பொள்ளாச்சி.மார்ச்.5 பெட்ரோல்,டீசல் விலைஉயர்வு,ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அகிலஇந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டக்குழுவினர் பெண்கள் உட்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல்,டீசல் விலைஉயர்வு பொதுவிநியோகத்திட்டத்திலுள்ள முறைகேடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும்,ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவேண்டும் லாபம் ஈட்டும் பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது,தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவேண்டும் என்பதுட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்போராட்;டங்கள் நடைபெற்றன.
சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், பி.எம்.எஸ் மற்றும் ஐ.என்.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 200.பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொள்ளாச்சி காந்திசிலை அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினரை போலீசார் கைது செய்தனர்.இதனால் கோவை சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.
No comments:
Post a Comment