பொள்ளாச்சி.டிச.19.கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துஅனைமலை தாத்தூரைச் சேர்ந்த பெண்,தனது குழந்தையை கிணற்றில்போட்டுக் கொன்று விட்டு,கொள்ளையர்கள் வந்து குழந்கையைப் பறித்துச் சென்று கொன்றுவிட்டதாக நாடகமாடியது,போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து அப்பெண்ணை ஆனைமலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து,ஆனைமலையருகேயுள்ள தாத்தூர் பகுதியில் வசிப்பவர் தர்மராஜ்.இவரது மனைவியான காளீஸ்வரி,தனது ஒன்றரை வயது மகன் சௌந்தர்ராஜனுடன்,ஆனைமலையருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று திரும்பிவரும் வழியில்,தலையில் ஹெல்மெட்டுடன்,இருசக்கரவாகனத்தில் தன்னை பின் தொடர்ந்து வந்த மர்மமனிதர்கள் இருவர் திடீரென்று தனது கழுத்திலிருந்த 4 சவரன் தங்கநகையைப் பறித்துக் கொண்டதோடு, தன்னிடமிருந்து குழந்தையையும் பறித்துக் கொண்டனர் என்றும்,
புpன்னர் அவர்களைத் துரத்திச் சென்று பார்த்தபோது,தனது குழந்தையை அங்குள்ள கிணற்றில் போட்டுக் கொன்று விட்டதாகவும்,ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார்,உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று,காளீஸ்வரி குறிப்பிட்ட கிணற்றிலிருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர்.மேலும் அப்பகுதியில் விசாரணையும் மேற்கொண்டனர்.
ஆனால் இவ்விசாரணையின்போது,காளீஸ்வரி குறிப்பிட்டதுபோல அப்பகுதியில் சம்பவம் ஏதும் நடைபெற்றதற்கான அறிகுறி எதுவும் தெரியாததால் போலீசார் குழப்பமடைந்தனர்.
இதனையடுத்து,காளீஸ்வரியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால்,போலீசாரின் சந்தேகம் காளீஸ்வரி மீதே திரும்பியது.இதனையடுத்து உரியமுறையில் விசாரித்த போலீசாரிடம்,தனது காதல் திருமணத்தால்,பெற்றோருடன் இணையமுடியாத விரக்தியில் தான் இருந்ததாகவும்,அதற்கு இடைய+றாக குழந்தை இருந்ததால் அதனைக் கிணற்றில் போட்டுக் கொன்றதாகவும்,இதனை மறைப்பதற்காக கொள்ளையர்கள் வந்து தனது நகைகளைப் பறித்துச் செல்லும்போது,குழந்தையையும் கிணற்றில் போட்டுக் கொன்றுவிட்டதாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனைமலைபோலீசார்,காளீஸ்வரி மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.பெற்ற தாயே,தனது குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவம்,இப்பகுதி பொதுமக்களிடையே பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
vedio in youtube-pollachi child murder.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment