pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, December 31, 2009

2011-புத்தாண்டு செய்தி ..!












Subject: A true role model

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள்,இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப,எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி,அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

நன்றி........ ஆனந்த விகடன்

We are proud of you

Tuesday, December 29, 2009

சந்தன கட்டைகள் பறிமுதல்.! ஒரு பெண் கைது..!








































ரூ.5 லட்சம் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள் ரொக்கம் பறிமுதல்.!
கடத்தலுக்கு உடந்தையான பெண் கைது.!
பொள்ளாச்சி.டிச.29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடு;த்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலிருந்து கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள்,ரொக்கம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள வனத்துறையினர்,கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய இருவரைத் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.இங்குள்ள குழிப்பட்டி பகுதியிலிருந்து ஆழியாறு புளியங்கண்டி வழியாக சந்தனக்கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனையிட முயற்சித்தபோது அந்தக்கார் நிற்காமல் சென்றது.
இதனையடுத்து பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில் அக்காரினை விரட்டிச்சென்ற வனத்துறையினர் சங்கிலிப்பள்ளம் என்ற இடத்தில் அதனை மடக்கிப்பிடித்தனர். அப்போது காரினுள் இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் மாவடப்பை சேர்ந்த குமார் ஆகியோர் தப்பியோடிவிட்டனர்.
காரினுள் இருந்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணைக் கைதுசெய்த வனத்துறையினர்,காருக்குள் சோதனையிட்டபோது 5 மூட்டைகளில் இருந்த,ரூ.3 லட்சம் மதிப்புள்ள 90 கிலோ சந்தனக்கட்டைகளும்,ரொக்கப்பணமாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரமும் இருந்தன. இதனையடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள் தப்பியோடிய வெங்கட்ராமன் மற்றும் குமார் ஆகியோரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
சந்தனக்கட்டைகள் கடத்தல் சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Monday, December 28, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்..!-கவிஞர்.செ.காளிமுத்து

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை
தனக்குள் ஏந்திக் கொண்டு-பிறக்கும்
புத்தாண்டுக்குப் பெருமை..!

தமிழுக்காய் பிறக்கும் ஆண்டு
தமிழ்ச்சான்றோர்க்கு-மேலும்
சிறப்பைச் சேர்க்கும் புத்தாண்டு

ஒப்பாரும்,மிக்காருமில்லாத
நாட்டை கனவாய்க்
கண்ட கம்பனுக்கும்,

கண்ணகியின் புரட்சியை
காவியமாய் படைத்திட்ட
இளங்கோவிற்கும்,

முத்தமிழ் வளர்த்த ஈசனிடம்
உண்மைக்காய் வாதிட்ட
புலவர் நக்கீரனுக்கும்

இருவரிக் குறளில்
எழுகடல் பொருள் தந்த
வள்ளுவனுக்கும்

பறையருக்கும்,புலையருக்கும்
விடுதலை வேண்டிய
மகாகவி பாரதிக்கும்,

ஓடப்பரையெல்லாம்
உதையப்பராக்கிய
பாவேந்தன் பாரதிதாசனுக்கும்
பெருமை சேர்க்கும்..

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை
தனக்குள் ஏந்திக் கொண்டு-பிறக்கும்
புத்தாண்டுக்குப் பெருமை..

தமிழால் பெருமையுறும்
புத்தாண்டு..,தமிழராய்
வாழ்வதில் பெருமை
சேர்க்கும் புத்தாண்டு..

இப்புத்தாண்டும்,தமிழும்போல
இணையட்டும் உம்வாழ்வில்
செல்வமும் நலமுமென..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
















புதுகோட்டை
கவிஞர் .செ.காளிமுத்து
போக்குவரத்து காவல் நிலையம்
பொள்ளாச்சி -கோவை மாவட்டம்.

Thursday, December 24, 2009




















wish you happy x.mas & happy new year-2010

Sunday, December 20, 2009

மர அறுவை ஆலையில் தீ.!பல லட்சம் மதிப்பிலான மரங்கள்,இயந்திரங்கள் சாம்பல்.!

மரஅறுவை ஆலையில் தீ.
பல லட்சம் மதிப்பிலான மரம் மற்றும் இயந்திரங்கள் சாம்பல்.!

பொள்ளாச்சி.டிச.௨௦ கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் மரஅறுவை ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பல லட்சம் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாயின.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளியில் ஏராளமான மர ஆறுவை அலைகள் உள்ளன.இந்நிலையில் இன்று மாலை-௨௦.௧௨.௦௯ அங்குள்ள தனியாருக்கு சொந்தமான மரஅறுவை ஆலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனைக்கண்ட மரஅறுவை ஆலையின் காவலாளி கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் சுமார் ௨ மணிநேரப்போராட்டத்திற்கு பிறகே தீயை கட்டுப்படுத்த முடிந்தது.இந்த இடைவெளியில் ஆலைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான தேக்கு உட்பட பல்வேறு வகையான மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையப் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இத்தீவிபத்திற்கு காரணம் மின்கசிவாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மரஅறுவை ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

வால்பாறை -தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு
மற்றும் நிலம் வழங்க வலியுறுத்தி தேயிலை தினவிழாவில் தீர்மானம்.!

பொள்ளாச்சி.டிச.20 கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற சர்வதேச தேயிலை தினவிழாவில்,தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,குடியிருக்க வீடு மற்றும் விவசாயம் செய்வதற்காக இலவசநிலம் வழங்க மத்திய மாநிலஅரசுகள் முன்வரவேண்டும் என்பதுட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று-20.12.09-சர்வதேச தேயிலை தினவிழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு,பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேலு தலைமையில் காந்தி சிலை வளாகத்திலிருந்து புறப்பட்ட தொழிலாளர்கள் பேரணி,பொதுக்கூட்டம் நடைபெறும் அண்ணா சீரணி அரங்கில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் புதுடெல்லி இந்திய தொழிலாளர் சம்மேளன இயக்குனர் ஜான்,திட்டஇயக்குனர் பல்லவி மான்சிங்,மேற்குவங்காள தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சித்ததேவ்,அசோக்கோஷ் மற்றும் வால்பாறை தொழிற்சங்க தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வுpழாவில் பலஆண்டுகாலமாக தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள்,தோட்ட நிர்வாகம் வழங்கும் அடிப்படை வசதிகளில்லாத மிகச்சிறிய வீடுகளிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் ஆங்கிலேயர் காலத்திலிருந்து தோட்டஅதிபர்களின் கீழ் கொத்தடிமைகளாகவே வாழவேண்டியுள்ளது எனவும்,சொந்தநாட்டு குடிமக்களாக உள்ள தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் கடமை அரசுகளுக்கு உள்ளது என்றும் இக்கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
புpன்னர்,அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் விவசாயம் செய்வதற்குரிய நிலங்கள் ஆகியவற்றை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க மத்தியமாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளை அரசே ஏற்று நடத்தமுன்வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட தோட்டத்தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இரு மண்ணுளிப்பாம்புகளைப் பிடித்த பொதுமக்கள்
வனத்தறையினரிடம் ஒப்படைத்தனர்.!

பொள்ளாச்சி.டிச.19. கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே பிடிபட்ட இரு மண்ணுளிப்பாம்புகளை பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவற்றை அமராவதி முதலைப் பண்ணைக்கு கொண்டு சென்று பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மின்நகர் மற்றும் சூளேஸ்வரன்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து இரண்டு மண்ணுளிப்பாம்புகள் நேற்று பிடிபட்டன.
இவற்றைப்பிடித்த சஜீத்பாபு மற்றும் வீராச்சாமி ஆகியோர்,உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு,பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணியிடம் அவற்றைக் கொண்டுவந்து ஒப்படைத்தனர்.அப்போது அவர்கள் மண்ணுளிப்பாம்புகளுக்கு எவ்வித மருத்துவகுணமும் இல்லையென்றும்,இவற்றை ராசிப்பாம்பு என்று கருதுவது வீண்வதந்தி என்றும் வனத்துறையினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.எனவே பொதுமக்களிடம் விழப்புணர்வு தேவை என்பதை வெளிப்படுத்தவே இவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தோம் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.பிடிபட்ட மண்ணுளிப்பாம்புகள்,அமராவதி முதலைப்பண்ணையில் வைத்து பராமரிக்கப்படும் என்றும்,பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவை பயன்படுத்தப்படும் என்றும் வனச்சரகர் வீரமணி தெரிவித்தார்.



மின்சிக்கனத்தை வலியுறுத்தி
ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஊர்வலம்.!

பொள்ளாச்சி.டிச.19 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி பள்ளி,கல்லூரிமாணவர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்ர் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.இதில் சுமார் 500.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மின்வாரியம் சார்பில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி பள்ளி,கல்லூரி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தங்கள் சைக்கிள்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளோடு
பங்கேற்றனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள வஞ்சியாபுரம் பிரிவில் துவங்கிய ஊர்வலத்தை,உடுமலை மின்பகிர்மான வட்டமேற்பார்வைபொறியாளர் சந்திரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியின்போது உதவி செயற்பொறியாளர்கள் கிருஷ்ணசாமி,மற்றும் வைதேகி ஆகியோர் பங்கேற்றனர்.

ஜோதிநகர்,மாக்கினாம்பட்டி,உடுமலைசாலை,நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வழியாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தையடுத்து பொள்ளாச்சியில் மின்சிக்கன விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில்கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்,ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் பசுவராஜ்,பேராசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் மின்சிக்கனம் குறித்து சிறப்புரையாற்றினர்.இதில்,ஐ.எஸ்.ஐ.தரம் பெற்ற மின்சாதனங்களை உபயோகப்படுத்தவேண்டும் என்றும்,மின்சாரத்தை பாதுகாப்பான வழிகளில் உபயோகப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

Saturday, December 19, 2009

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சாதனை.!


பொள்ளாச்சி.டிச.17. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியற்கல்லூரி மாணவர்கள் இன்று நடைபெற்ற முகாமில்,2.வது நாளாக இரத்ததானம் செய்துள்ளனர்.இம்முகாமின் மூலம்,2009.ஆம் ஆண்டைமுன்னிட்டு 2009 யூனிட் இரத்தத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சேமிப்பதற்காகவும் இக்கல்லூரி மாணவர்கள் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ.கல்விநிறுவனத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நேற்று நடத்திய இரத்த தான முகாமில் 121 மாணவர்கள் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்;.
இதனையடுத்து,இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் மகாலிங்கம் பொறியியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 22 பேர் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.
இம்முகாமின் மூலம் 2009.ஆம் ஆண்டை முன்னிட்டு,2009 யூனிட் இரத்தத்தை சேமித்த சாதனையை,பொள்ளாச்சி அரசுமருத்துவமனை எட்டியதற்கு என்.ஐ.ஏ.கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2009.வது நபராக தனது இரத்தத்தை தானமாக வழங்கிய கல்லூரிப் பேராசிரியர் நர்மதா மற்றும் மாணவர்களை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட அனைவரும் பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

Wednesday, December 16, 2009

காட்டு நாயக்கர் சமூக மக்கள் கோரிக்கை.!














பொள்ளாச்சி.டிச.16.கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டங்களில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 400.க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சாதிச்சான்றிதழ் மற்றும் இரண்டு ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள தாமரைக்குளத்தில் இந்து காட்டு நாயக்கர் நலச்சங்க துவக்கவிழா இன்று நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் திரு.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டங்களைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமூகத்தைச் சார்ந்த 400.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டன.
இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவ,மாணவியருக்கு அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்காக,இந்து காட்டுநாயக்கர் என சாதிச்சான்றிதழ் வழங்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து,இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க தமிழகஅரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.ஆனால்,தங்கள் சமூக மக்களுக்கு முழுமையான அளவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள இவர்கள்,அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதோடு,தங்கள் பிள்ளைகள் பயில்வதற்கு இப்பகுதியில் உறைவிடப்பள்ளி ஒன்றை அமைக்கவும் அரசு முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தில் தங்களையும் பயனாளிகளாக இணைக்க வேண்டும்,நலவாரிய அட்டைகள் வழங்கப்படவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழகஅரசு முன்வரவேண்டும் என்று இவ்விழாவின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 15, 2009

மணல் லாரிகள் பறிமுதல்- ஆறுபேர் கைது.!

















பொள்ளாச்சி.டிச.15 கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு மணலைக் கடத்தமுயன்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மணல் மற்றும் லாரிகள் பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மற்றும் கரூர் பகுதியிலுள்ள காவிரியாற்றுப் படுகையிலிருந்து கடத்தப்படும் மணல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வழியாக ஏராளமான அளவில் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகியுள்ளது.
இதனையடுத்து கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில்,போலீசார் இன்று கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட எரிசினம்பட்டி, ஆனைமலையை அடுத்துள்ள கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
இத் தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றியும்,அளவிற்கு அதிகமான மணல்பாரம் ஏற்றிக்கொண்டும்,கேரளாவிற்கு செல்வதற்காக,அவ்வழியாக வந்த நான்கு மணல் லாரிகள் பிடிபட்டன.உடனடியாக இதனைப் பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தமுயன்றதாக லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் ஆறுபேரை கைது செய்துள்ளனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோமங்கலம் மற்றும் ஆனைமலைப் போலீசார், தலைமறைவான மணல் மற்றும் லாரிஉரிமையாளர்களான மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகள் பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.மேலும் பொள்ளாச்சி,கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Sunday, December 13, 2009

வரி செலுத்துவோருக்கான ஆலோசனை முகாம் .!

பொள்ளாச்சி.டிச.13 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வரிசெலுத்துவோருக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இம்முகாமில்,திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் டேக்ஸ் ஃபாரம் எனப்படும் ஆடிட்டர்கள் சங்கம் சார்பில்,வரிசெலுத்துவோருக்கான ஆலோசனைமுகாம் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் அனந்தராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், வணிகர் சங்கப்பிரதிநிதிகள்,அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.
வரிவிதிப்பு மற்றும் வரிசெலுத்துவது குறித்தும்,மத்திய கலால்வரி, விற்பனைவரி,ஏற்றுமதி, இறக்குமதிவரி மற்றும் மதிப்புக்கூட்டுவரி உட்பட பல்வேறு சந்தேகங்கள் குறித்தும்,இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட முன்னாள் வணிகவரித்துறை இணைஆணையர் எம்.கருணாகரன், நிதிஅமிர்தம் மாதஇதழின் ஆசிரியரும்,வணிகவரித்துறை நிபுணருமான ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
சங்க நிர்வாகிகளான சரவணன்,வேணுமுத்து,ஆனந்தப்பிரபு உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Saturday, December 12, 2009

பார்வையற்றோருக்கான சதுரங்கப்போட்டிகள்


பொள்ளாச்சி.டிச.12.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பார்வையற்றோருக்கான இரண்டுநாள் சதுரங்கப்போட்டிகள் இன்று துவங்கியது.மாநிலஅளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பல்வேறுமாவட்டங்களைச்சேர்ந்த 75.க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பார்வையுள்ளவர்களே தடுமாறும் அளவிற்கு நுட்பமானதும்,கடுமையான மூளை உழைப்பும் தேவைப்படும் விளையாட்டுகளில் ஒன்றுதான் சதுரங்கப்போட்டி. ஆனால் விரல்நுனிகளையே கண்களாக கொண்டு,தங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சதுரங்கப் பலகை மற்றும் காய்களைக் கொண்டு பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்று,அசத்தலாக விளையாடிய இரண்டுநாள் போட்டிகள் கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று துவங்கியது.
மாநிலஅளவில் நடைபெறும் இப்போட்டிகளில் கோவை,தஞ்சை,விழுப்புரம், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 75.க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
10 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இருபிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் ஆறு சுற்றுக்களுக்குப் பிறகு அதிகப்படியான புள்ளிகள் பெறும் முதல் பத்துவீரர்களுக்கு ரொக்கப்பரிசுகள், வெற்றிக்கோப்பைகள் மற்றும் பிரெய்லி முறையிலான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு நடத்தப்பெறும் போட்டிகளில் பங்கேற்பது தங்களுக்கு மிகவும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது என்று விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

Friday, December 11, 2009

பொள்ளாச்சி- விவசாயிகள் முறையீட்டு கூட்டம்


பொள்ளாச்சி.டிச.11 கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய்க் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அரசுத்துறைகளின் பல்வேறு நிர்வாக நடைமுறைகள் குறித்து புகார்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் இன்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாட்சியர் உட்பட ஏராளமான அதிகாரிகளும்,பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
பட்டா மாறுதல்,சிட்டா அடங்கல் பெறுவதிலும்,அதில் ஏதேனும் தவறு இருந்தால் அவற்றை மாற்றித்தரக்கோரி கேட்டால் தாங்கள் பல மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதாகவும்,இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் உரத்தட்டுப்பாடு,விவசாயக்கடன் பெறுவது.தங்கள் பகுதியிலுள்ள அரசுப்புறம்போக்கு நிலங்கள் ஆக்ரமிக்கப்படுவதால் ஏற்படும் இடையூறு குறித்தும்,தங்கள் பகுதியில் போதுமான பேருந்து வசதியில்லாதது குறித்தும் விவசாயிகளின் தரப்பிலிருந்து மனுக்கள் அளிக்கப்பட்டதுடன்,புகார்களும் தெரிவிக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்க் கோட்டாட்சியர் அன்பழகன்,மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டு,விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

பொள்ளர்ச்சி.டிச.11-சாலைப்பணியாளர்களின் 41 மாதப்பணிக்காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும்,சாலைப் பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை சாலையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பாக,தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் கோட்டத்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,கடந்த ஆட்சிக்காலத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாதப்பணிநீக்கக் காலத்தை,தமிழகஅரசு பணிக்காலமாக அறிவிக்கவேண்டும் என்றும்,நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு தாரைவார்க்க நடைபெற்றுவரும் முயற்சிகளை தமிழகஅரசு கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் சாலைப்பணியாளர்களுக்கு,தமிழகஅரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம்வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
பொள்ளாச்சி,கிணத்துக்கடவு,ஆனைமலை,உடுமலை,வால்பாறை பல்லடம் மற்றும் சுல்தான்பேட்டை உட்பட பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும் சாலைப்பணியாளர்கள்,இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.

Thursday, December 10, 2009

ஓயுமா மணல் கடத்தல்..?

o


கிணத்துக்கடவு வழியாகத் தொடரும் மணல் கடத்தல்.!

பொள்ளாச்சி.டிச.12. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வழியாக கேரளமாநிலத்திற்கு மணல்கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.இதனால் அப்பகுதியிலுள்ள சாலைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சிதிலமடைந்துள்ளதால் மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கிணத்துக்கடவு. இங்கிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள வீரப்பகவுண்டனூர் அருகே கேரள எல்லை துவங்குகிறது. தற்போது கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து லாரிகளில் கடத்தப்படும் மணல் இவ்வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

பொதுமக்களால் இடையூறு ஏற்படாதவகையில், தடுப்பதற்காக பல இடங்களில் 10 பேர் வரை கொண்ட பலகுழுக்களின் கண்காணிப்பும் தகவல் பரிமாற்றமும் மேற்கொள்வதையடுத்து, இவர்களின் செல்போன் கட்டளைப்படியே லாரிகள் வீரப்பகவுண்டனூர் சாலைகளின் வழியே பயணித்து கேரளஎல்லையை அடைந்து,கேரளமாநிலம் வடகரை மற்றும் ஒழலப்பதி வழியாக சென்று வருகிறது.
இவ்வாறு.கடந்த பலமாதங்களாக நாளொன்றுக்கு சராசரியாக,சுமார் 200 லாரிகள் வரை மணல் கடத்தப்படுகிறது என்றும்,ஆனால் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மணல் கடத்தியதாக இரண்டுலாரிகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளின் போக்குவரத்து காரணமாக, வீரப்பகவுண்டனூர்,சொக்கனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் பெரிதும் பழுதடைந்துள்ளதால்,இருசக்கரவாகனம் மற்றும் பேருந்து, ஆம்புலன்ஸ், சரக்குவாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்களின் போக்குவரத்துக்கும் பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும்,மணல் லாரிகள் செல்வதை தடைசெய்யும் வகையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து செயலாற்றும் வகையில்,அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

vedios in youtube.com-kkr.1,kkr.2


ராசிப்பாம்பு பதுக்கியவருக்கு கெட்ட நேரம்..! பணம் பத்தாயிரம் அபராதம்..!



கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே சின்னாம்பாளைம் பகுதியிலுள்ள சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணுளிப்பாம்பு குறித்து தகவலறிந்த வனத்துறையினர்.அதிரடியாக அதனை மீட்டனர்.மேலும் பாம்பை பதுக்கிவைத்தவருக்கு ரு.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சின்னாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பாலு.இவரது வீட்டின் பின்புறம் மண்ணுளிபாம்பு ஒன்று இருந்தது.இதனையடுத்து அடுத்த வீட்டிலுள்ள சதீஷ்குமார் என்பவர் அப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பதாகக் கூறி அதனைப் பிடித்துள்ளார்

ஆனால் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்கவில்லை.மேலும் அது குறித்த தகவலும் வனத்துறைக்கு தெரிவிக்கவில்லைஇதனையடுத்து சதீஷ்குமாரின் வீட்டில் மண்ணுளி பாம்பு ஒன்றை பதுக்கிவைத்துள்ளதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் அங்கு பதுக்கிவைத்திருந்த மண்ணுளிப் பாம்பை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள்,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் ராசிப்பாம்பு என்ற பெயரில் மண்ணுளிப்பாம்பை பிடித்து விற்பது மூடநம்பிக்கை என்றும்,இது போன்ற தகவல்களால் பொதுமக்கள் ஏமாறவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கள்ளுக்கு வைகோ ஆதரவு,தலித்துகள் எதிர்ப்பு

ம.தி.மு.க.மாநாடு-வைகோவிற்கு எதிராக நோட்டீஸ்
3 பேர் கைது.!

பொள்ளாச்சி.டிச.7 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ம.திமு.க.-விவசாய அணி சார்பில் கொங்கு மண்டல விவசாயிகள் கோரிக்கைப் பேரணி மற்றும் மாநாடு இன்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்கக் கூடாது அவிநாசி அத்திக்கடவு குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ம.தி.மு.க. விவசாயஅணியின் சார்பில் கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.பொள்ளாச்சி நியூஸ்கீம் சாலை-பல்லடம் சாலை சந்திப்பில் தொடங்கிய பேரணி நகரின் முக்கியவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் துவங்கிய இடத்திலேயே முடிவுற்றது.
பின்னர் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற கோரிக்கை விளக்க மாநாட்டில் தென்னை வளர்ச்சி வாரியத்தை பொள்ளாச்சியில் அமைக்கவேண்டும் கரும்புக்குரிய விலையாக ரூ.2500.ஐக் கொடுக்கவேண்டும்.தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.கூட்டுறவுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த வைகோ கத்தரி உட்பட மரபணு மாற்றவிதைகளைப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் இது விவசாயிகளின் நிலத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துவிடும் என்றும் வலியுறுத்தினார்.
இதே போல் அவிநாசி அத்திக்கடவு திட்டம் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவும் இலவச மின்சாரத்திற்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய வைகோ மேலும் மாநாட்டுத்தீர்மானங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.அப்போது தமிழகத்தில் பூரணமதுவிலக்கு கொண்டு வரவேண்டும் அல்லது தென்னை பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனிடையே பண்ணை முதலாளிகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலத்தை தலித் மக்களுக்கு மீட்டுத்தர முயற்சிக்காத வைகோ பல நூறு ஏக்கர் விவசாயநிலங்களின் உரிமையாளர்களுக்காக கள் இறக்குவதை ஆதரிப்பதா என்ற கேள்வியை எழுப்பும் துண்டுப்பிரசுரங்கள் ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பாக அதன் நிர்வாகிகள் சிலர் பொள்ளாச்சி மத்தியபேருந்து நிலையம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் விநியோகித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல்அறிந்த போலீசார் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த ஆதித்தமிழர் பேரவையின் கோவை மாவட்ட தலைவரான கோபால் உட்பட 3 பேரைக்கைது செய்தனர்.மேலும் ஆதித்தமிழர் விடுதலை முன்னனி அமைப்பைச் சேர்ந்தவர்களும் வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டியதோடு, துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர்.

Sunday, December 6, 2009

சூளையில் வேகும் நாளைய மனிதர்களுக்கு அரசு உதவி கிடைக்குமா.?


சுண்ணாம்புக்கல் தயாரிக்கப் பயன்படும் ஓடைக்கற்களை கனிமவளப்பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்றும்,சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பலநூறு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள சுண்ணாம்புக்கல் சூளைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஊரகத்தொழில்துறை அமைச்சரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்த நூற்றுக்கும் அதிகமான சுண்ணாம்புக்கல் சூளைகள்,தற்போது 50.க்கும் குறைவான எண்ணிக்கையில் இயங்கிவருகின்றன.இதில் 300.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரையாக ஈடுபட்டுவருகின்றன.
சுண்ணாம்புக்கல் காளவாயில் நெருப்போடு நெருங்கிய வாழ்க்கை, புகையோடுகூடிய சுவாசம் என தங்கள் வாழ்நாளை,மிகக்குறைந்த கூலியுடன் கடத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு கடந்தசில நாட்களாக,சுண்ணாம்புக்கல் தயாரிப்
பதற்கான மூலப்பொருளாக விளங்கும் ஓடைக்கற்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காரணம்,ஓடைக்கற்கள் என்பது,கனிமவளப் பொருட்கள் பட்டியலில் உள்ளது எனக்கூறி,இக்கற்களை ஏற்றிவரும் லாரிகளை வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பிடித்து ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர்.இதனால் ஓடைக்கற்கள் காளவாய்களுக்கு விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது.
இது குறித்து லாரிஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூறும்போது, தரிசுநிலங்கள்,விவசாய நிலங்களாக மாற்றப்படும்போது,விவசாயத்திற்கு இடையூறாகவுள்ள ஓடைக்கற்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனை சேகரித்து தரும்வேலையை மட்டுமே தாங்கள் செய்வதாகவும் அதற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்தும் நிலையில் தாங்கள் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
சுகாதரப்பணிகளுக்காகவும்,வீடுகளில் வெள்ளையடிப்பதற்கும் பயன்படும் சுண்ணாம்புக்கல் தயாரிப்பு பணிகள்,ஓடைக்கற்கள் வராததால் தடைபடுகிறது என்றும் இதனால் தொழிலாளர்களுக்குரிய கூலியை வழங்கமுடிவதில்
லை என்றும் காளவாய் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயநிலங்களை மேம்படுத்தும் பணிகளில் ஒன்றாகவே ஓடைக்கற்களை அப்புறப்புடுத்துவதும்,அதனை வைத்து தயாரிக்கும் சுண்ணாம்பு பொடியை கால்சியம் சத்துகுறைவான பயிர்களுக்கும்,நிலங்களுக்கும் பயன்படுத்துவதாகவும் கூறும் விவசாயிகள், அரசுஅதிகாரிகள் விதிக்கும் தடைகளால் விவசாயமும் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
கடந்தசில தினங்களாக ஓடைக்கற்களின் வரத்து நின்றுபோனதால்,தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு,இதேநிலை நீடித்தால் உணவுக்குகூட தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்றும்,இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
எனவே கனிமவளப்பொருட்களின் பட்டியலிலிருந்து ஓடைக்கற்களுக்கு விலக்கு அளிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்
கவேண்டும் என்றும்,அதனால் மட்டுமே இப்பகுதியில் சுண்ணாம்புக்கல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 300.க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் சுண்ணாம்புக்கல்சூளைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக ஊரகத்தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.


YouTube.com

Tuesday, December 1, 2009

கண் கெடுப்பவரா ஆசிரியர்..? பக்கம்.1

சிறுமியின் கண்கள் பறிபோக காரணமாயிருந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு மனு.!

புகாரின் நகல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

அனுப்புனர். என்.முருகானந்தம்,வயது.38, சுகந்தி.வயது.33
2-124.ராமர் கோவில் வீதி,
எரிசினம்பட்டி,எரிசினம்பட்டி அஞ்சல்,
உடுமலை வட்டம்,திருப்பூர் மாவட்டம்

பெறுனர்-1.மாண்புமிகு தமிழகமுதல்வர்

2.மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்,

3.திரு.மாவட்ட ஆட்சித்தலைவர்-திருப்பூர் மாவட்டம்

4.மாவட்டக்கல்வி அதிகாரி-கோவை,திருப்பூர் மாவட்டப்பொறுப்பு,

5.உதவித் தொடக்கக்கல்வி அதிகாரி, உடுமலை ஊராட்சிஒன்றியம்,

6.மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்
திருப்பூர் மாவட்டம்,

7.துணைக்காவல்துறைக் கண்காணிப்பாளர்.உடுமலைவட்டம்,

8.ஆய்வாளர் அவர்கள்,கோமங்கலம் காவல்நிலையம்,

9.உதவிஆய்வாளர்,கோமங்கலம் காவல்நிலையம்,

கண் கெடுப்பவரா ஆசிரியர் ..? பக்கம்.2


ஐயா,

பொருள்- எங்களின் மகள் தர்ஷினிபிரியா,கடந்த 31.3.2008.ல்,பள்ளியில் 4.ஆம் வகுப்பில் வேலை நேரத்தில்,பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.அம்சவேணி,வகுப்பாசிரியை திருமதி.சித்திரகலா ஆகியோரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு பார்வை பறிபோய் உடலும்,முகமும் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது தொடர்பாக மேற்படி பள்ளித்தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை மேல் தக்க நடவடிக்கை எடுக்க கோரும் மனு.

நாங்கள் ஷ முகவரியில் வசித்து வருகிறோம்,எங்களது மூத்த குழந்தை தர்ஷினிபிரியா- வயது.11-கடந்த 31.3.2008.ல் உடுமலைவட்டம்,எரிசினம்பட்டி ஊராட்சி ஒன்றியத் 2தொடக்கப்பள்ளியில் 4.ஆம் வகுப்பு படித்துவந்தாள்.

அச்சமயத்தில் அவரது வகுப்பில் உள்ள ஒருமாணவன் சிறுநீர் கழித்துவிட்டதால், வகுப்பாசிரியை சித்திரகலாவும்,தலைமை ஆசிரியை அம்சவேணியும் எங்களது குழந்தையை,தலைமை ஆசிரியை அறையிலிருந்த பினாயிலை எடுத்து வந்து சிறுநீர் கழித்தஇடத்தை சுத்தம் செய்யுமாறு மிரட்டி,அடித்ததால் எங்களது குழந்தை பயந்து ஷ ஆசிரியைகள் கூறியவாறு பினாயில் பாட்டிலை எடுத்துவந்து திறக்க,அதில் பினாயிலுக்கு பதிலாக பெயர் தெரியாத வகையில் இருந்த அமிலம் வெடித்து குழந்தையின் முகம்,உடல், முழுவதும் ஆசிட்டினால் காயம் ஏற்பட்டு முற்றிலும் வெந்து அவள் அலர ஷ ஆசிரியைகள் எங்களுக்கு தகவல் ஏதும் கூறாமல் தேவனூர்புதூரிலுள்ள தனியார்மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக,எங்களுக்கு காலதாமதமாக தகவல் கிடைத்தது.நாங்கள் பதறிச் சென்று தேவனூர்புதூர் மருத்துவமனைக்கு சென்று எங்கள் குழந்தையைப் பார்க்க அவள் உடலும்,முகமும் வெந்து கொப்புளங்களுடன்,கண் இரண்டும்,திறக்கஇயலாமல் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.

ஷ விபத்து குறித்து உடனே காவல்நிலையத்தில் புகார் கொடுக்க பள்ளிஆசிரியைகளை கேட்க,அதற்கு உடுமலையிலிருந்து கல்வி உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டபின்புதான் புகார் கொடுக்க முடியும் என்றும்.அது எங்களது தனிப்பட்டவிஷயம் என்றும் எங்களை மிரட்டினார்கள்.

உடுமலையிலிருந்து வந்த அதிகாரிகளும் எங்களது குழந்தையைப் பார்வையிட்டு ஷ ஆசிரியைகள் இருவரின்பேரிலும் அவர்கள் கவனக்குறைவாக பள்ளி நேரத்தில் இருந்து எங்களது குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு,முறையாக காவல்நிலையத்தில் வழக்கு புகார் தாக்கல் செய்ய இருப்பதாகவும்,துறைரீதியாக ஷ ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தகவல் கொடுப்பதாகவும் கூறியிருந்தனர்.

எங்களையும் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவேண்டாம் என்றும் மிரட்டினார்கள். ஷபுகார் கொடுத்தால் எங்கள் குழந்தைக்கு அரசு உதவி எதுவும் கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று ஷ பள்ளி துணைக்கல்வி அலுவலர் என்று சொல்லிய நபரும் மற்றும் இருவரும் ஷ ஆசிரியைகளுடன் சேர்ந்து எங்களை மிரட்டி வற்புறுத்தி ஏதும் எழுதாத பல வெள்ளைப்பேப்பர்களில் கையொப்பங்களையும் பெற்றுக் கொண்டனர்.

எங்களது குழந்தைக்கு ஷ அதிகாரிகளும்,ஆசிரியைகள் இருவரும் தேவனூர்புதூர் மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி கண் டாக்டரிடமும் 3 வாரங்கள் அவர்களே சிகிச்சையளித்தனர். எங்களது குழந்தையின் கண்பார்வை பறிபோய்விடும் என்று நாங்கள் அதிகாரிகளிடமும் ஷ விபத்து பற்றி புகார் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டும்,எங்களின் கையொப்பங்களை வெற்றுப்பேப்பர்களில் பெற்றதைக் கொண்டு தம்பதிகளான எங்கள் இருவரையும் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கால் ஷ ஆசிரியைகள்ட மிரட்டினர்.

எங்களது குழந்தைக்கு முகத்திலும், உடலிலும் ஷ ஆசிட் பட்டதால் ஏற்பட்ட காயதழும்பிற்கு எங்களாலான சிகிச்சையை செய்துவந்தோம். மேலும் கடந்த 10.10.08.ல் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று எங்களது மகள் தர்ஷினி பிரியாவின் கண்களைப் பரிசோதிக்க, ஆசிட் பட்டதால் வலதுகண் பார்வை முற்றிலும் போய்விட்டதாகக் கூறினார்கள்.

நாங்கள் உடனடியாக விபத்து சம்பந்தமான புகார்கள் அரசு அலுவலகங்களில் இருக்கும் என உடுமலை பள்ளிக்கல்வி அலுவலரிடம் கேட்க,அவ்விதமான விபத்து பதிவு எதுவும் இல்லையென தெரிந்pது அதிர்ச்சியடைந்தோம். இவ்விபத்திற்கு பிறகு தலைமைஆசிரியை உடுமலை சின்னப்பாப்பானூத்து ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளிக்கும்,வகுப்பு ஆசிரியை உடுமலை பூலாங்கிணறு நடுநிலைப்பள்ளிக்கும்தங்கள் செல்வாக்கைப்பயன்படுத்தி மாறுதல் பெற்று சென்று விட்டனர்.

இவர்களை நேரில் சந்தித்து எங்களின் குழந்தையின் நிலைபற்றி கூறியும்,விபத்துகுறித்து பதிவுசெய்யாமல் விட்டதைக்கேட்டபோது எங்களை பதிலுக்கு ஆட்களை வைத்து மிரட்டியதோடு,உன்னால் என்ன செய்யமுடியுமோ,அதைச் செய்துகொள் என்று கூறிவிட்டனர்.

அரசுப்போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராகப்பணிபுரியும் என்னால் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையில்,எங்கள் குழந்தைக்கு பார்வையை திரும்பப்பெறும் அறுவை சிகிச்சையை செய்ய,வசதியில்லாத நிலையில் உள்ளோம். ஏழைகளும் ஆதரவற்றவர்களுமான எங்களுக்கு ஷ ஆசிரியைகள் அப்போதே முறைப்படி புகார் கொடுத்து உதவாமல்,சுயநலம் கருதி விபத்தை மறைத்ததால் குழந்தையின் வலதுகண் பார்வை முற்றிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்காது.

இதற்கு காரணமாக இருந்த ஆசிரியைகள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் மீதும் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து விபத்தை மறைத்த குற்றத்திற்காகவும்,பார்வை பறிபோனதற்காகவும் விபத்தால் ஏற்பட்ட உடல்வலி மனவலி ஆகியவற்றுக்கு தக்க நட்டஈடு கிடைக்க உத்தரவிட்டும்,எங்களது குழந்தைக்கு அரசு செலவில் மீண்டும் பார்வை கிடைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏதும் அறியாத எங்கள் குழந்தைக்கு பார்வை பறிபோனதால் அவளது வருங்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.அவளக்கு பார்வையை திரும்பப்பெற விரைந்து நடவடிக்கை எடுத்து உதவும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

என்.முருகானந்தம்-எம்.சுகந்தி

எரிசினம்பட்டி


கண் கெடுப்பவரா ஆசிரியர்..? பக்கம்.3














குறிப்பு
- இந்தப்புகார் விபத்து நடந்த 31.3.2008 ஆம் தேதியிலிருந்து காலதாமதமாக நாங்கள் புகார் கொடுப்பதற்கு,உடுமலை கல்விஅதிகாரிகளும்,தலைiமைஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியையுமே ஆவார்கள்.எங்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் இல்லாததால் தவறு செய்தவர்களை நம்பி இப்புகார் காலதமதமாகக் கொடுக்கப்படுகின்றது. காலதாமதத்தை மன்னித்து தவறு செய்தவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கவும்,என்குழந்தை கண்ஒளிபெறவும் உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோhம்.


உதவிக்கு-
புகார்தாரர்-என்.முருகானந்தம்.
-பெ. நடராஜன்,

ஜி.பழனிச்சாமி.சி..டி.யு.பொள்ளாச்சி-செல்-9788921171


கோமங்கலம் காவல் நிலையம்-எப்..ஆர். எண்- .346 / 09
தேதி -14.11.2009

கோமங்கலம் காவல் நிலையம்-04259-280226

உடுமலை டி.எஸ்.பி.செல்-9790202773

உடுமலை உதவித் தொடக்க்கல்வி அலுவலர்-
ஜோசப் கருணாகரன்-9750982339