செம்மொழி மாநாட்டின்பேரில்,
இலவசபட்டா மோசடி.!...,8 பேர் கைது.!
பொள்ளாச்சி.ஜுன்.8 செம்மொழி மாநாட்டை முன்னிட்டு,ஒருலட்சம் பேருக்கு இலவசவீட்டுமனைப்பட்டா வழங்கவுள்ளதாகவும்,இதேபோல் வால்பாறை பகுதியில் வசிப்பவர்களுக்கும் இலவசபட்டா வழங்க உள்ளதாகக் கூறி,அதற்காக கட்டணம் வசூலித்த எட்டுபேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்,இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவைமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு,நேற்று வால்பாறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேர்,இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு ஒன்றாக மனுக் கொடுத்தனர்.இவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் ஒரேமாதிரியாக அச்சடிக்கப்பட்டிருந்ததைக்கண்ட மாவட்ட ஆட்சியர் உமாநாத்,இம்மனுக்கள் குறித்து சந்தேகம் அடைந்தார்.
இதனையடுத்து வால்பாறை வட்டாட்சியர் சந்திரனிடம் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.இது குறித்து மனுக்கள் அளித்த பொதுமக்களிடம்,நேற்றுமாலை சந்திரன் விசாரணை மேற்கொண்டதில்,நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஒருலட்சம்பேருக்கு,தமிழகஅரசு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் அளிக்கவுள்ளதாகவும்,இத்திட்டத்தின்கீழ் வால்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வீட்டுமனை அளிக்கப்படவுள்ளதாகவும்,வால்பாறை நகராட்சி,ஏழாவது வார்டு உறுப்பினர் காளிமுத்து உட்பட சிலரைக்கொண்ட கும்பல் ஒன்று,இதற்கு கட்டணமாக தலா ரூ.100 முதல்,ரூ.500 வரை,1960 பேரிடம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசால் அறிவிக்கப்படாத திட்டத்தின் பெயரைக்கூறி,பல லட்சரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதை அறிந்த வட்டாட்சியர் சந்திரன் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து,தமிழகஅரசின் உத்தரவுப்படி,வழக்குப் பதிவு செய்த வால்பாறை போலீசார்,வால்பாறை நகராட்சி உறுப்பினர்,காளிமுத்து,சத்துணவு அமைப்பாளராகவுள்ள ஸ்டீபன்,குரங்குமுடி பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் அன்பழகன்,செல்வம்,ஸ்டான்மோர் பகுதியைச் சேர்ந்த இருதயராஜ்
ராஜேந்திரன்,இஞ்சிப்பாறையைச் சேர்ந்த துரைப்பாண்டி,இராமர் ஆகிய எட்டுபேரையும் இரவோடு இரவாக கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படாத,இலவச பட்டாகோரும் ஏராளமான விண்ணப்பங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பேட்டி-மாடசாமி-வால்பாறை டி.எஸ்.பி.
இம்மோசடியில் ஈடுபட்டுள்ள தமிழ்செல்வி மற்றும் மும்மூர்த்தி ஆகியோரும் வால்பாறை போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,ருகெவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
செம்மொழி மாநாட்டின் பெயரால் நடைபெற்ற இச்சம்பவம்,இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தனிநபர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி,பொதுமக்களை அணுகும்போது,பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும்,திட்டங்கள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்து உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்றும் வால்பாறை வட்டாட்சியர் சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேட்டி-சந்திரன்-வட்டாட்சியர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment