உள்ளே தொட்டால் உசுரு இனிக்கும்
தெள்ளுதமிழ் எங்கள் தமிழ்மொழி..!
என்றென்றும் செம்மொழி- எனும்
ஏற்றம்பெறும் மொழி-என்று
அறைகூவிடும் செம்மொழி மாநாடு..!
தமிழ்இனம் தனிஇனம்- எனும்
தாரகமந்திரத்தை…
தரணிக்கு உரைத்திடும் மாநாடே
தமிழ்ச் செம்மொழி மாநாடு..!
கோவை எனும் பாவை
தமிழ்க்கோவையால் மலர்ந்திடும் மாநாடு
ஆலைகளின் நகரம்-இனி
தமிழ்சோலைகளின் நகரமாம்,
முத்தமிழ் கலைஞராம்..,
மூத்த தமிழ்அறிஞராம்
எங்கள் தமிழன்னை தரணிக்கு அளித்திட்ட
அருந்தமிழ்க் கொடையாம்..!
செந்தமிழை கனியாக்கி,
தன்னை கிளியாக்கி
தமிழ்ச்சுவை பருகியவர் மட்டுமல்ல..,
தமிழர்தம் வாழ்வுதனை
தலைநிமிரச்செய்தவர்..!
தலைதரத் துணிந்தான் தம்பிக்கு
குமணவள்ளல்-உடன்பிறப்பான
தமிழ்இனம் வாழ-தன்னையே தந்தான்
கருணைவள்ளல்..!
வண்டமிழ்வானின் தலையுச்சிதனை
முகர்ந்தவர்-அதனால் நல்லோரின்
எண்ணங்களையும் கவர்ந்தவர்..!
என-வாழும் தமிழொன்று,நாளும்
வளரும் தமிழுக்காய் நடத்தும்
தமிழ்செம்மொழி மாநாட்டில்..,
செம்மொழியெனும் மான் ஆட..,
கனிமொழியெனும் குயில்பாட
குறளமுதம் தந்தவரை..
தமிழ்க்குரல் அமுதால் வாழ்த்த வந்தோம்
வீழ்வது நாமானாலும்
வாழ்வது தமிழாகட்டும்
உடல்மண்ணுக்கு.. உயிர்தமிழுக்கு..!
வாழ்க உலகத் தமிழ்செம்மொழி மாநாடு.!
--நன்றி வணக்கம்.!
-கவிஞர்.முத்தமிழ் செல்வி.-கோவை
No comments:
Post a Comment