pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Saturday, October 24, 2009

வால்பாறையில் ஆர்ப்பாட்டம்

பணி பாதுகாப்பு கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.!

பொள்ளாச்சி.அக்.24 கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியனுக்கும்,14.வது வார்டு உறுப்பினர் தன்ராஜுக்கும் சான்றிதழ்கள் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிவடைந்தது.இதனையடுத்து வட்டாட்சியர் கொடுத்த புகாரின்பேரில் தன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து தன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.இதே போல்,தன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் வட்டாட்சியர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் தாக்கப்பட்டதைக் கணடடித்தும்,அரசு ஊழியர்களான தங்களுக்கு பணியின்போது தக்க பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தியும், வால்பாறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை வட்டாட்சியர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம்,தபால்துறை ஊழியர்கள் சங்கம்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அரசுஊழியர்களாக உள்ளவர்களுக்கு பணியின் போது தக்கபாதுகாப்பு வழங்கவும், அரசியல்வாதிகளால் தங்கள் பணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையிலும்,தமிழகஅரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டதோடு,கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டது.

Monday, October 19, 2009

கிணத்துகடவு -மயிலம் தீபாவளி



பொள்ளாச்சி.அக்.18. நாடுமுழுவதம் ஒரே நாளில் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே,கிணத்துக்கடவையடுத்துள்ள வடசித்தூரில் மட்டும் இரண்டு நாள் கொண்டாட்டமாக விளங்குகிறது.இவ்வாறு இரண்டாவது நாளில் கொண்டாடப்படும் தீபாவளியை மயிலந்தீபாவளி என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ளது வடசித்தூர்.நாடு முழுவதும் ஒரேநாள் மட்டும் கொண்டாடப்படும் தீபாவளிப்பண்டிகை இங்கு மட்டும் இரண்டு நாள் கொண்டாடுவது தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

மயிலந்தீபாவளி என்றழைக்கப்படும் இரண்டாவதுநாள் கொண்டாட்டத்தின்போது தேர்த்திருவிழாவைப் போன்று இங்கு குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மைக்கடைகள் முதல் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களாக தூரி,ராட்சதராட்டினம் வரை ஏராளமான அம்சங்கள் இங்கே அமைக்கப்படுகின்றன.

காலை முதல் உறவினர்கள் வருகையோடு துவங்கும் மயிலந் தீபாவளி,மதியம் கறிவிருந்து,மாலையில் கொண்டாட்டம் என களை கட்டுகிறது.இங்கு வசிக்கும் ஒருபிரிவினர்,அமாவாசை நாளில் அல்லது செவ்வாய்க்கிழமை வரும் தீபாவளியன்று அசைவம் சாப்பிடாத பழக்கம் உடையவர்களாதலால் அதற்கு அடுத்த நாள் அசைவம் சாப்பிடுவதும்,ஊரிலுள்ள உறவினர்களையெல்லாம் அழைத்து விருந்து வைப்பதுமாக கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மயிலந் தீபாவளி,தற்போது வடசித்தூருக்கு மட்டுமல்ல,சுற்றுப்புறப்பகுதிகளிலுள்ள 10.க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சாதிமத வேறுபாடின்றி,பொதுவான திருவிழாவாக மாறியிருப்பது மயிலந் தீபாவளியின் சிறப்பாக விளங்குகிறது.

Saturday, October 17, 2009

விழியற்றவர்கள் மீது விழிப்புணர்வு தேவை .!




பொள்ளாச்சி .அக்.17-பிறவிக்குறைபாடு,நோய்வாய்ப்படுவது அல்லது விபத்திற்குள்ளாவது போன்ற காரணங்களால் தங்களது பார்வைத்திறனை இழந்து வாழ்பவர்கள் மீது அரசுக்கும்,அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவையென பார்வையற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றுத்திறன் கொண்டவர்கள் என்றழைக்கப்படுபவர்களில் ஒரு பகுதியாக உள்ள, கண்பார்வையற்றேவர்களுக்கு சப்தமும்,தொடு உணர்ச்சியுமே இருகண்களாக உள்ளன.
விழியில் ஒளி இல்லை என்ற கவலையற்று வாழததுணிந்த இவர்கள்,தங்கள் அன்றாட வாழ்க்கையில் பார்வையுள்ள மற்றவர்களால் படும் துன்பமும், சிரமங்களும் ஏராளம் என பட்டியலிடுகின்றனர்.

பேருந்துகளில் தங்களுக்கான இருக்கைகளை தர மறுப்பது,தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் செலவுகளுக்காகவும்,மூன்று வேளை உணவுக்காகவும்,பிச்சையெடுக்காமல்,ஒரு தொழில் செய்யும் முனைப்போடு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்காமல் அரசுப்பேருந்துகளில் கூட லக்கேஜ் எனப்படும் சுமைக்கட்டணம் வசூலிப்பது,
விழியற்றிருப்பவர்களுக்கு இன்னொரு கால்போலவும்,மற்றொரு கைபோலவும் தணையாக இருக்கும் ஊன்றுகோல்,விழித்திருப்பவர்கள் மீது தவறுதலாகப்பட்டு விட்டதற்காக அவர்கள் வீசும் வசைச்சொல்லை கேட்டுக்கொள்வது, என்று பொதுமக்களிடையே அன்றாடமும் இவர்கள் பெறும் அனுபவங்களின் பட்டியல் நீள்கிறது.

இதுமட்டுமின்றி வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது இவர்களைப் பொறுத்தவரை குதிரைக்கொம்பு என்கிறார்கள்.காரணம் பார்வையற்றவர்களால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க முடியாது என்று வீட்டுஉரிமையாளர்கள் மறுத்துவிடுவதும்,தட்டிக்கழிப்பதும்தான் என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும்,அவ்வப்போது ரேஷன் கார்டுகள் குறித்து அரசு அறிவிக்கும் திட்டங்கள்,மாற்றங்கள் குறித்து நாளிதழ்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் இவர்களுக்கு படிக்கத் தெரியாத காரணத்தால்,தங்கள் கவனத்திற்கு வருவதில்லை என்றும்,அதனை பின்னர் செவிவழித் தகவல்களாக அறிந்துகொண்டு,ரேஷன் கார்டுகளை புதிதாக பெறவோ,அல்லது பழையதைப் பதிவு செய்யவோ அரசு அதிகாரிகளை அணுகினால்,அங்கு தாங்கள் படும் துன்பங்களும்,அலைக்கழிப்புகளும் பரிதாபகரமானது என்றும், இதேபோல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை பெறுவதிலும் இதேபோன்ற சிரமங்கள் நீடிக்கிறது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் மாநிலம் முழுவதிலும் பயணம் செய்ய இலவச பஸ்பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் இவர்களுக்கான மாதஉதவித்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உள்ளது.ஆனால் தமிழகத்தில் ரூ.நானூறு மட்டுமே வழங்கப்படுகிறது.அந்த மாநிலஅரசு வழங்குவதுபோன்ற சலுகைகளை தமிழகஅரசும் வழங்கவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
வேலை வாய்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வழங்க அரசு உத்தரவிருந்தாலும்,அது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பதும்,இதனால் பார்வையற்றிருந்தாலும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் படும் துன்பமும் தொடர்கிறது.

புhர்வையில்லை என்ற ஒரு குறையிருந்தாலும் சராசரி மனிதர்களைப் போல வாழவேண்டும் என்ற இவர்களின் நம்பிக்கையை மதிக்கும் வகையில்,விழியிழந்த இவர்களைக் குறித்து,அரசு, அரசுஅதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழப்புணர்வுதேவை என்பதே இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Monday, October 12, 2009

டாப்ஸ்லிப் - யானைகள் தினம்.!

யானைகள் தினம்.!

பொள்ளாச்சி.அக்.11 காட்டின் வளம் குறித்தும்,காட்டுவிலங்குகளின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் வனத்துறை சார்பில்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்ஸ்லிப்பில், யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

புவி வெப்பமடைவதால் ஏற்படும் மாற்றங்கள்,அதனால் மனிதர்களுக்கு எதிராக இயற்கை வெளிப்படுத்தும் சீற்றங்கள்,அதன் விளைவாக ஏற்படும் அழிவுகள் என,உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் நிலையில்,இயற்கைக்கு ஆதரவாகவும்,அதனைப் பாதுகாப்பதிலும் மனிதர்கள் இணைந்து செயலாற்றவேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது.

ஆனால்,கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் அன்னையர் தினம்,தந்தையர் தினம்,முதியோர் தினம்,மற்றும் காதலர் தினம்; உட்பட பல்வேறு அம்சங்களை குறிக்கும் வகையில் சிறப்புதினங்கள் கொண்டாடப்பட்டு வருவதைப்போல்,மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவையான இயற்கையையும்,இயற்கையை செழிப்பாக வைத்திருக்கும் விலங்குகளையும் நினைவு கூறும் தினங்கள் கொண்டாடப்பட்டாலும்,அதற்கு போதிய அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதே இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

எனவே இதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும்,இது குறித்த செய்திகள் பொதுமக்களிடையே கொண்டு செல்லப்படும் வகையிலும் டாப்ஸ்லிப்பில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டதோடு,பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இவ்வாறு நடத்தப்படும் விழாக்களினாலேயே தங்களுக்கு வனம் மற்றும் விலங்குகள் குறித்த பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்கள் nதிரிய வருகிறது என்றும்,இது பயனுள்ளதாக இருக்கிறது என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனா
இயற்கையை பாதுகாப்பது என்பது நமது சந்ததிக்கான சொத்துக்களையும் செல்வங்களையும் சேர்ப்பது போன்றது என்று வலியுறுத்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரான திரு.சமயமூர்த்தி,இந்த உலகத்தில் வாழ்வதற்கு மனிதர்களுக்கு உள்ள உரிமைகளைப்போலவே,விலங்குகளும் வாழ்வதற்கு உரிமையுள்ளது என்றும்,அந்த உரிமைகளை நாம் மதித்தால் மட்டுமே,நமது எதிர்கால சந்ததியினரும் பயன்பெறமுடியும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரான திரு.சமயமூர்த்தி தனது கருத்தை தெரிவிக்கிறார்.

இயற்கையை ரசிக்கும் வாய்ப்பை பெறுபவர்கள்,அதை வெறும் பொழுது போக்காக மட்டுமே எண்ணாமல்,மனித வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கும் வுpலங்குகளையும்,வனங்களையும் கொண்ட இயற்கையை பாதுகாப்பதில் நமது பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதையும்,முடிவு செய்து கொள்ளவேண்டும்.மக்களின் நம்பிக்கைகளுக்கும்,செயல்பாடுகளுக்கும் ஏற்ற விதமாக திட்டங்கள் தீட்டப்படும்போது அது வெற்றிபெறுகிறது என்று கூறும் கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத், விலங்குகள் உட்பட இயற்கையை அழிப்பதன் மூலம் செய்யப்பட்டு,விற்பனைக்கு வரும் பொருட்களை நாம் வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

Wednesday, October 7, 2009

ஹெல்மேட் விழிப்புணர்வு ஊர்வலம்.

ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி.!

பொள்ளாச்சி.அக்.7. ஹெல்மெட்டின் அவசியம் குறித்தும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம்,காவல்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து,விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த சுமார் 200.க்கும் மேற்பட்டோர் அனைவரும் ஹெல்மெட் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து விதகளை பொருட்படுத்ததாமல் செல்லும் வாகன ஓட்டிகள்,விபத்தில் சிக்குவதும்,தலைக்கவசமாகிய ஹெல்மேட் அணியாததால் உயிரிழப்பதும், வாடிக்கையாகி வருகிறது.

வுpபத்துகளை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம்,காவல்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து இன்று ஊர்வலம் நடத்தின.

மகாலிங்கபுரம் பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்லத்தை காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் தங்கதுரை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் போக்குவரத்து விதிகள் மற்றும் தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் 200.க்கும் மேற்பட்டோர் ஹெல்மேட் அணிந்து தங்கள் இருசக்கர வாகனத்துடன் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி நகரின் முக்கியவீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.பின்னர்,அங்கு நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து விதிகளை மதிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.


Saturday, October 3, 2009

ஆதரவற்றோர் மறுவாழ்வு மையம் துவக்கம்



ஆதரவற்றோர் மறுவாழ்வு மையம் துவக்கம்.!

பொள்ளாச்சி.செப்.30 தனியொரு மாணவரின் முயற்சியால் அவர் படிக்கும் கல்லூரியிலேயே ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.மேலும் கல்லூரிகள்தோறும் இது போன்ற மையங்கள் துவங்கவேண்டும் என்றும் அவர் தனது ஆவலை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி இறுதியாண்டு படித்து வருபவர் உதயகுமார். ஆதரவற்றோருக்கு ஏதேனும் ஒரு வகையில் மாணவர்கள் உதவி செய்யவேண்டும் என்ற தனது ஆவலை அவர் படிக்கும் கல்லூரியின் மாணவ மாணவியரிடையே தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

இதனையடுத்து உதயகுமாரின் கோரிக்கையை ஏற்ற கல்லூரி நிர்வாகம் அளித்த அனுமதியை அடுத்து,ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.

உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் திரு.வித்யாகர் இம்மையத்தை துவங்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் முன்னிலையில் துவங்கப்பட்ட இம்மையத்தின் மூலம் ஆதரவற்றோருக்கான
பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும்,வரும் ஆண்டுகளில் இக்கல்லூரியில் பயில வரும் மாணவர்களும் தொடர்ந்து இவ்வமைப்பினை செயல் படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும் மாணவர் உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்த அமைப்பின் மூலம் செய்யப்படும் உதவிகளுக்கு தாங்களும் உறுதுணையாக இருப்போம் என மற்ற மாணவர்களும் தெரிவித்துள்ளனர். mcet