pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Monday, June 28, 2010

கல்வி கட்டணக் கொள்ளை. காங்கிரஸ் புகார்.!

அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை.!
காங்கிரஸ்கட்சி கோரிக்கை.!

பொள்ளாச்சி.ஜுன்.28 கோவைமாவட்டம் பொள்ளாச்சியில்,அரசு அறிவித்த கட்டணத்தைவிட,அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது,தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று,கோவைதெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி சார்ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு 2010-2011.ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணத்தை தமிழகஅரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.இதனைத் தவிர,வேறு எந்தக்கட்டணத்தையும் தனியார் பள்ளிகள் மாணவ,மாணவிகளிடமிருந்து வச+லிக்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தும், கோவைமாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து,அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால்,இதனை வெளியில் தெரியப்படுத்தினால்,தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால்,பெற்றோர்கள் புகார் தர முன்வருவதில்லை.ஆகவே,தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதோடு,தனியார் பள்ளிகளில் சோதனைகள் நடத்தி அதிகமான அளவில் வசூல் செய்த கட்டணங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களிடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும்,மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில்,மாவட்டத் துணைத்தலைவர் கன்னிமுத்து,பழனி செவ்வேல்,உட்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் தமிழகஅரசு இப்பிரச்சினையில் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்,காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment