pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Monday, October 12, 2009

டாப்ஸ்லிப் - யானைகள் தினம்.!

யானைகள் தினம்.!

பொள்ளாச்சி.அக்.11 காட்டின் வளம் குறித்தும்,காட்டுவிலங்குகளின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் வனத்துறை சார்பில்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்ஸ்லிப்பில், யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

புவி வெப்பமடைவதால் ஏற்படும் மாற்றங்கள்,அதனால் மனிதர்களுக்கு எதிராக இயற்கை வெளிப்படுத்தும் சீற்றங்கள்,அதன் விளைவாக ஏற்படும் அழிவுகள் என,உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் நிலையில்,இயற்கைக்கு ஆதரவாகவும்,அதனைப் பாதுகாப்பதிலும் மனிதர்கள் இணைந்து செயலாற்றவேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது.

ஆனால்,கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் அன்னையர் தினம்,தந்தையர் தினம்,முதியோர் தினம்,மற்றும் காதலர் தினம்; உட்பட பல்வேறு அம்சங்களை குறிக்கும் வகையில் சிறப்புதினங்கள் கொண்டாடப்பட்டு வருவதைப்போல்,மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவையான இயற்கையையும்,இயற்கையை செழிப்பாக வைத்திருக்கும் விலங்குகளையும் நினைவு கூறும் தினங்கள் கொண்டாடப்பட்டாலும்,அதற்கு போதிய அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதே இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

எனவே இதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும்,இது குறித்த செய்திகள் பொதுமக்களிடையே கொண்டு செல்லப்படும் வகையிலும் டாப்ஸ்லிப்பில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டதோடு,பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இவ்வாறு நடத்தப்படும் விழாக்களினாலேயே தங்களுக்கு வனம் மற்றும் விலங்குகள் குறித்த பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்கள் nதிரிய வருகிறது என்றும்,இது பயனுள்ளதாக இருக்கிறது என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனா
இயற்கையை பாதுகாப்பது என்பது நமது சந்ததிக்கான சொத்துக்களையும் செல்வங்களையும் சேர்ப்பது போன்றது என்று வலியுறுத்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரான திரு.சமயமூர்த்தி,இந்த உலகத்தில் வாழ்வதற்கு மனிதர்களுக்கு உள்ள உரிமைகளைப்போலவே,விலங்குகளும் வாழ்வதற்கு உரிமையுள்ளது என்றும்,அந்த உரிமைகளை நாம் மதித்தால் மட்டுமே,நமது எதிர்கால சந்ததியினரும் பயன்பெறமுடியும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரான திரு.சமயமூர்த்தி தனது கருத்தை தெரிவிக்கிறார்.

இயற்கையை ரசிக்கும் வாய்ப்பை பெறுபவர்கள்,அதை வெறும் பொழுது போக்காக மட்டுமே எண்ணாமல்,மனித வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கும் வுpலங்குகளையும்,வனங்களையும் கொண்ட இயற்கையை பாதுகாப்பதில் நமது பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதையும்,முடிவு செய்து கொள்ளவேண்டும்.மக்களின் நம்பிக்கைகளுக்கும்,செயல்பாடுகளுக்கும் ஏற்ற விதமாக திட்டங்கள் தீட்டப்படும்போது அது வெற்றிபெறுகிறது என்று கூறும் கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத், விலங்குகள் உட்பட இயற்கையை அழிப்பதன் மூலம் செய்யப்பட்டு,விற்பனைக்கு வரும் பொருட்களை நாம் வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

1 comment: