pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Tuesday, July 20, 2010

கேரளா வனத்துறையினரின் அத்துமீறல்.!

கேரளவனத்துறையினர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.20 கேரளமாநிலம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியிலுள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்புகளில் இருந்து,கொண்டுவரப்பட்ட தெருநாய்களை,கோவைமாவட்டம் ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் விடுவித்த கேரளவனத்துறையினர்,15 பேர்,கைதுசெய்யப்பட்டு,
பின்னர் மேல்நடவடிக்கைக்காக கேரளவனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளமாநிலத்திலிருந்து கடந்த பல வருடங்களாக மருத்துவக்கழிவுகள், மாடு,கோழி ஆகியவற்றின் இறைச்சிக்கழிவுகள் கொண்டுவரப்பட்டு கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகள் உள்ளிட்ட கேரளதமிழகஎல்லைகளில் கொட்டப்பட்;டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நிலம் மற்றும் நீராதாரங்கள் மாசுபட்டுவருகின்றன.இது குறித்து பல்வேறு அமைப்புகள் தமிழக கேரளஅரசிடம் முறையிட்டும் இது வரை உரிய நடவடிக்கைகள் இல்லை..,

இந்நிலையில் கேரளமாநிலம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலுள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் தெருநாய்கள் கேரளவனப்பகுதியிலுள்ள மான்,முயல் உட்பட சிறுவிலங்குகளை வேட்டையாடுவதாகக் கூறி,அங்கிருந்து 8 நாய்களைப்பிடித்து வந்த கேரளவனத்துறையினர்,அவற்றை ஆனைமலைபுலிகள் காப்பத்திற்குட்பட்ட ஆழியாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலைபுலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு வனக்காப்பாளர்கள் வேட்டைத்தடுப்புக் காவலர்கள்,வாகனஓட்டுனர் உள்ளிட்ட கேரளவனத்துறையினரான 15 பேரை சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர்.இதனால் இப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
புpன்னர் இதுகுறித்து கேரளவளனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அப்போது பரபம்பிக்குளம் புலிகள் காப்பக வனக்காப்பாளர் சஞ்சயன்குமார்,பிடித்துவரப்பட்ட தெருநாய்களை கேரள எல்லைப்பகுதியிலுள்ள கிராமங்களில் விடச்சொன்னதாகவும்,ஆனால் நாய்களை கொண்டுவந்த வனத்துறை ஊழியர்கள் குடிபோதையில் தவறுதலாக தமிழக வனப்பகுதியில் விடுவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

- பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணியின் ஆடியோ-யூட்யூப்-சன்பொள்ளாச்சியில் உள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 15 பேரையும்,துறைரீதியான மேல்நடவடிக்கைக்காக கேரளவனத்துறை அதிகாரிகளிடம்,தமிழகவனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.கேரளவனத்துறையினர் ஒட்டுமொத்தமாகக் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக்கழிவுகளைக் கொட்டி,தமிழகத்தின் நிலம் மற்றும் நீராதாரங்களை மாசு படுத்திவந்த கேரளம்,தற்போது தமிழகவனப்பகுதிகளையும் மாசு படுத்தும் புதிய உத்தியாகவும்,சதியாகவும் தெரிகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

என்ன செய்யப்போகிறது தமிழகஅரசு..?

No comments:

Post a Comment