pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, December 23, 2010

வால்பாறையில் பிடிபட்ட சிறுத்தை அமராவதி வனப்பகுதியில் விடுவிப்பு.!

பொள்ளாச்சி.டிச.23.கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள கெஜமுடி தேயிலைத் தோட்டத்தில்,வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி பாதுகாப்பான முறையில் உடுமலையை அடுத்துள்ள அமராவதி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட்டில் வசிக்கும் சரண்யா என்ற சிறுமி கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு,படுகாயமடைந்தார்.
இதனையடுத்து வனத்துறையினர்,அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக,தாய்முடி மற்றும் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டுகளை வைத்தனர்.இதனையடுத்து கடந்த 11.ஆம் தேதியன்று,நள்ளிரவில்,இக்கூண்டில் சுமார் 3 வயதுள்ள சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. ஆனால்,சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு,தான் சிக்கிய கூண்டின் கம்பிகள்,மற்றும் வலைகளை கடித்தும்,வளைத்தும் கூண்டிலிருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
இதனையடுத்து கடந்த பதினொரு நாட்களாக,மீண்டும் மூன்று இடங்களில் கூண்டுகளை வைத்து,வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே சிறுத்தைப்புலி கெஜமுடி அப்பர் டிவிசன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. இதனையடுத்து,சிறுத்தைப்புலி உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,சுமார் 70 கி.மீ,தூரத்திலுள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகத்திறக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
ஆனால் கூண்டிலிருந்து உடனடியாக வெளியேறாமல்,சூழ்நிiiயை நோட்டமிட்ட சிறுத்தை,சிறிது நேரம் கழித்து வனத்த்pற்குள் பாய்ந்தோடியது. லூரியின் மீது பாதுகாப்பாக நின்றிருந்த வனத்துறையினர்,சிறுத்தை மீண்டும் திரும்பிவந்து,தாக்கும் அபாயம் இருந்ததால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சிலரவுண்டுகள் சுட்டனர்.
இதனால் அரண்டு போன சிறுத்தை படுவேகமாக வனத்திற்குள் ஓடிமறைந்தது.அமராவதி வனப்பகுதியில் மான்கள் உட்பட,உயவுக்கான விலங்குகள் அதிகளவு உள்ளது.இங்கம் அதிகளவு சிறுத்தைகள் உள்ளதால்,அவற்றுடன் இணைந்து கொள்ளும்.சிறுத்தை வசிப்பதற்கு ஏற்ற இடமாக,இந்த வனப்பகுதி உள்ளதால்,பிரச்சினைகள் எதுவும் இல்லை.கடந்த ஆறுமாதங்குளுக்கு முன் வால்பாறையில் சிக்கிய சிறுத்தையும் அமராவதி வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.என்று திருப்பூர்; மாவட்ட வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
vedios in youtube-sunpollachi

கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தை பிடிபட்டது.

பொள்ளாச்சி.டிச.22.கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள கெஜமுடி தேயிலைத் தோட்டத்தில்,வைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்து வலைகளையும்,கம்பிகளையும் கடித்தும்,வளைத்தும் தப்பிய சிறுத்தைப்புலி மீண்டும் சிக்கியது.இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட்டில் வசிக்கும் சரண்யா என்ற சிறுமி கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு,படுகாயமடைந்தார்.
இதனையடுத்து வனத்துறையினர்,அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக,தாய்முடி மற்றும் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டுகளை வைத்தனர்.இதனையுடத்து கடந்த 11.ஆம் தேதியன்று,நள்ளிரவில்,இக்கூண்டில் சுமார் 3 வயதுள்ள சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. ஆனால்,சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு,தான் சிக்கிய கூண்டின் கம்பிகள்,மற்றும் வலைகளை கடித்தும்,வளைத்தும் கூண்டிலிருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.பிடிபட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினரெ விடுவித்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே இருந்தது.
இதனையடுத்து கடந்த பதினொரு நாட்களாக,மீண்டும் மூன்று இடங்களில் கூண்டுகளை வைத்து,வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில்,நேற்று இரவு அதே சிறுத்தைப்புலி கெஜமுடி அப்பர் டிவிசன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.இது குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவஇடத்திற்கு வந்து சிறுத்தை பிடிபட்ட கூண்டினைச் சுற்றி,தகரங்களால் மறைத்தும்,கற்களை அடுக்கியும்,சிறுத்தைப்புலி தப்பிச்செல்ல முடியாதபடி,பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து,சிறுத்தைப்புலி உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் ஆரோக்கியராஜசேவியர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை பிடிபட்டது குறித்து பொதுமக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும்,இப்குதியில் மேலும் ஏராளமான சிறுத்தைப்புலிகள் தங்கள் குட்டிகளுடன் வலம்வருவதாகவும்,அவற்றையும் தொடர்ந்து கண்காணித்துப் பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
visuals in youtube-sunpollachi


Sunday, December 19, 2010

குழந்தையைக் கொன்று விட்டு நாடகமாடிய தாய்கைது.!

பொள்ளாச்சி.டிச.19.கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துஅனைமலை தாத்தூரைச் சேர்ந்த பெண்,தனது குழந்தையை கிணற்றில்போட்டுக் கொன்று விட்டு,கொள்ளையர்கள் வந்து குழந்கையைப் பறித்துச் சென்று கொன்றுவிட்டதாக நாடகமாடியது,போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து அப்பெண்ணை ஆனைமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து,ஆனைமலையருகேயுள்ள தாத்தூர் பகுதியில் வசிப்பவர் தர்மராஜ்.இவரது மனைவியான காளீஸ்வரி,தனது ஒன்றரை வயது மகன் சௌந்தர்ராஜனுடன்,ஆனைமலையருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று திரும்பிவரும் வழியில்,தலையில் ஹெல்மெட்டுடன்,இருசக்கரவாகனத்தில் தன்னை பின் தொடர்ந்து வந்த மர்மமனிதர்கள் இருவர் திடீரென்று தனது கழுத்திலிருந்த 4 சவரன் தங்கநகையைப் பறித்துக் கொண்டதோடு, தன்னிடமிருந்து குழந்தையையும் பறித்துக் கொண்டனர் என்றும்,
புpன்னர் அவர்களைத் துரத்திச் சென்று பார்த்தபோது,தனது குழந்தையை அங்குள்ள கிணற்றில் போட்டுக் கொன்று விட்டதாகவும்,ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார்,உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று,காளீஸ்வரி குறிப்பிட்ட கிணற்றிலிருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர்.மேலும் அப்பகுதியில் விசாரணையும் மேற்கொண்டனர்.
ஆனால் இவ்விசாரணையின்போது,காளீஸ்வரி குறிப்பிட்டதுபோல அப்பகுதியில் சம்பவம் ஏதும் நடைபெற்றதற்கான அறிகுறி எதுவும் தெரியாததால் போலீசார் குழப்பமடைந்தனர்.
இதனையடுத்து,காளீஸ்வரியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால்,போலீசாரின் சந்தேகம் காளீஸ்வரி மீதே திரும்பியது.இதனையடுத்து உரியமுறையில் விசாரித்த போலீசாரிடம்,தனது காதல் திருமணத்தால்,பெற்றோருடன் இணையமுடியாத விரக்தியில் தான் இருந்ததாகவும்,அதற்கு இடைய+றாக குழந்தை இருந்ததால் அதனைக் கிணற்றில் போட்டுக் கொன்றதாகவும்,இதனை மறைப்பதற்காக கொள்ளையர்கள் வந்து தனது நகைகளைப் பறித்துச் செல்லும்போது,குழந்தையையும் கிணற்றில் போட்டுக் கொன்றுவிட்டதாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனைமலைபோலீசார்,காளீஸ்வரி மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.பெற்ற தாயே,தனது குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவம்,இப்பகுதி பொதுமக்களிடையே பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
vedio in youtube-pollachi child murder.

Friday, December 17, 2010

வால்பாறை சாலைகள் குறித்து ஆய்வு.!

கோவைமாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களுக்குட்பட்ட, பழுதடைந்த சாலைகள்,பொள்ளாச்சி கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பழுதடைந்த சாலைகளில் அரசுப்பேருந்துகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து,நடந்து செல்லும் பாதசாரிகள் சிறுத்தைப்புலிகள்,காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவது வாடிக்கையாகி வருவதால், இந்த சாலைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவைமாவட்டம் வால்பாறை பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களின் வழியாகச் செல்லும் சாலைகளில்,கடந்த காலங்களில் அரசுப்பேருந்துகள் சென்றுவந்து கொண்டு இருந்தன.நாளடைவில் அந்த சாலைகள் பராமரிப்பின்றி பழுதடைந்ததால் பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
இதனையடுத்து அவ்வழியாக தங்கள் குடியிருப்புகளுக்கு,நடந்துசெல்லும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட பாதசாரிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள்,கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவதும்,சிலர் உயிரிழப்பதும் தொடர்கதையானது.
கடந்தசில தினங்களுக்கு முன் மாவட்டஆட்சியர் உமாநாத் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவைதங்கம் மற்றும் வனத்துறை அதிகாரிகள், இப்பிரச்சினைகள் குறித்து மாவட்டஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து சாலைகள் சீரமைக்கப்படுவதால் பெருமளவில் வன விலங்குகளால் ஏற்படும் தாக்குதல்களைத் தவிர்க்கமுடியும் என்றும். சீரமைக்கப்பட்ட சாலைகளில் அரசுப்பேருந்துகள் மற்றும் ஷேர்ஆட்டோக்கள் விடுவதன் மூலம் பாதசாரிகளின் நடமாட்டத்தைக் குறைக்கமுடியும் என்றும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பழுதடைந்த சாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அது குறித்த அறிக்கைகளைத் தருமாறு மாவட்ட ஆட்சியர் உமாநாத் உத்தரவிட்டடைத் தொடர்ந்து,பொள்ளாச்சி கோட்டாட்சியர் அழகிரிசாமி தலைமையில், அரசுப்போக்குவரத்துக்கழகம், நெடுஞ்சாலைத்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வால்பாறையை அடுத்துள்ள ஊசிமலை, சின்னக்கல்லார், சோலையார்,வில்லோனி உட்பட பலபகுதிகளில்உள்ள சுமார் 73.கி.மீ.நீளமுள்ள சாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளுக்குப் பிறகு பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில்,தனியார் தேயிலைத் தோட்டத்திற்குட்பட்ட பழுதடைந்த சாலைகள்,வால்பாறை நகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறைவசம் ஒப்படைக்கப்பட்டு புதிய சாலைகள் போடவும்,பழுதடைந்த சாலைகள் சீரமைக்கவும்,நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இச்சாலைகளில் முதற்கட்டமாக அரசுப்பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்ய அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்யவேண்டும்.
அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.!
கோவைமாவட்டம் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதையொட்டி, இம்மருத்துவமனையின் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு,இங்கு மருத்துவக் கல்லூரியையும் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை தெற்குமாவட்டத்தில் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை மட்டுமே தற்போது மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.இதன்மூலம், பொள்ளாச்சி, உடுமலை,வால்பாறை,கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.நாள்தோறும் 2 ஆயிரம் நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால்,இம்மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீனவசதிகள் எதுவுமில்லாததால்,சாதாரணமான சில நோய்கள் தவிர,விபத்து, சிக்கலான பிரசவம்,உள்ளிட்ட பெரும்பாலான சிகிச்சைகளுக்கு,கோவை அரசுமருத்துவமனைக்கே பரிந்துரை செய்யப்படுகிறது.இதனால் அரசுமருத்துவமனையை நாடிவரும் ஏழைநோயாளிகள்,பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்ந்துவருகிறது.
இதனையடுத்து,பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில்,நவீனகருவிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவந்ததையடுத்து இம்மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு,கடந்த மேமாதம் அரசுஆணை வெளியிடப்பட்டது.
அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் இடவசதி தேவைப்படும் நிலையுள்ளதால்,தற்போது இம்மருத்துவமனை யின் அருகில் செயல்படாதநிலையில் உள்ள,சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான நகராட்சி மகளிர்மேல்நிலைப் பள்ளிவளாகத்தையும்,இதன் அருகிலேயே முக்கால் ஏக்கர் பரப்பளவிலான பாலகோபாலபுரம் பள்ளிவளாகத்தையும் இணைத்து,அரசு மருத்துவமனைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்பட்டு,மாவட்டத் தலைமை மருத்துவமனையாக,பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்படும் நிலை ஏற்பட்டால்,500 படுக்கைவசதிகளுடனும்,சி.டி.ஸ்கேன்,விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு,எலும்பு,நரம்பியல்,கண்,காது,மூக்கு தொண்டைப்பிரிவு,மகப்பேறுக்கு முன் மற்றும் பின்கவனிப்பு மருத்துவப்பிரிவு,இருதயநோய்,லேப்ராஸ்கோப்பிக்குடன் கூடிய நவீன அறுவைசிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட 30.க்கும் மேற்பட்ட சிறப்புமருத்துவப்பிரிவுகளுடன் இம்மருத்துவமனை செயல்பட வாய்ப்புள்ளது என்றும்,அரசுமருத்துவக்கல்லூரியாக இயங்க வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,வணிகவளாகம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.நகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்,பொதுமக்களின் நலன் கருதி,இதனை நிறுத்திவைக்கவேண்டும் என்றும்,மாவட்டத்தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகஅரசு முன்வரவேண்டும் என்பதே, அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்,தொழில் வர்த்தகசபை,வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.



Tuesday, December 14, 2010

வனவிலங்குகளின் தாக்குதல்களிலிருந்து
பொதுமக்களைக் காக்க நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர்
பொள்ளாச்சி.டிச.14 கோவை மாவட்டம் வால்பாறையில்,தொடர்ந்து வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாகும் பொதுமக்களைக் காக்கும் வகையில்,குடியிருப்புப் பகுதிகளிலுள்ள புதர்களை அகற்றுவது,சாலைகளை சீரமைப்பது உள்ள்pட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டஆட்சியர் உமாநாத் தெரிவித்துள்ளார்.

கோவைமாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டக்குடியிருப்புகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள்,சிறுத்தைப்புலி மற்றும் காட்டுயானைகள் உட்பட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவரும் நிலையைத் தவிர்ப்பதற்காக,தமிழக அரசின் வழிகாட்டுதல்களுடன்,கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவைதங்கம், வால்பாறை நகரமன்றத் தலைவர் கணேசன்,ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உதவிவனப்பாதுகாவலர் தியாகராஜன்,மற்றும் தேயிலைத் தோட்டஅதிபர்கள் சங்கப்பிரதிநிதிகள்,அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள்,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வால்பாறை தேயிலைத் தோட்டக்குடியிருப்புகளில் வாழை,உள்ளிட்ட வனவலிலங்குகளின் கவனத்தைக் கவரும் வகையில் பயிர்களும்,நாய்,கோழி போன்ற சிறுவிலங்குககளை வளர்க்கக் கூடாது என்றும், அறிவுறுத்தப்பட்டது.
மேலும்,குடியிருப்புகளின் மிகஅருகாமையில் உள்ள புதர்கள் மற்றும் தேயிலைச் செடிகளில்,சிறுத்தைப்புலிகள் தஞ்சம் அடையும் நிலையுள்ளதால் இவற்றை அகற்ற தேயிலைத் தோட்ட அதிபர்கள் முனவரவேண்டும் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதேபோல்,வன எல்லையை ஒட்டியுள்ள சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில்,பேருந்து செல்லும் வசதியுள்ள அனைத்து சாலைகளிலும் அரசுப்போக்குவரத்துக் கழத்தின் சார்பில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும்,இதற்காக தனியார் தேயிலைத் தோட்டங்களுக்கு சொந்தமான சாலைகளை நகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக இந்த ஆலோசனைகளை அமல்படுத்த,தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தெரிவித்துள்ளார்.


போதையின் பாதையில் பொள்ளாச்சி..!

போதையின் பாதையில் பொள்ளாச்சி..!
பொள்ளாச்சி.டிச.14.கோவைமாவட்டம் பொள்ளாச்சியில்,கடந்த சில மாதங்களாக வலிநிவாரணிகளாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் மருந்துகளை,போதை மருந்துகளாகப் இளைஞர்கள் பயன்படுத்துவதும்,சமூக அக்கறையின்றி அவர்களிடையே இம்மருந்துகளை விற்பனை செய்து சிலர் லாபம் பார்ப்பதும் அதிகரித்துவருகிறது.காவல்துறையின் கையில் இக்குற்றவாளிகள் சிலர் சிக்கினாலும்,தொடர்கண்காணிப்பும்,கடுமையான தண்டனைகளையும் அளிக்க தமிழகஅரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே தற்போது, சமூகஆர்வலர்களின் உரத்தகுரலாகவும் இப்பகுதியில் ஒலித்துவருகிறது.

மருத்துவத்துறையில்,அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்பொழுது வலிநிவாரணிகளாக மார்ப்பின்,பெத்தடின்,கீட்டமைன்,பெனார்கன்,மற்றும் ஃபோர்ட்வின் போன்ற மருந்துகள் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் நோயாளிகள் மயக்கத்திலாழ்ந்து வலியிலிருந்து விடுபடுகின்றனர்.
ஆனால் இம்மருந்துகள் தரும் மயக்கத்தை,போதையாகக் கருதி,தற்போது உபயோகித்துவரும் நபர்களின் எண்ணிக்கையும்,இதனை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் பொள்ளாச்சியில் அதிகரித்துவருகிறது.
பொள்ளாச்சி,கோவை,சென்னை,திருச்சி மற்றும் கேரளமாநிலத்திலிருந்தும் சிலரால்,மொத்தமாக வாங்கிவரப்படும் இம்மருந்துகள்,சொகுசுக்கார்களில் வைத்தும்,நகரத்தையொட்டி, ஆளரவமற்றும், கண்காணிப்பும் அற்ற இடங்கள், மயானங்கள்,ஆகிய பகுதிகளில்வைத்தும், வாடிக்கையான இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்வதும்,ஊசிகளாகப் போடுவதும் நடைபெற்று வருகிறது.
இம்மருந்துகளை தொடர்ந்து உபயோகிப்பதால்,மூளையின் செயல்திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு,தங்களுக்கு போதைமருந்துக்கான பணத் தேவைக்காக,இம்மருந்துகளுக்கு அடிமையானவர்கள் கொலைகூட செய்யத் துணிவார்கள் என்ற பகீர்த் தகவலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எய்ட்ஸ் உட்பட ஆட்கொல்லி நோய்களுக்குள்ளாகும் ஆபத்துகளும் அதிகம் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் போதை மருந்துகளை ஊசிகள் மூலம் செலுத்திக் கொள்ளும் இளஞர்களும், இம்மருந்துகளை விற்பனை செய்ததாக சிலரும் என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எட்டுபேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தண்டணை பெற்றுள்ளனர்.இவர்களிடமிருந்து இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பொள்ளாச்சி பகுதியிலுள்ள மருந்து விற்பனைக்கூடங்களில்,மருத்துவரின் கையொப்பமில்லாத சீட்டுகளுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்யக்கூடாதென போலீசார்அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால்,இளையசமுதாயத்தை சீர்குலைக்கும் போதைமருந்து விற்பனையாளர் களுக்கும்,அதனை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடுமையான தண்டணைகள் இல்லாவிட்டால்,மீண்டும்,மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபடும் வாய்ப்புகளே அதிகம். எனவே,தமிழகஅரசின் அக்கறையும்,காவல்துறையின் கடுமையான கண்காணிப்பும்,தண்டணைகளுமே இப்பிரச்சினைக்கு தீர்வு என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.