சாதிவாரியான கணக்கெடுப்பே தேவை-கி.வீரமணி
பொள்ளாச்சி.ஜுலை.4 – தாழ்த்தப்படடவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது,அதற்கு அடிப்படையான சாதிவாரியான கணக்கெடுப்பையே மத்தியஅரசு எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள அனைவரையும் இணைத்து போராட்டங்கள் நடத்தவும்,மாநாடு நடத்தவும் திராசவிடர் கழகம் ஆயத்தமாக உள்ளது என திராவிடர் கழகத்தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் திராவிடர்கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிமுகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திராவிடர் கழகத்தலைவர் வீரமணி,வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்தபின்பும்கூட,சாதிவாரியான கணக்கெடுப்பிற்கு பல அமைச்சர்களும்,கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
தூழ்த்தப்பட்டவர்கள்,மலைசவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு,இடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது,அதற்கு அடிப்படையாக உள்ள சாதிவாரியான கணக்கெடுப்பையே மத்தியஅரசு எடுக்கவேண்டும் என்று தமிழகமுதல்வர் உட்பட பலர் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே,சாதிவாரியான கணக்கெடுப்பை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளிலும் உள்ள,ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து போராட்டங்கள் நடத்தவும், டெல்லியில் மாநாடு நடத்தவும்திராவிடர் கழகம் தயாராக உள்ளது என்று திரு.கி.வீரமணி தெரிவித்தார்;.
பேட்டி-வீரமணி-திராவிடர் கழகம். பார்க்க -youtube-sunpollachi
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment