ராசிப்பாம்பு பதுக்கியவருக்கு கெட்ட நேரம்..! பணம் பத்தாயிரம் அபராதம்..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே சின்னாம்பாளைம் பகுதியிலுள்ள சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணுளிப்பாம்பு குறித்து தகவலறிந்த வனத்துறையினர்.அதிரடியாக அதனை மீட்டனர்.மேலும் பாம்பை பதுக்கிவைத்தவருக்கு ரு.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சின்னாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பாலு.இவரது வீட்டின் பின்புறம் மண்ணுளிபாம்பு ஒன்று இருந்தது.இதனையடுத்து அடுத்த வீட்டிலுள்ள சதீஷ்குமார் என்பவர் அப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பதாகக் கூறி அதனைப் பிடித்துள்ளார்
ஆனால் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்கவில்லை.மேலும் அது குறித்த தகவலும் வனத்துறைக்கு தெரிவிக்கவில்லைஇதனையடுத்து சதீஷ்குமாரின் வீட்டில் மண்ணுளி பாம்பு ஒன்றை பதுக்கிவைத்துள்ளதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் அங்கு பதுக்கிவைத்திருந்த மண்ணுளிப் பாம்பை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள்,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் ராசிப்பாம்பு என்ற பெயரில் மண்ணுளிப்பாம்பை பிடித்து விற்பது மூடநம்பிக்கை என்றும்,இது போன்ற தகவல்களால் பொதுமக்கள் ஏமாறவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment