பொள்ளர்ச்சி.டிச.11-சாலைப்பணியாளர்களின் 41 மாதப்பணிக்காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும்,சாலைப் பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை சாலையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பாக,தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் கோட்டத்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,கடந்த ஆட்சிக்காலத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாதப்பணிநீக்கக் காலத்தை,தமிழகஅரசு பணிக்காலமாக அறிவிக்கவேண்டும் என்றும்,நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு தாரைவார்க்க நடைபெற்றுவரும் முயற்சிகளை தமிழகஅரசு கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் சாலைப்பணியாளர்களுக்கு,தமிழகஅரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம்வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
பொள்ளாச்சி,கிணத்துக்கடவு,ஆனைமலை,உடுமலை,வால்பாறை பல்லடம் மற்றும் சுல்தான்பேட்டை உட்பட பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும் சாலைப்பணியாளர்கள்,இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment