பொள்ளாச்சி.டிச.11 கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய்க் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அரசுத்துறைகளின் பல்வேறு நிர்வாக நடைமுறைகள் குறித்து புகார்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் இன்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாட்சியர் உட்பட ஏராளமான அதிகாரிகளும்,பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர். பட்டா மாறுதல்,சிட்டா அடங்கல் பெறுவதிலும்,அதில் ஏதேனும் தவறு இருந்தால் அவற்றை மாற்றித்தரக்கோரி கேட்டால் தாங்கள் பல மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதாகவும்,இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் உரத்தட்டுப்பாடு,விவசாயக்கடன் பெறுவது.தங்கள் பகுதியிலுள்ள அரசுப்புறம்போக்கு நிலங்கள் ஆக்ரமிக்கப்படுவதால் ஏற்படும் இடையூறு குறித்தும்,தங்கள் பகுதியில் போதுமான பேருந்து வசதியில்லாதது குறித்தும் விவசாயிகளின் தரப்பிலிருந்து மனுக்கள் அளிக்கப்பட்டதுடன்,புகார்களும் தெரிவிக்கப்பட்டன. இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்க் கோட்டாட்சியர் அன்பழகன்,மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டு,விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment