பொருள்- எங்களின் மகள் தர்ஷினிபிரியா,கடந்த 31.3.2008.ல்,பள்ளியில் 4.ஆம் வகுப்பில் வேலை நேரத்தில்,பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.அம்சவேணி,வகுப்பாசிரியை திருமதி.சித்திரகலா ஆகியோரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு பார்வை பறிபோய் உடலும்,முகமும் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது தொடர்பாக மேற்படி பள்ளித்தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை மேல் தக்க நடவடிக்கை எடுக்க கோரும் மனு.
நாங்கள் ஷ முகவரியில் வசித்து வருகிறோம்,எங்களது மூத்த குழந்தை தர்ஷினிபிரியா- வயது.11-கடந்த 31.3.2008.ல் உடுமலைவட்டம்,எரிசினம்பட்டி ஊராட்சி ஒன்றியத் 2தொடக்கப்பள்ளியில் 4.ஆம் வகுப்பு படித்துவந்தாள்.
அச்சமயத்தில் அவரது வகுப்பில் உள்ள ஒருமாணவன் சிறுநீர் கழித்துவிட்டதால், வகுப்பாசிரியை சித்திரகலாவும்,தலைமை ஆசிரியை அம்சவேணியும் எங்களது குழந்தையை,தலைமை ஆசிரியை அறையிலிருந்த பினாயிலை எடுத்து வந்து சிறுநீர் கழித்தஇடத்தை சுத்தம் செய்யுமாறு மிரட்டி,அடித்ததால் எங்களது குழந்தை பயந்து ஷ ஆசிரியைகள் கூறியவாறு பினாயில் பாட்டிலை எடுத்துவந்து திறக்க,அதில் பினாயிலுக்கு பதிலாக பெயர் தெரியாத வகையில் இருந்த அமிலம் வெடித்து குழந்தையின் முகம்,உடல், முழுவதும் ஆசிட்டினால் காயம் ஏற்பட்டு முற்றிலும் வெந்து அவள் அலர ஷ ஆசிரியைகள் எங்களுக்கு தகவல் ஏதும் கூறாமல் தேவனூர்புதூரிலுள்ள தனியார்மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக,எங்களுக்கு காலதாமதமாக தகவல் கிடைத்தது.நாங்கள் பதறிச் சென்று தேவனூர்புதூர் மருத்துவமனைக்கு சென்று எங்கள் குழந்தையைப் பார்க்க அவள் உடலும்,முகமும் வெந்து கொப்புளங்களுடன்,கண் இரண்டும்,திறக்கஇயலாமல் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.
ஷ விபத்து குறித்து உடனே காவல்நிலையத்தில் புகார் கொடுக்க பள்ளிஆசிரியைகளை கேட்க,அதற்கு உடுமலையிலிருந்து கல்வி உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டபின்புதான் புகார் கொடுக்க முடியும் என்றும்.அது எங்களது தனிப்பட்டவிஷயம் என்றும் எங்களை மிரட்டினார்கள்.
உடுமலையிலிருந்து வந்த அதிகாரிகளும் எங்களது குழந்தையைப் பார்வையிட்டு ஷ ஆசிரியைகள் இருவரின்பேரிலும் அவர்கள் கவனக்குறைவாக பள்ளி நேரத்தில் இருந்து எங்களது குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு,முறையாக காவல்நிலையத்தில் வழக்கு புகார் தாக்கல் செய்ய இருப்பதாகவும்,துறைரீதியாக ஷ ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தகவல் கொடுப்பதாகவும் கூறியிருந்தனர்.
எங்களையும் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவேண்டாம் என்றும் மிரட்டினார்கள். ஷபுகார் கொடுத்தால் எங்கள் குழந்தைக்கு அரசு உதவி எதுவும் கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று ஷ பள்ளி துணைக்கல்வி அலுவலர் என்று சொல்லிய நபரும் மற்றும் இருவரும் ஷ ஆசிரியைகளுடன் சேர்ந்து எங்களை மிரட்டி வற்புறுத்தி ஏதும் எழுதாத பல வெள்ளைப்பேப்பர்களில் கையொப்பங்களையும் பெற்றுக் கொண்டனர்.
எங்களது குழந்தைக்கு ஷ அதிகாரிகளும்,ஆசிரியைகள் இருவரும் தேவனூர்புதூர் மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி கண் டாக்டரிடமும் 3 வாரங்கள் அவர்களே சிகிச்சையளித்தனர். எங்களது குழந்தையின் கண்பார்வை பறிபோய்விடும் என்று நாங்கள் அதிகாரிகளிடமும் ஷ விபத்து பற்றி புகார் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டும்,எங்களின் கையொப்பங்களை வெற்றுப்பேப்பர்களில் பெற்றதைக் கொண்டு தம்பதிகளான எங்கள் இருவரையும் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கால் ஷ ஆசிரியைகள்ட மிரட்டினர்.
எங்களது குழந்தைக்கு முகத்திலும், உடலிலும் ஷ ஆசிட் பட்டதால் ஏற்பட்ட காயதழும்பிற்கு எங்களாலான சிகிச்சையை செய்துவந்தோம். மேலும் கடந்த 10.10.08.ல் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று எங்களது மகள் தர்ஷினி பிரியாவின் கண்களைப் பரிசோதிக்க, ஆசிட் பட்டதால் வலதுகண் பார்வை முற்றிலும் போய்விட்டதாகக் கூறினார்கள்.
நாங்கள் உடனடியாக விபத்து சம்பந்தமான புகார்கள் அரசு அலுவலகங்களில் இருக்கும் என உடுமலை பள்ளிக்கல்வி அலுவலரிடம் கேட்க,அவ்விதமான விபத்து பதிவு எதுவும் இல்லையென தெரிந்pது அதிர்ச்சியடைந்தோம். இவ்விபத்திற்கு பிறகு தலைமைஆசிரியை உடுமலை சின்னப்பாப்பானூத்து ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளிக்கும்,வகுப்பு ஆசிரியை உடுமலை பூலாங்கிணறு நடுநிலைப்பள்ளிக்கும்தங்கள் செல்வாக்கைப்பயன்படுத்தி மாறுதல் பெற்று சென்று விட்டனர்.
இவர்களை நேரில் சந்தித்து எங்களின் குழந்தையின் நிலைபற்றி கூறியும்,விபத்துகுறித்து பதிவுசெய்யாமல் விட்டதைக்கேட்டபோது எங்களை பதிலுக்கு ஆட்களை வைத்து மிரட்டியதோடு,உன்னால் என்ன செய்யமுடியுமோ,அதைச் செய்துகொள் என்று கூறிவிட்டனர்.
அரசுப்போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராகப்பணிபுரியும் என்னால் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையில்,எங்கள் குழந்தைக்கு பார்வையை திரும்பப்பெறும் அறுவை சிகிச்சையை செய்ய,வசதியில்லாத நிலையில் உள்ளோம். ஏழைகளும் ஆதரவற்றவர்களுமான எங்களுக்கு ஷ ஆசிரியைகள் அப்போதே முறைப்படி புகார் கொடுத்து உதவாமல்,சுயநலம் கருதி விபத்தை மறைத்ததால் குழந்தையின் வலதுகண் பார்வை முற்றிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதற்கு காரணமாக இருந்த ஆசிரியைகள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் மீதும் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து விபத்தை மறைத்த குற்றத்திற்காகவும்,பார்வை பறிபோனதற்காகவும் விபத்தால் ஏற்பட்ட உடல்வலி மனவலி ஆகியவற்றுக்கு தக்க நட்டஈடு கிடைக்க உத்தரவிட்டும்,எங்களது குழந்தைக்கு அரசு செலவில் மீண்டும் பார்வை கிடைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏதும் அறியாத எங்கள் குழந்தைக்கு பார்வை பறிபோனதால் அவளது வருங்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.அவளக்கு பார்வையை திரும்பப்பெற விரைந்து நடவடிக்கை எடுத்து உதவும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment