபத்தில் வெளியான கந்தகோட்டை,உனக்குள் ஒருவன்,வேட்டைக்காரன், அவதார், ஆதவன், பழசிராஜா, யோகி, ரேணிகுண்டா,படிக்காதவன்,உட்பட பல்வேறு புதிய தமிழ்ப்படங்கள் மற்றும் உரிமம் பெறாத திரைப்படங்கள்,ஆபாசப்படங்கள் என 165 விசிடிக்களை போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களான,அப்துல்லா, ஜெகதீசன், உமேஷ், இல்பான்ஷா ஆகிய 4 பேரையும் கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1.ல் ஆஜர்படுத்தியதையடுத்து,அவர்கள் 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே,போலீசார் அதிரடி சோதனையை இன்று மேற்கொள்ளவுள்ளதாக
அதிகாலையிலேயே,திருட்டுவிசிடிக்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் பலரும் தெரிந்து கொண்ட தகவலையடுத்து,பல்வேறு கடைகள் மூடப்பட்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 6, 2010

இலவச கண்சிகிச்சைமுகாம்.! மற்றும் ஊர்வலம்.!
பொள்ளாச்சி.ஜன.6 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,சாலைப்போக்குவரத்து வாரவிழாவை முன்னிட்டு இன்று இலவச கண்சிகிச்சை முகாம் மற்றும் பள்ளிமாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு இன்று வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு கண்களைப் பரிசோதித்துக் கொண்டனர்.மேலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வாகனம் ஓட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் படக்காட்சிகளும் திரையிடப்பட்டன.
மேலும் பொள்ளாச்சி நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலைப்போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளிவளாகத்திலிருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் நமச்சிவாயம் துவங்கிவைத்தார்.நகரின் முக்கியவீதிகள் வழியாகச் சென்று,மீண்டும் பள்ளி வளாகத்திலேயே முடிவு பெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்களும்,ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து எதிரே வரும் வாகன ஓட்டுனர்களுக்கு, கண்களை கூசச் செய்யும் வகையில் உள்ள வாகன முகப்புவிளக்குகளின் மீது கறுப்பு வில்லைகளை ஒட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.நகரின் முக்கிய சாலைகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க
வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள்.!

பொள்ளாச்சி.ஜன.6 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒருங்;கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றும்,வழக்கறிஞர்கள் சங்கம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் சங்கநிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்றம்,மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் எண்.1.மற்றும் எண்.2 ஆகியவை தனித்தனி இடங்களில் அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கறிஞர்கள் மன்றத்தேர்தலில் சங்கத்தின் தலைவராக பி.குமரவேல்,செயலாளராக மணிவண்ணன் மற்றும் பொருளாளராக விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கான பதவியேற்பு விழா வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில்,இன்று நடைபெற்றது.முன்னாள் தலைவர் மீரான்மைதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து புதிய நிர்வாகிகளாகப் பதவியேற்றுக் கொண்டவர்கள் சார்பில் பேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குமரவேல்,பொள்ளாச்சியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அமைந்த ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை அமைக்க தமிழகஅரசு முன்வரவேண்டும் என்றும்,அதனை நிறைவேற்றும் முயற்சியில் வழக்கறிஞர்கள் சங்கநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tuesday, January 5, 2010

ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்.!

பொள்ளாச்சி.ஜன.5 போக்குவரத்து வாரவிழாவை முன்னிட்டு,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின.இதில் ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த ஜனவரி.1.ஆம் தேதிமுதல் போக்குவரத்து விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து இருசக்கர வாகனஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,பேரணி நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியிலிருந்து துவங்கிய இப்பேரணியை வருவாய்க்கோட்டாட்சியர் அன்பழகன் கொடியசைத்து துவக்கிவைத்தார் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் மணி,போக்குவரத்து ஆய்வாளர்கள் உதயகுமார்,சிவகுமாரன்,செல்வி,பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நமச்சிவாயம் மற்றும் டிராபிக் வார்டன் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மகாலிங்கபுரத்திலிருந்து துவங்கிய ஊர்வலம்,நகரின் முக்கிய சாலைகள் வழியாக உடுமலை சாலையிலுள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் வரை நடைபெற்றது.தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர், தலைக்கவசத்துடன்,தங்கள் இருசக்கர வாகனத்துடன் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பி.எஸ். என்.எல்.ஆர்ப்பாட்டம் .!

பி.எஸ்.என்.எல் -தொலைத் தொடர்புத்துறையிலிருந்து 93 மில்லியன் ஜி.எஸ்.எம் இணைப்புகளுக்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொலைத் தொடர்புத்துறை ஊழியர் சங்கங்கள் இணைந்து இன்று -5.1.10-ஆர்ப்பாட்டம் நடத்தின.
பி.எஸ்.என் .எல் - தொலைத்தொடர்புத்துறையிலிருந்து 93 மில்லியன் ஜி.எஸ்.எம் இணைப்புகள் தருவதற்காக கடந்த சில மாதங்கள் முன்பாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.இதனையடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை பரிசீலனை செய்யாமலும்,ஒப்பந்தப்படி இணைப்புகளை அளிக்காமலும் பி.எஸ்.என்.எல்- நிர்வாகம் காலம் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களை அதிகப்படியான செலவில் தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக்கும் திட்டத்திற்காகவுமே பி.எஸ்.என்.எல்.- நிர்வாகம், ஒப்பந்தங்களின்படி பொதுமக்களுக்கான இணைப்புகளை தருவதற்கு காலதாமதம் செய்து வருகிறது என்றும் தொலைத்தொடர்பு ஊழியர்சங்கங்கள் குற்றம் சாட்டிவருகின்றன.
எனவே உடனடியாக ஜி.எஸ்.எம். இணைப்புகளை வழங்க பி.எஸ்.என்.எல்- நிர்வாகம் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பாக தொலைத் தொடர்பு ஊழியர்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சசிதரன் தலைமை வகித்தார்.பிரபாகரன், எஸ்.வெங்கடாச்சலம், பிரிட்டோ அலெக்ஸாண்டர் உள்ளிட்ட ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
பொள்ளாச்சி தொலைத் தொடர்பு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஊழியர்கள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதப்பிரதமருக்கு தந்திகள் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரேக்ளா பந்தயங்கள்.!





கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் பசுமையையும், மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் காங்கேயம் காளை இனத்தையும் பாதுகாக்கவேண்டும் என்று வலியுறுத்தி,பொள்ளாச்சியை அடுத்துள்ள வடக்கிபாளையம் பகுதியில் ரேக்ளா மாட்டுவண்டிப்பந்தயம் நடைபெற்றது.200 மற்றும் 300 மீ என இருபிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளை,தமிழக கால்நடைத்துறை அமைச்சர் திரு.பொங்கலூர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புசபை மற்றும் நெகமம் கே.வி.கே.அறக்கட்டளை சார்பில் ரேக்ளா மாட்டுவண்டிப் பந்தயங்கள் நடைபெற்றன. பொள்ளாச்சியின் பசுமையையும்,சுற்றுச்ச+ழலையும் பாதுகாக்கவேண்டும் என்றும்,அழிந்து வரும் காங்கேயம் காளை இனத்தைப் பாதுகாப்பதில் விவசாயிகளிடையே விழிப்புணர்வை வலியுறுத்தியும் இப்போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளை தமிழக ஊரகத்தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கிவைத்தார். மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்துணைத்தலைவர் திரு.செல்லமுத்து உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
200 மீ மற்றும் 300 மீ என இருபிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் கோவை மாவட்டம் மட்டுமின்றி,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரளமாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட ரேக்ளா பந்தயவீரர்கள் கலந்து கொண்டு,ரேக்ளா மாட்டுவண்டிகளை ஓட்டினர்.
பந்தயதூரத்தை மிகக்குறைந்த விநாடிகளில் கடந்துசெல்லும் ரேக்ளா வண்டிகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக ஒரு சவரன் தங்கம் முதல் அரை சவரன் வரையான தங்கக் காசுகளும்,ஆறுதல் பரிசுகளாக கேடயங்களும் வழங்கப்பட்டன.
மேலும்,காங்கேயம் காளைஇனம் அழிந்து வருவதாகவும்,அதனை பராமரிக்கும் விவசாயிகளுக்கு தமிழகஅரசு மானியம் வழங்கவேண்டும் என்றும், இப்போட்டிகளை நடத்திய அமைப்பின் சார்பில் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Friday, January 1, 2010

அரவாணிகளை அரவணைப்போம்..! ச.அன்பரசு.
















அண்மையில் டெல்லி உயர்நீதி மன்றம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை கொடுக்கும் வகையில் அளித்த பரபரப்பான தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பழமைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும், வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தார்கள்.இதுகுறித்து இந்தியாவில் இருக்கும் பல கட்சிகள் தங்களது கருத்துக்களைக் கூறாமல், மௌனமாக இன்றுவரை இருந்துவருகின்றன. பெரும்பான்மையான அரசியல் கட்சிகளுக்கு இது குறித்து எவ்வித பிரக்ஞையும்,தேடலும் இல்லாததுமே இதற்கு காரணம்.
இப்படிப்பட்ட தனிமனிதனின் உரிமையைப் பாதுகாக்கும் இத்தீர்ப்பிற்குப் பிறகும்கூட இதுகுறித்த சிந்தனையோ,கருத்தோட்டங்களோ வராமலிருப்பது எவ்வளவு மேலோட்டமான அரசியல் கோட்பாடுகளை இக்கட்சிகள் கொண்டுள்ளன என்பதைக்காட்டுகிறது. நல்லவேளையாக இருகம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் எவ்வித ஆரவாரமுமின்றி,இச்சட்டத்தை வரவேற்றிருக்கின்றன.

இத்தீர்ப்பின்மீது இடைக்காலத்தடை விதிக்கக்கோரியும்,சட்டத்தை திரும்பப்பெறக்கோரியும்,உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகின்றனர் நமது கலாச்சாரக்காவலர்கள்.அரசின் கொள்கை முடிவை அறிவிக்குமாறு உச்சநீதி மன்றம்,மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.தற்போது இச்சட்டம் டெல்லியில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
இதற்கு ஒருபடி மேலாக,இந்தியத் தேர்தல்ஆணையம்,அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகளுக்கான பாலின அங்கீகாரம் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு முடிவை அறிவித்துள்ளது. இம்முடிவின்படி அரவாணிகள், ஆண்,பெண், என்ற இருவகைகளில் மட்டும் தங்கள் பாலினத்தை குறிப்பிடமுடியும் என்ற நிலையை மாற்றி, மூன்றாம் பாலினமாக “மற்றவர்கள்” என்று குறிப்பிட்டு தங்களது தனித்த அடையாளத்தை நிலைநாட்டிக் கொள்ளமுடியும்.
தேர்தலில் பங்கேற்கவும்,கல்வி பயிலவும்,வேலை வாய்ப்புகள் பெறவும், சமூகத்தில் மற்றவர்களுடன் கலந்து வாழவும்,இந்த அங்கீகாரம் திருநங்கைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதைப்போலவே தற்போது தமிழகஅரசு சட்டரீதியான பால்மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அங்கீகாரம் அளித்து,திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றிவைத்துள்ளது.இதுவரை கசாப்புக்கடைகளுக்கு இணையாக உயிர்போகும் வலியுடன் முற்றிலும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக,உயிருக்கு எவ்வித உத்தரவாதமின்றி கேவலமானமுறையில் நடத்தப்பட்டுவந்த உறுப்புமாற்று அறுவைசிகிச்சை,இனி அரசுபொது மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும், சுகாதாரமான முறையில் தக்க சோதனைகளுக்குப் பிறகு நூறுசதவீத பாதுகாப்புடன் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும்.
ஏற்கனவே,தங்களை உடலால் ஆணாகவும்,மனதளவில் பெண்ணாகவும் வாழ்ந்துவரும் அரவாணிகள் தங்களின் மனவலியுடன் கொடூரமான உடல்வலியையும்,அனுபவித்துக் கொண்டிருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தங்களின் இருத்தலைக் கௌரவமான முறையில் வெளிப்படுத்திக் கொள்ள வழிசெய்துள்ள இச்சட்டம் மேன்மைக்குரியதாகும்.மேலும்,தமிழகஅரசின் “கலைஞர் காப்பீட்டு திட்டம்” இவர்களுக்கு பிற மருத்துவ வசதிகளை வழங்கும் பாதுகாப்பையும் உறுதிசெய்துள்ளது.
மத்திய மாநிலஅரசுகள் திருநங்கைகள் மேல் இவ்வளவு அக்கறையும், அனுசரணையும் காட்டத்துவங்கியுள்ள நேரத்தில், திரைப்படங்களில்,அதில் இடம்பெறும் பாடல்களில் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில், கதைகளில் இவர்களைக் கேவலப்டுத்தும் நிலைமை தொடர்வதை காண சகிக்கவில்லை. இந்நிலை மாற்றப்படவேண்டும்.இதனைத் தடுக்க, வன்கொடுமைச்சட்டத்தைப்போன்று,”அரவாண்கொடுமைச் சட்டம் அல்லது திருநங்கை பாதுகாப்புச்சட்டம்” என இயற்றவேண்டும்.திரைப்படத் தணிக்கைத்துறை,திரைப்படங்களில் அரவாணிகள் கேவலமான முறையில் சித்தரிக்கப்படும் போக்கினை மாற்ற தீவிரமுயற்சி எடுக்கவேண்டும்.

ஆணிலிருந்து பெண்ணாக அல்லது பெண்ணிலிருந்து ஆணாக மாறும் இவர்களது உருவ மாற்றங்கள்,நடை,உடை,பாவனைகளையெல்லாம் இயற்கை தந்த “பாலின ஊனம்” என்று ஏற்றுக்கொள்ள மறுக்கும்,பக்குவமற்ற சமூகம் மட்டுமின்றி, இவர்களது பெற்றோர்களும் உடன்பிறப்புகளுமே,புறக்கணிக்கும் கொடுமையும் அவலமும் நீடிக்கிறது.இவர்கள் மீது கடுமையாக வெறுப்பை உமிழும் இந்த நிலை தடுக்கப்பட்டாக வேண்டும்.
பெரும் மன உளைச்சலுக்கும்,குடுமபத்தாரின் வெறுப்புகளுக்கும் ஆளாகும் அரவாணிகளில் பெரும்பாலோர்,பள்ளிக் கல்வியைக் கூட தொடரமுடிவதில்லை பள்ளிப்பருவத்திலேயே இவர்கள் மனம் “பால்மாறாட்டம்" கொள்வதால் ஏற்படும் மனஎழுச்சி,இவர்கள் அடிப்படைக்கல்வியைக் கூட கற்கமுடியாமல் தடை செய்துவிடுகிறது.
பள்ளியில் சக மாணவர்களின் கேலிகளும்,கிண்டல்களும் கவனச்சிதைவையும், மனஉளைச்சலையும் உண்டாக்குவதால் என்ன முயற்சி செய்தபோதும் அவர்கள் படிப்பைத் தொடரமுடியாத நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.தப்பித்தவறி படித்தாலும்,அது உயர்கல்வியேயாயினும்,இவர்கள் தாங்கள் உயிர்வாழ பிச்சையெடுப்பது அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.

இந்நிலைமைகளால் பாதிக்கப்பட்ட இவர்கள் இச்சமூகத்தின் மீது கோபமும் ஆத்திரமும் கொண்டு சக மனிதர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் விபரீதமும் ஏற்படுகிறது.அரவாணிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒருநாடகமே இதுவன்றி, வேறல்ல என்பதைப் புரிந்து கொண்டு அனுதாபத்துடன் இப்பிரச்சினையை நாம் அணுகுவதுதான் சரியானவழி.!
அரவணைக்கும் உறவுகள்,கல்வி,வேலை வாய்ப்புகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் அரசு, என இவைகள் மட்டுமே அரவாணிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும்.அப்படிப்படட சமூகத்தில் மட்டுமே இவர்கள் பிச்சைஎடுத்து பிழைப்பதையும்,உடலை விற்று பிழைப்பதையும் தடுக்க முடியும். இவர்கள் படும் சொல்ல முடியாத துயரங்களையும் போக்க முடியும்.
இதற்கு வழிசெய்யும் வகையில் மத்திய மாநில அரசுகள் உறைவிடத்துடன் கூடிய சிறப்புப் பள்ளிகளையும்,கல்லூரிகளையும் துவக்கவேண்டும். இதன்மூலம் தன்மானத்துடன் தடையற்ற அடிப்படை மற்றும் உயர்கல்விக்கு உத்திரவாதம் ஏற்படும்.கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும்,உத்தரவாதமும் பெறும் வகையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கும் இடஒதுக்கீட்டைப் போலவே அரவாணிகளுக்கும் “இடஒதுக்கீடு” அளிக்கவேண்டும்.
அரவாணிகள் வாழ்வுக்கென வன்கொடுமைச்சட்டம்,சிறப்புக்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீடு ஆகியன அரசால் செய்துதரப்பட வேண்டிய அதேவேளையில் மாணவர்களும்,இளைஞர்களும் அரவாணிகள் நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில், அவர்களை சகமனிதர்களாக மனிதநேயத்துடன் நடத்தவேண்டிய அவசியம் பற்றி உணர்த்தும் வகையிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்கவேண்டும்.தமிழக அரசு அறிமுகப்படுத்தும் சமச்சீர் கல்வித்திட்டத்திலும்,பாலினக் கல்வியிலும் அரவாணிகள் நிலைபற்றிய பாடத்திட்டத்தை வைக்கவேண்டும்.
நாகரீக உலகம் முழுவதிலும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, தன்மானத்துடன்,மற்றவர்களுடன் சமமாகக் கலந்து வாழ்ந்து வரும் திருநங்கைகள் நிலையினைப் போல் இந்தியாவிலும் வருதல் எந்நாளோ..?
கடையினும் கடையீராகப் பிழைக்கும் திருநங்கைகளை மனிதநேயத்துடன் அரவணைப்போம்..!


நன்றி.. ..
வெளியீடு -- சங்கமம்
-ஒரு கருத்துப் பரிமாற்றக்களம் -
04.தடாகம் சாலை,வேலாண்டிபாளையம்,
கோவை-641025.
தொடர்புக்கு.98422 60605,93459 44439, 93632 42494

e.mail-texmakebrisk@gmail.com