pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Sunday, December 20, 2009

வால்பாறை -தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு
மற்றும் நிலம் வழங்க வலியுறுத்தி தேயிலை தினவிழாவில் தீர்மானம்.!

பொள்ளாச்சி.டிச.20 கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற சர்வதேச தேயிலை தினவிழாவில்,தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,குடியிருக்க வீடு மற்றும் விவசாயம் செய்வதற்காக இலவசநிலம் வழங்க மத்திய மாநிலஅரசுகள் முன்வரவேண்டும் என்பதுட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று-20.12.09-சர்வதேச தேயிலை தினவிழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு,பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேலு தலைமையில் காந்தி சிலை வளாகத்திலிருந்து புறப்பட்ட தொழிலாளர்கள் பேரணி,பொதுக்கூட்டம் நடைபெறும் அண்ணா சீரணி அரங்கில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் புதுடெல்லி இந்திய தொழிலாளர் சம்மேளன இயக்குனர் ஜான்,திட்டஇயக்குனர் பல்லவி மான்சிங்,மேற்குவங்காள தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சித்ததேவ்,அசோக்கோஷ் மற்றும் வால்பாறை தொழிற்சங்க தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வுpழாவில் பலஆண்டுகாலமாக தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள்,தோட்ட நிர்வாகம் வழங்கும் அடிப்படை வசதிகளில்லாத மிகச்சிறிய வீடுகளிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் ஆங்கிலேயர் காலத்திலிருந்து தோட்டஅதிபர்களின் கீழ் கொத்தடிமைகளாகவே வாழவேண்டியுள்ளது எனவும்,சொந்தநாட்டு குடிமக்களாக உள்ள தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் கடமை அரசுகளுக்கு உள்ளது என்றும் இக்கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
புpன்னர்,அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் விவசாயம் செய்வதற்குரிய நிலங்கள் ஆகியவற்றை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க மத்தியமாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளை அரசே ஏற்று நடத்தமுன்வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட தோட்டத்தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment