ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு
சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை.!
பொள்ளாச்சி.மார்ச்.16 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்கு,சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு,மார்ச்.16 முதல் ஏப்ரல் 15.வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு,வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவாமலிருக்கவும்,விலங்குகளுக்கு இடையூறின்றி இருக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.இச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள், மான்கள்,காட்டெருமைகள்,குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் அரியவகை மரங்களும் உள்ளன.இவற்றைப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதுண்டு.
தற்போது கோடைகாலம் முன்னதாகவே தொடங்கியதையடுத்து, சரணாலயப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.மேலும் குரங்கு அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் வனத்தின் அடர்ந்த பகுதிகளிலுள்ள விலங்குகள் நீர் மற்றும் உணவைத்தேடி பல்வேறு இடங்களுக்கும்,இடப்பெயர்ச்சியை மேற்கொள்ளும் என்பதால்,இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமலிருக்கவும்,
வறட்சியின் காரணமாக,வனப்பகுதிகளிலுள்ள மரங்கள் மற்றும் செடி,கொடிகள் தனது பசுமையை இழந்து காய்ந்து,எளிதில் தீப்பிடிக்கும் வகையில் உள்ளதால்,இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் காட்டுத்தீ ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் வகையிலும்,மார்ச்.16.ஆம் தேதி முதல்,ஏப்ரல.15 வரை,ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சரணாலயம் திறப்பதற்கான மறுதேதி குறித்து தமிழகஅரசின் உத்தரவு வரும்வரை,இத்தடை நீடிக்கும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment