pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Wednesday, December 16, 2009

காட்டு நாயக்கர் சமூக மக்கள் கோரிக்கை.!














பொள்ளாச்சி.டிச.16.கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டங்களில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 400.க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சாதிச்சான்றிதழ் மற்றும் இரண்டு ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள தாமரைக்குளத்தில் இந்து காட்டு நாயக்கர் நலச்சங்க துவக்கவிழா இன்று நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் திரு.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டங்களைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமூகத்தைச் சார்ந்த 400.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டன.
இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவ,மாணவியருக்கு அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்காக,இந்து காட்டுநாயக்கர் என சாதிச்சான்றிதழ் வழங்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து,இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க தமிழகஅரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.ஆனால்,தங்கள் சமூக மக்களுக்கு முழுமையான அளவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள இவர்கள்,அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதோடு,தங்கள் பிள்ளைகள் பயில்வதற்கு இப்பகுதியில் உறைவிடப்பள்ளி ஒன்றை அமைக்கவும் அரசு முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தில் தங்களையும் பயனாளிகளாக இணைக்க வேண்டும்,நலவாரிய அட்டைகள் வழங்கப்படவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழகஅரசு முன்வரவேண்டும் என்று இவ்விழாவின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment