pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Tuesday, November 1, 2011

புயலின் மறுபக்கம்.! சிறுகதை

பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம்.

மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.

மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்..,

வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்..,
‘நகரத்தின் இயக்கத்திற்கும்,தொழிலுக்கும் முதுகெலும்பாய் நேற்றுவரை இருந்தது இந்த இடம்தானா..?’

நொடியில் மாறும் திரைப்படக் காட்சிபோல ஒரேநாளில் இந்நகரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது எது..?

மதக்கலவரத்தின் கோரமுகம் நிதர்சனமாய் முகம் காட்ட,மேனியெங்கும் சிலிர்த்து அடங்கியது தேவகிக்கு..

காலையில் நடந்த கலவரத்தில் உறவுகளைப் பலி கொடுத்த அப்பாவிமக்களில் ஒருத்தியாக,தனது கணவனைப் பறிகொடுத்தவளாக..இப்போது அரசு மருத்துவமனை வளாகத்தில்,கணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள பிணவறை முன்பு காத்திருக்கிறாள்..

அந்த மருத்துவமனையில்,உயிரற்றுப் போன நகரத்தின் அமைதிக்கு எதிர்மாறாய் சந்தடிகள் நிறைந்திருந்தது.அனால் அதில் உற்சாகக்குரல்களோ, உவகைத் துடிப்புகளோ எதுவுமின்றி திரும்பிய பக்கமெல்லாம் ஒப்பாரியும் கேவல்களுமாய் மனிதர்கள்..

இன்று காலையில் வழக்கம்போல “போய்வருகிறேன்”என்று வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற கணவன் வழயிலேயே மடக்கப்பட்டு,வெட்டிக் கொல்லப்பட்டதும்.கை,கால்,கழுத்து என பல இடங்களும் சின்னாபின்னமாய் இருந்த உடலை அடையாளம் காட்ட போலீசார் அழைத்து வந்ததும்,யாரோ இயக்கிவைத்தது போலஅடுத்தடுத்து நடந்து முடிந்திருந்தது.

வாய்விட்டு கதறி அழுது புரண்டதில் தொண்டையும் உடம்பும் வலித்தது.
பிணவறை முன்பு நின்று வெகுநெரம் அழுது ஓய்ந்தபின்,சற்றுத்தள்ளி பிரம்மாண்டமாய் விருப்பு வெறுப்பின்றி எல்லாதிசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பியிருந்த அந்த மரத்தின் நிழலுக்கு வந்து,குத்துக்காலிட்டு,அதில் முகத்தைப் புதைத்து அமர்ந்து கொண்டாள் தேவகி.
அவ்வப்போது கணவனின் நினைவுகள் வந்து மனதைப் பிழிய முதுகு குலுங்கி அழுவதும்,சமனப்படுவதுமாயிருந்தாள்.

நாசக்கேடான இப்படியொரு சூழ்நிலை தன் வாழ்வில் விடியும் என்று அவள் கனவிலும் கண்டதில்லை. “நீ நாசமாத்தாண்டி போவே...” அம்மா ஆத்திரம் கொப்பளிக்க கத்தியது நினைவுக்கு வந்தது.
தான் காதலித்தவனையே மணக்கப்போகும் உறுதியை பெற்றோரிடம் தெரிவித்தபோது அம்மா கொடுத்த ஆசீர்வாதம்..அதுதான் பலித்துவிட்டதா..? இப்போது என்நிலையை அறிந்து சந்தோஷப்படுவாளோ..? ஜெயித்தது அவளின் சாபமல்ல..யாரோ சிலரின் சுயநலம்தான் என்று உணர்வாளா..?.”
அப்பாவிற்கும் அம்மாவிற்கும், அண்ணனின் நண்பனாய் அறிமுகமாயிருந்த இவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னது பிடிக்கவேயில்லை.அண்ணாவிடம் சொன்னபோது அவனால் நம்பவே முடியவில்லை. “அவனும் உன்னைக் காதலிக்கிறானா..?”
“ஆமாண்ணா..”
நிஜமாவா..?…ஹ{ம்..படிக்கும் காலத்திலிருந்து அவனை நல்லாத் தெரியும்..” அவன் அப்படி எந்தப் பெண்ணிடமும் பழகமாட்டானே..”அவன் குரலில் நீங்காத ஆச்சரியம்.
“அவரா ஒண்ணும் இதை ஆரம்பிக்கலை..நானாத்தான் அவரை விரட்டி,மிரட்டி என் காலை தெரிவிச்சேன். அவரும் எத்தனையோ காரணம் சொல்லி மறுத்துப் பார்த்தாரு.ஆனா நான்தான் விடாப்பிடியா இருந்து என் காதலை ஏத்துக்கிறதுக்கான நியாயங்களைச் சொல்லி சம்மதிக்க வெச்சேன். இப்ப அவரும் என்னைத் தீவிரமாக் காதலிக்கிறாரு…”
அண்ணன் சில விநாடிகள் என் முகத்தை ஆழமாகப் பார்த்தான்.சாதகமான பதிலை எதிர்பார்த்து படபடப்போடு அவன் கண்களையே பார்த்திருந்தேன். அவனுடைய கொள்கைகளுக்கும்,நேர்மைக்கும் சோதனையாக நான் இப்போது அவன் முன் நின்றிருக்கிறேன்.
அவனுடைய கல்லூரிக் காலத்திலிருந்தே,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கல்லூரி விழாக்களிலும்.பொதுமேடைகளிலும் கனல்தெறிக்கப் பேசிப் பழகியிருந்தான்.அந்த ஆவேசம் குன்றாதவாறு கடடுரைகளும் எழுதி பத்திரிகைகளுக்கும் அனுப்பிவந்தான்.இவையெல்லாம்தான் எனக்கு தைரியமளித்ததோ.. தெரியவில்லை..,
அண்ணன் என்னை ஏமாற்றவில்லை.ஒரு புன்சிரிப்பு மூலம் என்வயிற்றில் பாலை வார்த்தான்.“வாழ்த்துக்கள்..தேவகி…!” என்றவன் “அதான் அந்த ராஸ்கல் முன்னமாதிரி இங்கே வர்றதில்லையா..? நானா வலியப்போய் பேசினாலும் முகம்பார்த்து பேசாம..எங்கேயோ பார்த்துட்டு பேசறானா..? ஹ{ம் கவனிச்சிக்கிறேன் அவனை..”நட்பின் அதீத உறவில் செல்லமாய் கோபித்துக் கொண்டான்.
“சரி தேவகி..மேற்படி என்ன செய்யப்போறே..?
“நாங்க சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கப்போறோம்.நீதான் சப்போர்ட் பண்ணனும்.”
அண்ணன் ஆதரவாய் என் கையைப்பிடித்துக் கொண்டான்.

அம்மா,அப்பாவின் எதிர்ப்பைமீறி,எனது கல்யாணத்தின்போது ரிஜிஸ்டர் ஆபிசில் சாட்சிக் கையெழுத்தும் போட்டு,சென்னையிலிருந்து கோவைக்கு கூட்டிவந்து நண்பர்கள் மூலமாய் வீடும்,கணவனின் வேலையையும் இங்கேயே மாறுதலாக்கித் தந்தது என மளமளவென்று எல்லா ஏற்பாடுகளையும் அண்ணனே முன்னின்று செய்து தந்தான்.

அம்மாவோ இங்கு வீடுதேடிவந்து,மண்வாரித் தூற்றிப் போனாள். “நீ நாசமாத்தாண்டி போவே…”, அண்ணன்தான் “ கொஞ்சநாள் கழித்து எல்லாம் சரியாகும்.அதுவரை அம்மா அப்பாவை நீ பொருட்படுத்தாதே.”என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான்.
இப்போது அவனுக்கு சேதி தெரிந்தால் எப்படித் துடித்துப்போவான்.தங்கையின் விருப்பத்திற்காக பெற்றோரிடம் சண்டை போட்டவனாயிற்றே.வாழ்நாளெல்லாம் தேவகியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான் என்ற உறுதியை தன்கணவன் சார்பாக எடுத்துச் சொன்னவனாயிற்றே..வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்து வாழத்துடித்தவர்கள் இப்படிப்பட்ட கலவரப்புயலுக்குள் மாட்டுவார்கள் என்று அண்ணன் எதிர்பார்த்திருப்பானா..? பாவம்.., நேற்றுவரை..ஏன் இன்று காலைவரை தேவகியேகூட அப்படி நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது திக்குத்தெரியாத காட்டில் தனித்துவிடப்பட்ட குழந்தையாய் மிரண்டுபோயிருக்கிறாள்.

அடுத்தது என்ன..? என்று யோசிக்கக்கூட திராணியற்று மனம் முழுவதும் மரத்துப் போயிற்று.அவளுடைய இரு கன்னங்களிலும் ஒழுகிக் காய்ந்திருந்த கண்ணீர்த் தடங்களில்,அப்பியிருந்த புழுதியை முந்தானையால் துடைத்தவளாய் தன்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்.
எவ்வளவு நேரமாயிற்று என்று தெரியவில்லை.காலையில் இந்த அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தபோது,இருந்த மனிதர்களின் எண்ணிக்கை இப்போது பல மடங்கு பெருகியிருந்தது.
அத்தனையும் கலவரத்தில் இறந்தவர்களின் உறவு ஜனங்கள்.குல்லாவும் தாடியும் கைலியுமாய், காவிவேட்டி கறுப்பு வெள்ளை வேட்டி பேண்ட் சட்டைகளுமாய் ஆண்களும்,வண்ணவண்ணப் புடவைகளும்,உடல் மறைத்த அங்கிகளுமாய் பெண்களும், கலந்து நிரவியிருந்த அத்தனைபேரின் முகங்களிலும் ஒரேமாதிரியான இழப்பின்சோகம் மண்டியிருந்தது.
எல்லோரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் பொது எதிரியாய் வெயில் உச்சிக்கு ஏற,ஏற தேவகி அமர்ந்திருந்த மரத்தின் நிழல் குறுகியது.விலாசமாய் அமர்ந்திருந்த ஜனக்கூட்டமும் அதற்கேற்றவாறு இடைவெளியின்றி நெருக்கமானது.

“ஏம்மா..நானும் அப்போதிருந்தே பாக்குறேன்.நீ தனியா உட்கார்ந்து அழுதிட்டிருக்கிறே..சொந்தக்காரங்க யாரும் வரலையா..?”குரலில் பரிவுடன் உடல் முழுவதும் கறுப்புஅங்கியால் மறைத்திருந்த ஒரு பெண் தேவகியிடம் கேட்டாள்.

“இல்லை.எல்லாரும் வெளியூரு..தகவல் சொல்லியிருக்கு.அவங்களாலே எப்ப வரமுடியும்னு தெரியலே..”
“இங்கே வாழ்க்கைப்பட்டு வந்தியா..?”
“ஆமா”
“உன்புருஷனோட சொந்தம் யாரும் இங்கே இல்லையா..?”
“இல்லை”
அந்தப் பெண்ணின் கண்களில் லேசாசாய் மிரட்சி.ஏதோ உண்மையை யூகித்தறிந்தவள் போல..”அப்போ..இங்கே..இறந்தது…?” குரல் தயக்கத்தோடு தடைபட்டு நின்றது.மீதிக்கேள்வியை கேட்பதில் உள்ள தர்மசங்கடம் தேவகிக்குப் புரிந்தது.
“என் புருஷனைத்தான் கொன்னுட்டாங்க..”சொல்லும்போதே தேவகிக்கு குரல் அடைத்து கண்ணீர் பொங்கியது.
அந்தப்பெண் சட்டென தேவகியின் கையை ஆறுதலாய் பிடித்துக் கொண்டு, “என்னம்மா செய்யிறது,இந்தப்படுபாவிங்க எப்போப் பார்த்தாலும் பழிக்குப்பழின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வெட்டிச் சாய்ச்சுட்டே இருக்கானுங்க.நம்பளைப் போல பொம்பளைங்க,குழந்தைகள் எல்லாம் இப்படி அநாதியா தெருவிலே நிக்க வேண்டியிருக்கு..? உள்@ரிலேயே பொறந்து இங்கேயே வாழ்க்கை நடத்தறவங்களுக்கு ஏதோ ஆறுதல் சொல்லவும் காப்பாத்தவும் யாரோ நாலுபேர் இருப்பாங்க..ஆனா வெளியூரிலிருந்து பிழைக்க வந்தவங்க கதியெல்லாம் இன்னும் கஷ்டம்..,பரிவுடன் சொல்லிக்கொண்டே வந்தவள்,திடீரென்று ஆவேசமுற்றவளாய்,சற்று இரைச்சலுடன் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்த நாயாவது இதையெல்லாம் நெனச்சுப்பாக்குதா..? என்னம்மா நான் சொல்லுறது..? மதத்தைக் காப்பாத்தறேன்னு மனுஷங்களை கொன்னுபுட்டா ஆச்சா..?”
“ஹே..பாத்திமா..”ஏதோ ஒரு ஆண்குரல் அதிகாரத்தோடு, ‘வாயை மூடு’ என்ற தொனியில் ஒலிக்க,முனகிக் கொண்டே எழுந்து சென்றாள் அந்த மாது.
அவள் சொல்லிச் சென்றதைக் கேட்டபோது தேவகிக்கு ராமச்சந்திரன் சாருடைய நினைவு வந்தது.தான் ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் வகுப்பெடுத்த வரலாற்று ஆசிரியர்.அவர் ஒருமுறை சொன்னார். “மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த அதே காலம்,மேலும் இருபிரிவு ஆரியக்கூட்டம்,ஒன்று ஈரானுக்குள்ளும்,மற்றொன்று கிரீஸிற்குள்ளும் நுழைந்தது.இந்தியப் பழங்குடி மக்களிடம் போரிட்டும்,இணைந்தும் வாழ்ந்து பழகிய அந்த மக்களின் வாழ்க்கை முறை எப்படி இந்துசமயத்தின் முன்னோடியான வைதீக வேதமதத்தை உருவாக்கிற்றோ,அதே போல் ஈரானுக்குள் நுழைந்தவர்களின் சந்ததியாய்த்தான் கிறித்தவமும்,இஸ்லாமும் உருவாயிற்று.
அப்படியானால் நமக்கெல்லாம் ஒரே மூதாதையர்கள்தான்.எனவே மதத்திற்காக சண்டைபோடுவதும் கொலைபுரிவதும் கூடாது.”என்று சொன்னவர்.மேலும் இந்தியாவில் தோன்றிய மதமான பௌத்த மதத்தை உலகில் பல நாட்டுமக்கள் பின்பற்றி வரும்போது,வேறு பகுதியில் தோன்றிய இஸ்லாமையும், கிறித்துவத்தையும் இங்குள்ள மக்கள் சிலர் தழுவுவதில் தவறு ஏதும் இல்லை.எனவே மதத்துவேஷம் என்பது கூடாது…”
அன்று அவர் சொன்னது மனதில் செதுக்கிவைத்த சித்திரமாயிற்று. நினைவுகளில் மூழ்கியிருந்த தேவகியை, “ஐயோ நசீரு…”என்ற கூக்குரல் திடுக்கிடவைத்தது.
மருத்துவமனையின் பெரியநுழைவாயில் வழியே ஒரு போலீஸ் வேன் வந்து நின்றிருக்க.அதிலிருந்து ஆண்களும்,பெண்களுமாய் கதறிக் கொண்டே பிணப்பரிசோதனை அறைவாயிலை நோக்கி ஓட்டமெடுக்க,எல்லோரின் கண்களும் அவர்களையே பின் தொடர்ந்தன.தொடர்ந்து பரிதாப உச்சுக் கொட்டலும்,பாவிகள் எனத் தொடங்கிய வசவுகளும் காற்றில் கலந்து நிறைந்தன.

தேவகி இங்கு வந்து அமர்ந்தபின்,நான்கைந்துமுறை இதேபோல உறவுக் கூட்டங்களை போலீஸ்வேன் கொண்டுவந்து இறக்கிப்போயிற்று.ஒவ்வொரு முறையும் அதிலிருந்து இறங்கும் மனிதர்கள்..இப்படித்தான் கூக்குரலிட்டுக் கொண்டு,தலையிலடித்துக்கொண்டோ,வாய்விட்டுக் கதறிக்கொண்டோ, பிணவறையை நோக்கி ஓடுகிறார்கள்.அவ்வப்போது அவர்களால் உச்சரிக்கப்படும் பெயர்கள் மட்டும் வௌ;வேறாயிருக்கும்.

காலையில் “அப்படித்தான் செந்திலு..என் ராசாவே..” என்று கதறிக் கொண்டே ஓடிவந்த ஒருதாய்,பதட்டத்தாலோ பட்டினியாலோ..தடுமாறிக் கீழே விழப்போக தேவகிதான் சுதாரித்து,சட்டென எழுந்து தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.உறவு ஜனத்தில் நான்கைந்துபேர் சுற்றிக் கொள்ள சோடா வாங்கு..தண்ணி எடு..என்று ஆள்ஆளுக்கு கூவ,யாரோ ஒருவர் வெளியே ஓடிப்போக எத்தனித்து..அப்படியே நின்றார். ‘ஒரு கடையும் திறந்திருக்கவில்லை’ என்பது அப்போதுதான் உறைத்திருக்கவேண்டும்.அவர் முகத்தில் ஆத்திரமும் இயலாமையும் கொப்பளிக்க முனகிக்கொண்டே திரும்பினார்.

அதற்குள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் ஓடிப்போய் சைக்கிளில் மாட்டியிருந்த தன்பைக்குள் கைவிட்டு ஒருபாட்டில் தண்ணீரை எடுத்துவர,அதை ஒருவர் வாங்கி மயக்கமுற்ற பெண்ணின் முகத்தில் தெளித்து,வாயை திறக்கச்செய்து சற்றே புகட்டியபின்,அந்தப் பெண்ணுக்கு உணர்வு திரும்பியது.
“இந்தாங்க பாய்… நன்றி” என்று லேசான புன்னகையுடன் ஒருவர் பாட்டிலைத் திருப்பித்தந்தார்.
புpணவறைக்கு வெளியே நின்றிருந்த கூட்டம் மெதுவாக கலைந்து,நிழலுக்கு ஒதுங்கியது.தேவகி இன்னும் சற்று ஒடுங்கி உட்கார்ந்து கொண்டாள்.

“ஏனுங்க பாய்..பாடியெல்லாம் எப்பக் குடுப்பாங்களாம்..?” தேவகியிடமிருந்து சற்றுத்தள்ளி நின்றிருந்த கறுப்புவேட்டி மனிதர் கேட்டார்.பிணத்தைப் பெற்றுக் கொள்ள வந்த தேவகி உட்பட,பலரது கவனமும் அவருடைய கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தது.

மரத்திற்கு பின்புறமிருந்து பதில்குரல் வந்தது. “ எல்லாம் ஆச்சு சாமி..இன்னும் கொஞ்சநேரத்திலே யாரோ பெரிய அதிகாரி வருவாராம்.வந்தவுடனே பாதுகாப்பா எல்லா பாடியும் கொண்டுபோக ஏற்பாடு பண்ணுவாங்களாம்..”
“சொந்தஊருக்கு பாடியை கொண்டுபோறவுங்க எல்லாம் என்ன பண்றது.? ”
“எங்கே கொண்டுபோறது..அவங்கவங்க சடங்கை முடிஞ்சவரை இங்கேயே பண்ணிட்டு ஒட்டுமொத்தமா ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்கு கொண்டுபோக வேண்டியதுதான்.அங்கதான் பக்கம்பக்கமாய் எல்லா ஜாதிக்கும் இடம் ஒதுக்கியிருக்கே..”
“ஓஹோ..அப்படியா..ஏற்பாடு.?” ஏதோ சில விநாடிகள் யோசித்த கறுப்புவேட்டி மனிதர், “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டைபோடற மத்தவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா பாய்..?”அவர் குரலில் அங்கலாய்ப்பும் வருத்தமும் இழைந்தன.

“எல்லாருக்கும் ஆறடி மண்ணு தவிர கடைசியிலே சொந்தமா எதுவுமேயில்லேங்கிறது புரிஞ்சாலே போதுமே..!” அலுப்பும் சலிப்புமாக வந்தது அந்தக் குரல்.
தொடர்ந்து, “ஆமா ஐயப்பசாமியெல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு வரக்கூடாதே..”
“செத்தது நம்ம நெருங்கிய சொந்தக்காரப் பயலாச்சே..எப்படி வராம இருக்கிறது.இனி மாலையைக் கழட்டிட வேண்டியதுதான் பாய்..அடுத்தவருஷம்தான் மலைக்குப் போகனும்..” தொடர்ந்து அவர்களின் பேச்சு வௌ;வேறு திசைக்குப் பயணிக்க…”தேவகியின் கவனம் அவர்களின் பேச்சுககளிலிருந்து மீண்டது.
வெகு நேரம் ஒரேமாதிரியாக அமர்ந்திருந்ததில், கால்களில் வலி எடுக்கத் துவங்கியது.வெயிலின் உக்கிரம் கண்களைக்கூச,கைகளை தளர்த்திக்கொண்டு மரத்தின்மீது நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.பிணங்களை வெளியே கொண்டுவரும்வரை இப்படியே காத்திருக்க வேண்டியதுதான்… “கணவன் உயிரோடு இருக்கும்போது,இப்படி எதற்காகவும் தன்னைக் காத்திருக்க வைத்ததில்லை.காதலித்துக் கொண்டிருந்த ஒருவருடமும் சரி,மணம் முடித்தபின் இந்த ஆறுமாதங்களும் சரி..இரவு ஒன்பது மணிக்கு வருவேன் என்று சொல்லிச்சென்றால் பத்துநிமிடம் முன்பாகவே வந்து நிற்பான்.
காதலித்த காலத்தில் என்றால் ஒருநாளும் இவள் அவனுக்காக காத்திருந்ததேயில்லை.ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று நேரத்தையும், இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு,இவள் வேண்டுமென்றே,நாலரை மணிக்கு சென்றாலும் அவன்தான் இவளை வரவேற்றிருக்கிறான்.இப்படி எத்தனையோ முறை.!
கடந்த காலத்தை அசைபோட்டபடியே..நினைவுகளில் மூழ்கிப்போனாள்…
யாருடைய துயரத்தையும்,சந்தோஷத்தையும் பொருட்படுத்தாது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
தேவகிபோலவே எல்லோரும் எதிர்பார்த்திருந்த அந்தப் பெரிய அதிகாரி மருத்துவமனைக்கு வந்தபோது மதியம் இரண்டு மணியாகிவிட்டது.
அவரைச் சுமந்து வந்த ஜீப் நின்றவுடன்,ஜனக்கூட்டம் ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொண்டது.அவர் எல்லோரையும் கையமர்த்திவிட்டு,உடன் வந்த போலீசாரிடம் ஏதோ சொல்ல,இரண்டு போலீசார் பிணவறையை நோக்கி ஓடினர்.வேறு சில போலீசாருக்கும் ஏதோ கட்டளைகள் பிறப்பித்தார்.
உடனே அங்கு சூழ்நிலை பரபரப்பாயிற்று.பிணவறையிலிருந்து ஒரு பிணத்தை வெளியே கொண்டுவந்து புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்திற்கு அருகே இருந்த தாழ்வாரத்தில் கிடத்தினார்கள்.
மீண்டும் உள்ளே சென்று இன்னொரு பிணத்தை…,இன்னும் ஒன்று…ஆயிற்று..,மொத்தம் பதினேழு பிணங்கள்..,

உறவினர்களின் அழுகுரல்கள் உச்சத்தைத் தொட்டது.வயிற்றிலும் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அலறும் சப்தம்.அந்த மருத்துவமனை முழுக்க எதிரொலித்தது.
அந்தப்பெரிய போலீஸ் அதிகாரி;,அழுது கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தியபடியே,இறந்தவர்களைப்பற்றிய விபரங்களை தனது கையிலிருந்த நோட்டு ஒன்றில் எழுதிக்கொண்டே வந்தார்.
தேவகியின் முறையும் வந்தது. “ உங்கபேர் என்னம்மா..?”
“தேவகி”
“இறந்தது யாரு..?”
“என் புருஷன்”
“வயசு.?”
“இருபத்தெட்டு”
“பேரு..?”
“அப்துல் காதர்.”
“என்ன..என்ன சொன்னீங்க..?”
“என் கணவர் பெயர் அப்துல் காதர்..”இம்முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தேவகி.

-பொள்ளாச்சி அபி -
1998

Tuesday, October 11, 2011

கொள்ளை கும்பல் "AMWAY

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.


FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:

ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.



இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.


இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.




ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.


நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.


►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).


►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)


மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்


மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.


நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?



► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)


►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)


► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.


இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:


►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.

►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .

►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.


இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.


►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)


100 x 995 = 99500 ரூபாய்


இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.


3000 x 100 = 300000 ரூபாய்


அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).


இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.


இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.


300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)


இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.


லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.


இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.




இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்

Monday, October 10, 2011



 
 
The 2010 Woman Driver Awards:
 
 
 
he 2010 Woman Driver Awards: 

10th Place Goes to: 

cid:ABD7A332BF1B4B4DAE9A18F8746FBE42@AxelPC



9th Place 
Goes To: 

cid:48475D8ED81B417DB6432A32A34EDD3D@AxelPC


8th Place Goes To:
 

cid:6CEACC0F5BFF4F15A92B46C815BBA18D@AxelPC


7th Place 
Goes To:
cid:D8DB2BF9AE18439881EC737A8994BF6F@AxelPC


6th Place Goes
 To: 

cid:04E971B843114C0794D9CC10AC22A265@AxelPC


5th Place Goes To: 

cid:F1F063676E1947559E4A6AA95E4514E2@AxelPC
4th Place Goes To: 

cid:9012BC6EB07A43E49BF8B01AD42BC944@AxelPC
Not only a woman, but a WOMAN COP in all her official capacity!!!!

The BRONZE Medal Winner:
 
cid:D01722E0580643BB9B77D7780D97A620@AxelPC


The SILVER Medal Winner:
 

cid:68C8D5491BF845D8A5DE5C9731561522@AxelPC

YES - 
her helmet is ........... 
..............................
worn backwards .
And finally,  here is our 2010 Women Drivers Awards 
*** GOLD Medal Winner *** 


cid:3FF2102D886A4EDDA032554E1D70F0C1@AxelPC

cid:652E80E6E06E4919A96CEDA5124D5A9D@AxelPC

WOW ! ! How the...?!? 
Oh never mind.... CONGRATULATIONS ! ! 
This concludes the 2010 Women Drivers Awards Ceremony. 
Thanks to all our contestants for giving us all a reason to laugh & smile.
 
 



-- 
MS Seelan

Wednesday, May 18, 2011

சிறுத்தைப்புலி,புள்ளிமான் தோல்களுடன் ஜோதிடர் கைது.

பொள்ளாச்சி.மே.18.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பெரிய களந்தை பகுதியிலுள்ள ஜோதிடர் ஒருவரின் வீட்டில் சிறுத்தைப்புலி,புள்ளிமான் ஆகியவற்ற்pன் தோல்கள் கண்டுபடிக்கப்பட்டதையடுத்து ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இவரிடம் ஏராளமான பிராந்தி பாட்டில்கள் மற்றும் வயாக்ரா மாத்திரைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது பெரியகளந்தை.இங்குள்ள மணியக்காரர் தோட்டம் பண்ணை வீட்டில்,மூர்த்தி.55.என்பவர்,சிறுத்தைப்புலியின் தொல் மீது அமர்ந்து ஜோதிடம் பார்ப்பதாக,ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து,பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில்,வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மூர்த்தியின் வீட்டில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையில்,ஜோதிடம் பார்ப்பதற்காக மூர்த்தி அமரும் நாற்காலியில் சிறுத்தைப்புலியின் தோல் ஒன்று விரிக்கப்பட்டிருப்பதும்,யாகம் நடத்தும் இடத்தில் புள்ளிமானின் தோல் ஒன்று விரிக்கப்பட்டிருப்பதும் கண்டுபடிக்கப்பட்டது.மேலும் வனத்துறையினர் தொடர்ந்து நடத்திய சோதனையில் கடா மானின் தலையுடன் கூடிய கொம்புகள்,நட்சத்திர ஆமையின் ஓடு,மற்றும் யானையின் பல் ஆகியவையும் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர்,ஜோதிடர் மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டதில்,இவற்றை வைத்திருப்பதற்கான எவ்வித அரசு ஆவணங்களும் அவரிடம் இல்லையென்பது தெரியவந்தது.

இதனையடுத்து விலங்குகளின் பாகங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர்,வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்,ஜோதிடர் மூர்த்தியையும் கைது செய்தனர்.பின்னர் பொள்ளாச்சி நடுவர் நீதிமன்ற எண்.2.ல் ஆஜர் செய்யப்பட்ட மூர்த்தி 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

ஜோதிடர் வீட்டிலிருந்து விலங்குகளின் தோல் மற்றும் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

more vedios in youtube-sunpollachi channel


Wednesday, May 11, 2011















நீ என்ன செய்யப் போகிறாய்..? - wild life conservation.1

வனம் மற்றும் வனஉயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது உலக அளவிலான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
மனிதர்கள் இல்லாமலேயே வனமும்,வன விலங்குகளும் உயிர் வாழ முடியும்.ஆனால் மனிதர்களாக இருந்து கொண்டு,வனத்தை அழிக்கும் பணியில் ஈடுபடுவது விலங்குகளின் உரிமையில் அத்துமீறித் தலையிடுவதாகும்.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வாழ்ந்த நாட்டின் மக்கள் வேட்டைகளின் மூலமும்,சுயநலத்திற்காகவும் வனங்களை,வன உயிரினங்களை அழிப்பது ஒரு வெட்கக்கேடான செயலாக மனிதன் உணரவில்லை என்பது கவலை அளிப்பதாகும்.
வனங்களைப் பாதுகாப்பதென்பது ஏதோ கருணையினால் மட்டும் சொல்லப்படுவதில்லை.வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அனைவரும்,மிக்க மனிதநேயமுடையவர்களே. ஏனெனில்,வனங்களை அழிப்பதன் மூலம்,மனிதனின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நீர்,நிலம்,காற்று ஆகிய அவசியத் தேவைகளையும் சேர்த்தே அவன் அழித்துக்கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
உதாரணமாக,சோலைக் காடுகளில் உள்ள ஒவ்வொரு புல்லும் நமக்கான நீரைச் சேமிப்பதில் பங்காற்றுகிறது.மழைக்காலத்தில் ஒவ்வொரு சதுரஅடியிலும் உள்ள புற்கள் நீரை சேமித்து சொட்டாக விடுவதன் மூலம்,ஏற்படுகிறது சிற்றோடைகள்.அவையே பின்னர் காட்டாறுகளாகவும்,நதியாகவும் உருமாறி,மனிதனுக்கான ஆறுகளாகவும், கால்வாய்களாகவும், அணைகளாகவும், அவனது வீட்டின் குடிநீர்க் குழாய் வரை வந்து சேர்கின்றது.
இப்படி காட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் உள்ள செடி,கொடி,மரம்,ஊர்வன பறப்பன உட்பட விலங்குகள் அனைத்துமே,ஒரு சங்கிலித் தொடராக இணைந்து,தனது வாழ்க்கையோடு இணைந்து மனிதர்களுக்கான சேவைகளையும் புரிகிறது.

ஆனால் காடுகளை வளர்க்கும் சதவீதத்தைவிட,அதனை அழிக்கும் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஒவ்வொரு பகுதியில்,சமுதாயத்திற்கான வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
சுருக்கமாகச் சொல்லப்போனால்,அணுகுண்டுகளை வெடிப்பதன் மூலம் நடைபெறும் அழிவு என்பது உடனடி விளைவு.அதே போன்று காடுகளை அழிப்பது என்பது சற்று காலம் கடந்த விளைவு. ஆனால் இரண்டிலும் விளைவுகள் என்னவோ ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.
எனவேதான் வனம் குறித்த ஆராய்ச்சியாளர்களும்,தற்போது உலக அளவில் மட்டுமின்றி உள்@ர் வரை வனங்களைக் காப்பது குறித்த அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நீ என்ன செய்யப் போகிறாய்.?

Monday, May 9, 2011

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சில பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் இருப்பது கேமிரா ட்ராப் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் கேமிரா ட்ராப்பின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால்,இன்னும் சில மாதங்களில் இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து துல்லியமாக தெரியவரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.இதில் மானாம்பள்ளி,உலாந்தி,பொள்ளாச்சி,வால்பாறை மற்றும் உடுமலை,அமராவதி என ஆறு வனச்சரகங்கள் உள்ளன.இந்த வனப்பகுதிகளில் யானை,புலி,பல வகை மான்கள்,செந்நாய்,காட்டுமாடு, காட்டெருமை,சிங்கவால் குரங்கு,கரடி என பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் இந்த வனப்பகுதிகளில் உள்ள புலிகள்,யானைகள் உள்ளிட்ட விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும்.இந்தக்கணக்கெடுப்பின் போது,விலங்குகளின் எச்சங்கள்,அவற்றின் காலடித்தடங்கள்,இறந்து கிடக்கும் இரை விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டு,விலங்குகளின் எண்ணிக்கை தோராயமாக கணக்கிடப்பட்டு வந்துது.

ஆனால்,புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு மட்டும் துல்லியமான முடிவுகளைக் காட்டவில்லை.கடந்த ஆண்டு வரை புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பின்போது,அவற்றின் எச்சங்கள்,காலடித் தடங்கள், இரைவிலங்குகள் உண்ணப்பட்ட விதம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கெடுப்பு நடந்தாலும்,புலிகளின் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள புலிகளிக் காலடிச் சுவடுகளை,பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் அச்செடுத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதையும்,அதிலுள்ள மாறுபாடுகள் குறித்த விபரங்களை சேர்ப்பதன் மூலம் மட்டுமே புலிகளின் எண்ணிக்கையை, வனத்துறையினர் கணக்கிட்டு வந்தனர்.
ஆனால் நம்பகமற்ற இம்முறையின் மூலம்,புலிகளின் எண்ணிக்கை குறித்து உண்மையான விபரங்களை அறிய முடியாது என புலிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள்,அரசுக்கு தெரிவித்து வந்தனர்.மேலும் கேமிரா ட்ராப் எனப்படும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்களின் மூலம் மட்டுமே புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் போராடியதையடுத்து,கடந்த ஆண்டில்,புலிகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்ட,வனப்பகுதிகளில் கேமிரா ட்ராப் வைக்க மத்தியஅரசு அனுமதித்தது.
இதனையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட 21 இடங்களில் கேமிரா ட்ராப் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட,மீன்பாறை மற்றும் நாய்க்குன்று,உலாந்தி வனச்சரகத்தில் சின்னாறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கேமிரா ட்ராப்பில்,புலியின் படங்கள் பதிவாகியுள்ளது.

ஆண்புலிகளின் வாழிடம் சுமார் 60.ச.கி.மீ பரப்பளவும்,பெண்புலிகளின் வாழிடம் சுமார் 25.ச.கி.மீ பரப்பளவும் கொண்டது என்பதால்,தற்போது கேமிரா ட்ரர்ப்பில் பதிவான படங்களில் புலிகளின் உடம்பில் உள்ள கறுப்புப் பட்டைகளில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டு,எவ்வளவு புலிகள் எனக் கணக்கிடும் பணி நடைபெற்றுவருகிறது.

மேலும் கேமிரா ட்ராப்பின் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்னும் சில மாதங்களில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கேமிரா ட்ராப் செயல்படும் விதம்.-முதலில் புலிகளின் நடமாட்டம் இருப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்புள்ள இடங்களைத் தேர்வு செய்து கேமிரா ட்ராப்கள் பொருத்தப்படும். இரு கேமிராக்களுக்கு இடையே குறைந்தது 1.5 கி.மீ.தூரம் இருக்கும் வகையில் பொருத்தப்படுகிறது.

இவ்வகைக் கேமிராக்களுடைய லென்ஸ்களின் பார்வையில் ஏதேனும் உருவங்கள் அசைவது மற்றும் இதன் அருகாமையில் வரும் விலங்குகளின் உடல் சூட்டினையும் அறியும் வகையில் பொருத்தப்பட்டுள்ள இன்பரா ரெட் சென்சார்கள் மூலம் கேமிராக்கள் தானியங்கி முறையில் செயல்படுகிறது.
சுமார் 25 மீட்டர்கள் தூரம் வரையும் எல்லையாகக் கொண்டு இக்கேமிரா செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த எல்லையில் எந்த உயிரினம் வந்தாலும் படங்கள் பதிவாகும்.

புலிகளின் உடலில் காணப்படும் கறுப்புப் பட்டைகள் மனிதனின் கை ரேகைகளைப் போல,வேறுபாடுகளைக் கொண்டதாகும்.இதனை ஆராய்வதன் மூலம் படங்களில் இருவேறு சமயங்களில் பதிவாகும் புலிகளின் கறுப்புப்பட்டைகளைக் கொண்டு,புலிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது.

புலிகள் மட்டுமின்றி,யானைகள் உள்ளிட்ட விலங்குகள் மூலம் இக்கேமிராக்களுக்கு,பாதிப்பு வராதவகையில்,கண்மறைவாக மரங்கள் மற்றும் பாறைகளின் இடுக்குகளில்,கேமிராக்களுக்கு என வடிவமைக்கப்பட்ட இரும்புப் பெட்டிகளில் பலமாகப் பொருத்தப்படுகிறது.

Monday, March 21, 2011


சென்னை: அதிமுக வேட்பாளர்களின் புதிய பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.

இதில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். புதிய பட்டியல் விவரம்:


ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
பொன்னேரி தனி - பொன். ராஜா
திருவள்ளூர் - பி.வி. ரமணா
பூந்தமல்லி - மணிமாறன்
ஆவடி - அப்துல் ரஹீம்
அம்பத்தூர் - வேதாச்சலம்
மாதவரம் - வி.மூர்த்தி
திருவொற்றியூர் - குப்பன்
ஆர்கே நகர் - வெற்றிவேல்
கொளத்தூர் சைதை துரைசாமி
வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
திரு.வி.க.நகர் தனி - வ.நீலகண்டன்
ராயபுரம் - ஜெயக்குமார்
துறைமுகம் - பழ. கருப்பையா
ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
அண்ணா நகர் - கோகுல இந்திரா
சைதாப்பேட்டை - செந்தமிழன்
தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
மயிலாப்பூர் - ராஜலட்சுமி
வேளச்சேரி எம்.கே. அசோக்
சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் பெருமாள்
பல்லாவரம் - தன்சிங்
தாம்பரம் - .டிகே.எம்.சின்னையா
திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
செய்யூர் தனி - வி.எஸ்.ராஜி
மதுராந்தகம் தனி - கணிதா சம்பத்
உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
அரக்கோணம் தனி - சு.ரவி
காட்பாடி - அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
ராணிப்பேட்டை - முஹம்மத்ஜான்
ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்
வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
பர்கூர் - கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி
பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
மைலம் - கே.பி.நாகராஜன்
திண்டிவனம் தனி - டாக்டர் அரிதாஸ்
வானூர் தனி - ஜானகிராமன்
விழுப்புரம் - சி.வி.சண்முகம்
உளுந்தூர்ப்பேட்டை - குமரகுரு
சங்கராபுரம் - ப.மோகன்
கள்ளக்குறிச்சி தனி - பா.அழகுவேல்
ஆத்தூர் தனி - எஸ்.மாதேஸ்வரன்
ஏற்காடு - செ.பெருமாள்
ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
எடப்பாடி - கே.பழனிச்சாமி
சங்ககிரி - விஜயலட்சுமி
சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
சேலம் - தெற்கு செல்வராஜ்
வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
ராசிபுரம் தனி - தனபால்
நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
குமாரபாளையம் - பி.தங்கமணி
ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுச்சாமி
தாராபுரம் தனி - கே.பொன்னுச்சாமி
காங்கேயம் - எஸ்எஸ்என் நடராஜ்
பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம்
பவானி - பி.ஜி.நாராயணன்
அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன்
கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
உதகமண்டலம் - புத்தி சந்திரன்
மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
அவினாசி தனி - ஏ.ஏ கருப்பசாமி
திருப்பூர் வடக்கு - எம்.எஸ்.எம். ஆனந்தன்
பல்லடம் - பல்லடம் கே.பி. பரமசிவம்
கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி
கோவை வடக்கு - தா.மலரவன்
தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
கோவை தெற்கு - சேலஞ்சர் துரை
சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
பொள்ளாச்சி - முத்துக்கருப்பண்ணசாமி
உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு
ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி
நத்தம் - இரா.விசுவநாதன்
வேடசந்தூர் - ச.பழனிச்சாமி
அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
கரூர் - வி.செந்தில்பாலாஜி
கிருஷ்ணராயபுரம் தனி - எஸ்.காமராஜ்
குளித்தலை -பாப்பா சுந்தரம்
மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்

விரைவில் மற்ற வேட்பாளர்கள் விவரம்...

முன்னதாக கூட்டணிக்குக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை லவட்டிவிட்டுஇ பின்னர் அவர்களது எதிர்ப்பால் அதில் பல தொகுதிகளைத் திருப்பித் தந்துவிட்ட அதிமுகஇ தனது வேட்பாளர் பட்டியலை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார் ஜெயலலிதா.

160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதாஇ அதில் இப்போது பல தொகுதிகளை மிரட்டல் விடுத்த
கூட்டணி கட்சிகளுக்கு தந்துவிட்டார்.

இதனால் முதலில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 160 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் புதிய அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால்இ தேமுதிகவுடன் சிக்கல் நீடித்ததால் இன்றாவது இந்தப் பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்ததது.

இது போக முதல் பட்டியலில் உள்ளவர்களில் யார் யார் பெயர் காணாமல் போகப் போகிறதோ.. யாருக்கு தொகுதி மாறப் போகிறதோ என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும் ஆழ்ந்து போயிருந்தனர்.

இந் நிலையில் ஒரு வழியாக இன்று பிற்பகலில் புதிய பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பட்டியலை தனக்கே தெரியாமல் மன்னார்குடி வகையறா தான் வெளியிட்டதாக கூட்டணிக் கட்சிகளுக்கு நொண்டி சாக்கு சொல்லி நகைப்புக்கு உள்ளானார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்இ இப்போதைய அதிமுக பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் மனு தாக்கல் செய்ய வேண்டாம். திங்கள்கிழமை புதிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த 11 மணி முதல் 1 மணி என்பது ஒரு ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரமாம்.

இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு.!

பொள்ளாச்சி.மார்ச்.21.கோவை மாவட்டம் காந்pதிநகர்ப் பகுதியில்,குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால்,அப்பகுதியில் கடுமையான சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.மேலும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தொற்றுநொய்களுக்கும் ஆளாகிவருகின்றனர்.இப்பிரச்சினைக்கு தக்க தீர்வு காண அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைப் பகுதியில் ஆடு,மாடு இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் கடைகளும் ஏராளமாக உள்ளன.இக்கடைகளில் வாராந்திர நாட்களில் செய்யப்படும் விற்பனையைவிட ஞாயிற்றுக்கழமைகளில் இறைச்சி விற்பனை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்நிலையில்,வெட்டப்படும் இறைச்சியின் கழிவுகளை,சரியான முறையில் அப்புறப்படுத்த,இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு போதிய வசதிகள் நகராட்சியால் செய்து தரப்படவில்லை.மேலும்,கடைகள் அமைந்துள்ள வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக ஈடுபடுவதில்லை.

இதனால்,இறைச்சிக் கழிவுகள்,வால்பாறை பகுதியிலுள்ள காந்திநகர் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகாமையில் கொட்டப்படுகிறது.தொடர்ந்து கொட்டப்பட்டுவரும் இறைச்சிக்கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படு;கிறது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்கள் பெரம் மனஉளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்.

மேலும் குடிநீர் ஆதாரங்களுக்கு அருகாமையிலேயே கொட்டப்பட்டு வரும் இறைச்சிக்கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் புழுக்களும்,தொற்றுநோய்க்கிருமிகளும்
இப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையான தொற்றுநொய்களையும் ஏற்படுத்தி வருகிறது.இப்பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வுகாண நகராட்சி நிர்வாகத்தை பலமுறை வற்புறுத்தியும் இதுவரை தக்க நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேட்டி-ராமலட்சுமி
எனவே விரைவில் இப்பிரச்சினைக்கு தக்க தீர்வு காண தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில்,வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப்பணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில்,விலஙிகுகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று காலை முதல் துவங்கியது.தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் இப்பணியில்,வனத்துறை ஊழியர்கள்,தன்னார்வத் தொண்டர்கள் உட்பட சுமார் 400பேர் பல குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டுள்ளனர்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில்,புலி,யானை,வரையாடு,கரடி,பல்வேறு வகை மான்கள் உள்ளிட்ட,விலங்குகள் ஏராளமான அளவில் வசித்துவருகின்றன.

இந்நிலையில்,வருடம்தோறும் வனவளம் குறித்து அறிந்து கொள்வதற்காக, விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம்.இதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி,வால்பாறை, மானாம்பள்ளி,உலாந்தி,மற்றும் உடுமலை,அமராவதி ஆகிய வனச்சரகங்களில் இன்று முதல் விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

தொடர்ந்து 3 தினங்கள் வரை நடைபெறும் இக்கணக்கெடுப்புப் பணியில் வனத்துறை ஊழியர்கள்,தன்னார்வத் தொண்டர்கள்,விஞ்ஞானிகள்,வனவிலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுமார் 958 சதுர.கி.மீ பரப்பளவையும் பல்வேறு பகுதிகளாக,நேர் கோட்டுமுறையில் பிரிக்கப்படுவதையடுத்து,இவ்வழியே கணக்கெடுப்புக் குழுவினர் பயணிக்கின்றனர்.அப்போது வழியில் தென்படும் தாவரஉண்ணிகள் மற்றும் மாமிசஉண்ணிகள் ஆகியவற்றை நேரடியாக காண்பது குறித்தும்,அவற்றின் எச்சங்கள் மற்றும் காலடித்தடங்கள்,உண்ணப்பட்ட இரைகள் ஆகியவற்றைக் குறித்தும் தயாரிக்கப்படும் குறிப்புகளின் அடிப்படையில் இக்கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

மேலும்,வருடம்தோறும் நடைபெறும் இக்கணக்கெடுப்புப் பணியின் மூலம் வனப்பகுதிகளில் உள்ள தாவரங்களின் செழுமை மற்றும் விலங்குகளின் பெருக்கம் ஆகியவை கண்ணகாணிக்கப்படுவதாகவும், இவற்றின் எண்ண்pக்கை கூடுவது அல்லது குறைவதற்கேற்ப மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னர்வத் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பேட்டி- தங்கராஜ் பன்னீர் செல்வம்-வனச்சரகர்
vedios in youtube- sunpollachi-anaimalai tiger reserve senses-

Sunday, February 6, 2011

கேரளா-தமிழ் மொழிச்சிறுபான்மைச் சட்டங்கள்
உரிமைப் போராட்ட மாநாடு.!

பொள்ளாச்சி.பிப்5. தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மொழிச் சிறுபான்மைச்சட்டங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த கேரளஅரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி,கேரளமாநிலம் கொழிஞ்சாம்பாறையில், உரிமைப்போராட்ட அறிவிப்பு மாநாடு நடைபெற்றது.கேரளமாநிலத் தமிழ் வளர்ச்சிப்பணி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் பல்வேறு தமிழ்அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கடந்த 1956.ஆம் ஆண்டு,கேரளமாநிலம் உருவாக்கப்பட்டபோது மத்திய, மாநிலஅரசுகள்,தமிழ்மொழிச் சிறுபான்மை மக்களுக்கு சட்டரீதியாக உரிமைகளை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டது.கேரள-தமிழக எல்லைகளில் வாழும் பொதுமக்களில்,15 சதவீதம் பேர்,தமிழர்களாக இருந்தால்,அது மொழிச் சிறுபான்மை தமிழ்ப் பகுதி என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
இப்பகுதிகளில் தமிழும் ஆட்சிமொழியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,கோவைமாவட்டத்தின் அருகாமையில் இருக்கும் கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள கொழிஞ்சாம்பாறை,சித்தூர்,கோபாலபுரம், கோவிந்தாபுரம்,எருத்தேன்பதி,வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில்,15 சதவீதம் முதல்,90 சதவீதம் வரை தமிழர்கள் வசித்துவருகின்றனர்.
இப்பகுதிகளில் பெரும்பான்மையாக தமிழர்கள் வசித்துவருவதால்,கேரளஅரசு பல்வேறு நிலைகளிலும்,தங்களைப் புறக்கணிப்பதாக அங்குள்ள தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ப்ளஸ்.டூ மாணவர்கள் தமிழகத்தில் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்போது,கேரளத்தில் உள்ள மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற பல ஆண்டுக் கோரிக்கையை,கடந்தமாதம் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கேரளஅரசு நிறைவேற்றியுள்ளது.ஆனால் தமிழ்மொழிச் சிறுபான்மைக்குரிய மேலும் பல உரிமைகள் நிறைவேற்றப் படவில்லை என்றும் கேரளாவில் நடைபெறும் கல்லூரித் தேர்வுகள் தமிழில் எழுதவும்,கல்விநிறுவனங்களில் ஐந்து சதவீத இடஒதுக்கீடு இருப்பதை நடைமுறைக்கு கொண்டுவரவும்,அரசுப்பணித்தேர்வு மீண்டும் தமிழில் நடத்தவும் வேண்டும் என்பதுடன் மொழிச்சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் தமிழ்மொழி தெரிந்தவர்களாகவும்,அலுவலகப் பெயர்கள் தமிழிலும் இருக்கவேண்டும். வாக்காளர் பட்டியல்,வாக்குச்சீட்டுகள், ரேஷன்கார்டுகள் ஆகியவை தமிழில் இருக்கவேண்டும்.தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என சான்றிதழ் வழங்கப்பட்டவர்களுக்கு,கேரளத்திலும் சான்றிதழ்களை வழங்கவேண்டும் என்பதும் இவர்கள் கோரிக்கையாக உள்ளது.
பேட்டி-4 மற்றும்5-விக்டர்சார்லி-கேரளமாநில தமிழ்வளர்ச்சிப்பணி இயக்கம்.
அதேபோல், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலேயே,இப்பகுதி விவசாயிகளுக்கு போதுமான நீர்ப்பாசன வசதிகளும் செய்யப்படவில்லை என்றும்,இதனை இப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும்,சித்தூர் மற்றும் கொழிஞ்சாம்பாறையிலிருந்து கோவை, பொள்ளாச்சிபகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கவேண்டும். மன்னார்;காட்டிலிருந்து அகழி, ஆனைகட்டி வழியாகவும்,கொல்லங்கோட்டிலிருந்து கோவிந்தாபுரம் வழியாகவும் பேருந்துகள் இயக்க கேரளஅரசு முன்வரவேண்டும் என்றும் இம்மாநாட்டின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
visuals in youtube- sunpollachi-kerala-mozi sirupaanmainarin urimai poraatta maanaadu


Monday, January 31, 2011

நிலமீட்சிப் போராட்டம்-சாலைமறியல்
தா.பாண்டியன் உள்ளிட்ட 700 பேர் கைது.!
பொள்ளாச்சி.ஜன.27. கடந்த 1981.ல் கையகப்படுத்தப்பட்டு,இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலத்தை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும்,இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தியும்,கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிலமீட்சிப் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்pன் போது சாலைமறியலில் ஈடுபட்ட,இ.கம்ய+.மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நில மீட்சிப் போராட்டம் இன்று நடைபெற்றது.கட்சியின் மாநிலச்செயலாளர் திரு.தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.லிங்கம்,மற்றும் கோவைமாவட்ட செயலாளர்கள் சு.பழனிச்சாமி, கே.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 1981.ஆம் ஆண்டு,பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பகுதிகளில் உள்ள சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால் இதுவரை அந்த நிலங்கள் தனியார் வசமிருந்து மீட்கப்பட்டு,பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.எனவே அதனை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும்,இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்தவேண்டும் என்றும் இப்போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இதற்காக ஆனைமலைபகுதியில் குவிந்த தொண்டர்கள்,ஒடையகுளம் பகுதியில் உள்ள நிலத்தை ஆக்ரமிப்பதற்காக,ஆனைமலையிலிருந்து ஊர்வலமாக செல்லத் துவங்கினர்.இதனை வழியிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
ஆனால் போராட்டத்தைக் கைவிட மறுத்த இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர்,தா.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து தா.பாண்டியன் மற்றும் 100.க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட போராட்டக்குழுவினரை,கூடுதல் எஸ்.பி.திரு.அண்ணாதுரை தலைமையில்,சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
சுமார் 700.க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கூடி கோரிக்கையை வலியுறுத்தி,சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பொள்ளாச்சி-ஆனைமலை சாலையில் சுமார் இரண்டுமணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
visuals in youtube-communist party of indiapollachi

Thursday, January 13, 2011

P.A.P திட்ட அலுவலகத்தில் விவசாயிகள் என்ற பெயரில் கலாட்டா.!


பொள்ளாச்சி.ஜன.12.கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட,காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்காக,ரூ.184.5 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது.இதற்காக வந்திருந்த வந்திருந்த ஒப்பந்ததாரர்களை,விவசாயிகள் என்ற பெயரில்,பி.ஏ.பி.திட்ட அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பி.ஏ.பி.எனப்படும் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்காக,தமிழகஅரசு ரூ.184.5.கோடியை ஒதுக்கியுள்ளது.மூன்று கட்டங்களாக நடைபெறும்,இப்பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டதையடுத்து,தமிழகம்,ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒப்பந்தாரர்கள் 21 பேர்,தங்கள் ஒப்பந்தங்களை இன்று பி.ஏ.பி.திட்ட அலுவலகத்தில் அளிப்பதற்காக வந்திருந்தனர்.
பி.ஏ.பி.திட்ட கண்காணிப்புப் பொறியாளர் ரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது,விவசாயிகள் என்ற பெயரில் நுழைந்த 10.க்கும் மேற்பட்டோரில் சிலர் திமுக கரைவேட்டியுடன் வந்தது மட்டுமின்றி,பெரும்பாலான ஒப்பந்ததாரர்களை,தனியே அழைத்துச்சென்று பேசினர்,பின்னர் அவர்களை மனுச் செய்யவிடாமல் தடுத்து மிரட்டினர்.மேலும் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்ற ஒப்பந்ததாரை, அடையாளம் தெரியாத சிலர் தாக்கியதில் அவர் லேசான காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து,பி.ஏ.பி.திட்ட அலுவலக அதிகாரிகள் கொடுத்த,புகாரின்பேரில், டி.எஸ்.பி.முத்தழகு தலைமையில்,சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கலாட்டாவில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.
ஓப்பந்ததாரர்கள் தாக்கப்பட்டது மற்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, விவசாயிகளாக வந்தவர்களிடம் விசாரித்தபோது,கடந்த முறை காண்டூர் கால்வாயில் பணிகளை மேற்கொண்ட சிலர்,ஒழுங்காக செய்யாமல் போனதால்,கால்வாயில் பழுதுகள் ஏற்பட்டன என்றும்,அதனால் அதனை முறைப்படுத்துவதற்காக விவசாயிகள் என்ற முறையில் வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால்,ஆரம்பம் முதலே,குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரரை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு மற்றவர்களை மிரட்டியும்,தாக்க முற்படுவதுமாகவும் இருந்ததால்,ரூ.184.5 கோடிக்கான டெண்டரை மொத்தமாக ஒருவரே சுருட்டுவதற்கான முயற்சிகளே தெரிந்தது.யார் அந்த வி.ஐ.பி. என்பதற்கான விடையை மட்டும் விவசாயிகளாக வந்த பொள்ளாச்சி,சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுகவினர் தெரிவிக்கவில்லை.
vedios in you tube- sunpollachi