மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா.!
பொள்ளாச்சி.மார்ச்.17 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 100.க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 2.ஆம் தேதி சக்திகும்ப ஸ்தாபனத்துடன் துவங்கியது.இதனையடுத்து பூவோடு வைத்தல்,தீர்த்தம் கொண்டுவருதல்,உட்பட பல்வேறு சிறப்புபூஜைகளும்,அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.
இதனையடுத்து விழாவின் சிறப்புஅம்சமான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று இரவு முதல் வளர்க்கப்பட்ட குண்டத்திற்கு,இன்று காலை சிறப்புபூஜைகள் செய்யப்பட்டதையடுத்து,குண்டத்தில் இறங்குவதாக வேண்டுதல் செய்திருந்த 100.க்கும் மேற்பட்ட பக்தர்கள்,மாகாளியம்மன் குறித்த சரணகோஷத்துடன்,வரிசையாக குண்டத்திலிறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஊத்துக்குளி முன்னாள் பேரூராட்சித்தலைவர் யு.கே.கிருஷ்ணசாமி,கோவிலின் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் உட்பட,ஊத்துக்குளி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.மேலும்,இப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளாக வந்திருந்த அயல்நாட்டவர் சிலரும் பார்வையாளர்களாக இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையப் போலீசார் பாதுகாப்புபணிகளை மேற்கொண்டனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago