பொள்ளாச்சி.டிச.12.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பார்வையற்றோருக்கான இரண்டுநாள் சதுரங்கப்போட்டிகள் இன்று துவங்கியது.மாநிலஅளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பல்வேறுமாவட்டங்களைச்சேர்ந்த 75.க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பார்வையுள்ளவர்களே தடுமாறும் அளவிற்கு நுட்பமானதும்,கடுமையான மூளை உழைப்பும் தேவைப்படும் விளையாட்டுகளில் ஒன்றுதான் சதுரங்கப்போட்டி. ஆனால் விரல்நுனிகளையே கண்களாக கொண்டு,தங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சதுரங்கப் பலகை மற்றும் காய்களைக் கொண்டு பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்று,அசத்தலாக விளையாடிய இரண்டுநாள் போட்டிகள் கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று துவங்கியது. மாநிலஅளவில் நடைபெறும் இப்போட்டிகளில் கோவை,தஞ்சை,விழுப்புரம், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 75.க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 10 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இருபிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் ஆறு சுற்றுக்களுக்குப் பிறகு அதிகப்படியான புள்ளிகள் பெறும் முதல் பத்துவீரர்களுக்கு ரொக்கப்பரிசுகள், வெற்றிக்கோப்பைகள் மற்றும் பிரெய்லி முறையிலான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு நடத்தப்பெறும் போட்டிகளில் பங்கேற்பது தங்களுக்கு மிகவும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது என்று விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment