மரஅறுவை ஆலையில் தீ.
பல லட்சம் மதிப்பிலான மரம் மற்றும் இயந்திரங்கள் சாம்பல்.!
பொள்ளாச்சி.டிச.௨௦ கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் மரஅறுவை ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பல லட்சம் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாயின.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளியில் ஏராளமான மர ஆறுவை அலைகள் உள்ளன.இந்நிலையில் இன்று மாலை-௨௦.௧௨.௦௯ அங்குள்ள தனியாருக்கு சொந்தமான மரஅறுவை ஆலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனைக்கண்ட மரஅறுவை ஆலையின் காவலாளி கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் சுமார் ௨ மணிநேரப்போராட்டத்திற்கு பிறகே தீயை கட்டுப்படுத்த முடிந்தது.இந்த இடைவெளியில் ஆலைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான தேக்கு உட்பட பல்வேறு வகையான மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையப் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இத்தீவிபத்திற்கு காரணம் மின்கசிவாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மரஅறுவை ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment