pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Tuesday, July 20, 2010

கேரளா வனத்துறையினரின் அத்துமீறல்.!

கேரளவனத்துறையினர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.20 கேரளமாநிலம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியிலுள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்புகளில் இருந்து,கொண்டுவரப்பட்ட தெருநாய்களை,கோவைமாவட்டம் ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் விடுவித்த கேரளவனத்துறையினர்,15 பேர்,கைதுசெய்யப்பட்டு,
பின்னர் மேல்நடவடிக்கைக்காக கேரளவனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளமாநிலத்திலிருந்து கடந்த பல வருடங்களாக மருத்துவக்கழிவுகள், மாடு,கோழி ஆகியவற்றின் இறைச்சிக்கழிவுகள் கொண்டுவரப்பட்டு கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகள் உள்ளிட்ட கேரளதமிழகஎல்லைகளில் கொட்டப்பட்;டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நிலம் மற்றும் நீராதாரங்கள் மாசுபட்டுவருகின்றன.இது குறித்து பல்வேறு அமைப்புகள் தமிழக கேரளஅரசிடம் முறையிட்டும் இது வரை உரிய நடவடிக்கைகள் இல்லை..,

இந்நிலையில் கேரளமாநிலம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலுள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் தெருநாய்கள் கேரளவனப்பகுதியிலுள்ள மான்,முயல் உட்பட சிறுவிலங்குகளை வேட்டையாடுவதாகக் கூறி,அங்கிருந்து 8 நாய்களைப்பிடித்து வந்த கேரளவனத்துறையினர்,அவற்றை ஆனைமலைபுலிகள் காப்பத்திற்குட்பட்ட ஆழியாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலைபுலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு வனக்காப்பாளர்கள் வேட்டைத்தடுப்புக் காவலர்கள்,வாகனஓட்டுனர் உள்ளிட்ட கேரளவனத்துறையினரான 15 பேரை சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர்.இதனால் இப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
புpன்னர் இதுகுறித்து கேரளவளனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அப்போது பரபம்பிக்குளம் புலிகள் காப்பக வனக்காப்பாளர் சஞ்சயன்குமார்,பிடித்துவரப்பட்ட தெருநாய்களை கேரள எல்லைப்பகுதியிலுள்ள கிராமங்களில் விடச்சொன்னதாகவும்,ஆனால் நாய்களை கொண்டுவந்த வனத்துறை ஊழியர்கள் குடிபோதையில் தவறுதலாக தமிழக வனப்பகுதியில் விடுவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

- பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணியின் ஆடியோ-யூட்யூப்-சன்பொள்ளாச்சியில் உள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 15 பேரையும்,துறைரீதியான மேல்நடவடிக்கைக்காக கேரளவனத்துறை அதிகாரிகளிடம்,தமிழகவனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.கேரளவனத்துறையினர் ஒட்டுமொத்தமாகக் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக்கழிவுகளைக் கொட்டி,தமிழகத்தின் நிலம் மற்றும் நீராதாரங்களை மாசு படுத்திவந்த கேரளம்,தற்போது தமிழகவனப்பகுதிகளையும் மாசு படுத்தும் புதிய உத்தியாகவும்,சதியாகவும் தெரிகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

என்ன செய்யப்போகிறது தமிழகஅரசு..?

Friday, July 9, 2010

மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.!

மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.9.கேரளமாநிலத்திலிருந்து,மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி ஒன்றை,கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே வழிமறித்து சிறை பிடித்த பொதுமக்கள்,சாலைமறியல் மற்மு; ஆர்ப்பாட்டம் நடத்தியதால்,பொள்ளாச்சி-திருச்சூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

கேரளமாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் கொட்டக்கூடாது என்று,கேரளஅரசால் தடைவிதிக்கப்பட்ட மருத்துவக்கழிவுகளை,கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மர்மலாரிகள் மூலமாகக் கொண்டுவந்து இரவோடிரவாக கொட்டிச்செல்வது வாடிக்கையாக உள்ளது.இதனால் விளைநிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் வியாழன் அன்று இரவு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஸ்ரீனிவாசபுரம் அருகே,கடுமையான துர்நாற்றத்துடன் வந்த -கே.எல்.9-வி.4086 என்ற எண்ணுள்ள லாரி ஒன்றை, பொதுமக்கள் மறித்து சிறைபிடித்தனர்.இதனையடுத்து லாரியிலிருந்த ஓட்டுனர் இறங்கி,தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் முன்புறக்கண்ணாடியை உடைத்ததோடு,சக்கரங்களிலிருந்த காற்றையும் பிடுங்கிவிட்டனர். மேலும், பொள்ளாச்சி-திருச்சூர் சாலையிலுள்ள வளந்தாயமரம் சோதனைச்சாவடி வழியாக,மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரியை,அதிகாரிகள் அனுமதித்ததாகக் கூறி,கண்டணம் தெரிவித்த பொதுமக்கள்,அவர்கள் மீது அரசு நடவடிக்கை தேவையென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு,சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இம்மறியல் போராட்டத்தின் காரணமாக சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி டி.எஸ்.பி.முத்தழகு மற்றும் போலீசார்,மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்,இப்பிரச்சினைக்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல்போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும்,மருத்துவக்கழிவுகளைக் கொண்டு வந்த லாரியிலிருந்த கிளீனரான கேரளமாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த சுலைமான்.வயது.20, மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியப்பன்-வயது.35 ஆகியோரும் கைது செய்யப்பட்டு,பொள்ளாச்சி நடுவர்நீதிமன்றம் என்.2.ல் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதனிடையே மருத்துவக்கழிவுகளை ஏற்றிவந்ததாக சிறைபிடிக்கப்பட்ட லாரியில் இருந்தது உரம் தயாரிப்பதற்காக,மாடுகளின் அரைக்கப்பட்ட எலும்புத்துகள்கள் என்பதும்,இவற்றை கேரளமாநிலம் அங்கமாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து,திண்டுக்கல் மாவட்டத்திற்கு,முறைப்படியான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படுவதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து,லாரியின் முன்புறக்கண்ணாடியை உடைத்ததற்காக,பெரியார் திராவிடர்கழகத்தை சேர்ந்த நாகராசன் என்பவரும்,பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Wednesday, July 7, 2010

மாட்டுசந்தை வியாபாரிகள் கோரிக்கை.!

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணித்த கேரள வியாபாரிகள்.!
பலகோடி வர்த்தகம் பாதிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.7 தமிழகத்திலிருந்து அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மாடுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டித்து,கேரள மாட்டுவியாபாரிகள்,கோவைமாவட்டம் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணித்து,காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் சுமார் ரூ.4 கோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் கூடும், மாட்டுச்சந்தையிலிருந்து,அடிமாடுகள் மற்றும் கறவைமாடுகள் ஆகியவற்றை,பெரும்பாலும் கேரளமாட்டு வியாபாரிகள் வாங்கி,கேரளப்பகுதிகளுக்கு, லாரிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். இந்நிலையில்,மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்வதாகக் கூறி,பல்வேறு அமைப்புகள் பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்தைக் காட்டி,புகார் செய்வதையடுத்து,வழக்குப்பதிவு செய்யும் பொள்ளாச்சி போலீசார், லாரிகள் மற்றும் மாடுகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் இவ்வாறான வழக்குகளில்,அபராதத்தொகை செலுத்தப்பட்டு லாரிகளை திரும்பப் பெற முடிந்தாலும்,பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை கோசாலையிலிருந்து திரும்பப் பெறமுடியாததால்,பல லட்ச ரூபாய் அளவில் தங்களுக்கு நட்டம் ஏறபட்டுவருவதாக கேரளமாட்டு வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனையடுத்து இப்பிரச்சினையில் தலையிட்டு தமிழக கேரளஅரசுகள் தக்க தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி,கடந்த 1.7.10- முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணிக்கும் போராட்டத்தில் கேரள கால்நடை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் வகையில் தமிழகஅரசுடன்,கேரளஅரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி,இன்று- ஜுலை.7.-கேரள சட்டமன்றத்திற்கு ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து,பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு கேரளவியாபாரிகள் வராதநிலையில் மாட்டுச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.இந்நிலை தொடர்ந்தால் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பயன்பெற்றுவரும் விவசாயிகள்,லாரி ஓட்டுனர்கள்,தரகர்கள் உட்பட பலஆயிரம்பேர் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே,பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை நம்பியுள்ள அனைவரும் பயன்பெறும் வகையில்,20.க்கும் மேற்பட்ட மாடுகளை லாரிகளில் ஏற்றிச்செல்லும் வகையில்,உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க தமிழக,கேரள அரசுகள் முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு மாட்டுவியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sunday, July 4, 2010

சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை ..!-கி.வீரமணி

சாதிவாரியான கணக்கெடுப்பே தேவை-கி.வீரமணி

பொள்ளாச்சி.ஜுலை.4 – தாழ்த்தப்படடவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது,அதற்கு அடிப்படையான சாதிவாரியான கணக்கெடுப்பையே மத்தியஅரசு எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள அனைவரையும் இணைத்து போராட்டங்கள் நடத்தவும்,மாநாடு நடத்தவும் திராசவிடர் கழகம் ஆயத்தமாக உள்ளது என திராவிடர் கழகத்தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் திராவிடர்கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிமுகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திராவிடர் கழகத்தலைவர் வீரமணி,வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்தபின்பும்கூட,சாதிவாரியான கணக்கெடுப்பிற்கு பல அமைச்சர்களும்,கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

தூழ்த்தப்பட்டவர்கள்,மலைசவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு,இடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது,அதற்கு அடிப்படையாக உள்ள சாதிவாரியான கணக்கெடுப்பையே மத்தியஅரசு எடுக்கவேண்டும் என்று தமிழகமுதல்வர் உட்பட பலர் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே,சாதிவாரியான கணக்கெடுப்பை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளிலும் உள்ள,ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து போராட்டங்கள் நடத்தவும், டெல்லியில் மாநாடு நடத்தவும்திராவிடர் கழகம் தயாராக உள்ளது என்று திரு.கி.வீரமணி தெரிவித்தார்;.

பேட்டி-வீரமணி-திராவிடர் கழகம். பார்க்க -youtube-sunpollachi