“ஆபரேஷன் கிரீன் ஹன்ட்”--"OPERATION GREEN HUNT" என்றால் என்னவென்று தெரியுமா..?.நக்சல்பாரி இயக்கத்தையம்,மாவோயிஸ்ட் கட்சியையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு அறிவித்துள்ள உள்நாட்டுப்போரின் பெயர்தான் இது.
ஜார்கண்ட்,சட்டீஸ்கர்,ஒரிஸ்ஸா, மற்றும் மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்
பரவியிருக்கும் தண்டகாருண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்ட கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே,இந்த தாக்குதலின் நோக்கம் என்று,மத்தி
ய உள்துறை அமைச்சரான “மாண்புமிகு” ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். மேலோட்டமாகப் பார்த்தால்,அதில் என்ன தவறு.?,என்றுதான் உங்களுக்கு கேட்கத்தோன்றும். ஆனால் இதன் பின்னனியில் உள்ள குமட்டும் அரசியலும்,அதன் கோர நோக்கமும் நீங்கள் ஒரு இந்கியக்குடிமகன் என்பதால் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.தொடர்ந்து படியுங்கள்.
அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும், விமானப் படைத்தளமும் அங்கே
விரைந்து உருவாக்கப்படுகின்றன.சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது.சி.ஆர்.பி.எஃப்,கோப்ரா,சி.60,கிரேஹவுண்ட்ஸ்,இந்திய-திபெத் எல்லைப்படை,நக்ஸலைட் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகிறது.இந்திய இராணுவ ஹெலிகாப்டர்களும்,அமெரிக்க இராணுவ செயற்கை;கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன.இந்திய இராணுவஅதிகாரிகள் போரை வழிநடத்துகிறார்கள்.சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும்,இந்தப் போருக்கு மத்தியஅரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ.7300 கோடி…,மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கனவே சட்டீ
ஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வாஜுடும் என்ற கூலிப்படை,கடந்த நான்கு ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து,மூன்று லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது.ஐம்பதாயிரம் பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.தற்போது ஆபரேஷன் கிரீன் ஹன்
ட்”டின் விளைவாக மேலும் பலஆயிரம் பழங்குடிமக்கள் காடுகளைத்துறந்து ஓடுகிறார்கள்.“இலங்கை ராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார் சட்டீஸ்கார் மாநில டி.ஜி.பி.விஸ்வரஞ்சன்.
இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் ரகசியம் இதுதான்.தண்டகாரண்யாவின் காடுகளிலும்,மலைகளிலும் அற்புதமான அரிய கனிமவளங்கள்,புதைந்து கிடக்கின்றன.உயர்தரமான இரும்புத்தாது,செம்பு தங்கம்,வைரம்,அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட்,சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்புக்கற்கள்,நிலக்கரி,பளிங்கு கிரானைட்,சிலிக்கா,குவார்ட்சைட் போன்ற 28 வகையான கனிமவளங்களும்,காட்டுவளங்களும்,நீர்வளமும் நிறைந்திருக்கின்றன.

பன்னாட்டு கம்பெனிகளும் இந்தியத் தரகு முதலாளிகளும் இஷ்டம்போல இந்தப்புதையலை அள்ளிச்செல்லமுடியாமல் குறுக்கே நிற்கிறார்கள் மாவோயிஸ்ட் கொரில்லாக்கள்.சிதம்ரத்தின் கொலை வெறிக்கு காரணம் இதுதான்;..!
ஆம்,தண்டகாரண்யாவின் காடுகள் மலைகள்,ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்கு தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது இந்தியஅரசு.
ஸ்டெரிலைட் கம்பெனியின் தாய் நிறுவனமான வேதாந்தா என்ற பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒரிஸ்ஸா அரசு 40 கிலோமீட்டர் நீளமுள்ள நியாம்கிரி மலையை தாரை வார்த்திருக்கிறது.இந்த மலையிலுள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் 7 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16 சதமும், இரும்புத் தாதுவில் 20 சதமும்,சட்டீஸ்கர் மாநிலத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாடா,ஜிண்டால்,போன்றவர்களுக்கு கிரையம் எழுதித்தந்து விட்டது அம்மாநிலஅரசு.
இரும்புத்தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை ஒருடன்னுக்கு 210 டாலர்.இது இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம்ரூபாய்.ஆனால் இம்முதலாளிகள் அரசுக்கு, தரவிருக்கும் விலை டன்னுக்கு 27 ரூபாய் மட்டுமே.இதைப்போல ஒன்றிரண்டு அல்ல,நூற்றுக்கணக்காண ஒப்பந்தங்கள்..!
பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை.அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்pன்றன.
சுpன்னஞ்சிறு ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும்,ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறிவிட்டது.இங்கிருந்து மட்டும் பத்துலட்சம் பழங்குடி மக்களும்,விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.டாடா,பிர்லா,ஜிண்டால்,எஸ்ஸார்,மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும்,வேதாந்தா போஸ்கோ,ஹோல்சிம்,லபார்க்,ரியோடின்ட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளைப் போல வட்டமிடுகிறார்கள்.
பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ,டாடா, வேதாந்தா,மிட்டல்,ஸ்டெரிலைட்,ரிலையன்ஸ்,ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எதிராகவும்,ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள்.அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டி முடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை.கோபால்பூரில் டாடாவின் இரும்பாலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது..ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம்தோண்டி தங்கமும்,பிளாட்டினமும் எடுக்கவந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை.இவையெல்லாம் மாவோயிஸ்ட் ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல.தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.நமது நாட்டில் இயற்கைவளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில்,இடதுசாரி தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால்,அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும் என்று இந்தப்போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன் சிங்.
டாடா,அம்பானி,மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும்,அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன் சிங் கூறும்செய்தி.
இந்தப்போர் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் மடடுமல்ல,இது மக்களுக்கு எதிரான போர்.
காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை.கனிமவளங்களை கைப்பற்றுவதற்காக அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.கடல் மீனவர்களின் உரிமை.பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள்,மீன்வளத்தை அள்ளுவதற்காக மீனவர்களுக்கு கடலில் எல்லைக் கோடுகள் போடுகிறது.மீறினால் காட்டுவேட்டை போல,கடல்வேட்டை ஒன்றை இந்த அரசு அறிவிக்கும்.
வுpதை என்பது விவசாயிகளின் மரபுரிமை.ஆனால் அதனை பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு.இனி நமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமைகோரினால் போலீஸ் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும்.மீறினால் போரும் தொடுக்கும்.

பழங்குடிகள் விவசாயிகள்,மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மடடுமல்ல. பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன.
தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்காகத்தான் ஒரிஸ்ஸாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.அதே தென்கொரிய ஹ{ண்டாயின் முதலீட்டுச்சூழலைப் பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள்.பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்த பட்ச ஊதியம் முதல் பணிநிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றன.
கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித்தருவதற்காக அரசுப்பள்ளிகள்,கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச்சூழலுக்காக அரசின் இலவச மருத்துவமனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.
இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாக் காடுகளைத்தாண்டி,நாடு முழுவதும் வியாபித்திருக்pறது.போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன.ஆனால் போரின் நோக்கம் நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறு காலனியாக்கமாக மாறிவருகின்றது.
இந்தமறுகாலனியாக்க் கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும்,கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன.கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக் கொள்வதில் மட்டும் அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.
1994.ல் “காட்” ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து,மத்தியிலும்,மாநிலங்களிலும், வௌ;வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும்,தனியார்மைய, தாராளமயக் கொள்கையிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டுமுதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.
ஆம்..மறுகாலனியாக்கக் கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாயிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக,காண்ட்ராக்டர்களாக,பங்குதாரர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடீஸ்வரர்களின் மன்றமாக இருக்கிறது நாடாளுமன்றம்.அரசுஅதிகாரமும்,நீதியும்கூட பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டன.
சீரழிந்து நாறிக்கிடக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக,தன்னலனைத் துறந்தவர்களாக,லஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக பட்டங்கள்,பதவிகளுக்காக பல்லிளிக்காதவர்களாக,இழப்புக்கும்,தியாகத்துக்கும் அஞ்சாதவர்களாக நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல் பாரி புரடசியாளர்கள் மட்டும்தான் என்று பழங்குடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர் மாவோயிஸ்ட்டுகளும்,நக்சல்பாரிகளும்.எனவேதான் ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்துவரும் சூழலில் மறுகாலனியாக்க தாக்குதல்களின் தீவிரம்,மக்களை நக்சல்பாரி புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.
எனவேதான் நம்நாடு எதிர் கொள்ளும் மிகப் பெரிய உள்நாட்டுபாதுகாப்பு அபாயம் என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன் சிங். அத்வானி முதல்,புத்ததேவ் வரை அதனை வழிமொழிகிறார்கள்.தங்களுடைய எதிரிகள் யார்.? என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் நமது நண்பர்கள் யார்.? என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல் ஓட்டுக்கு லஞ்சம்.இலவசத்திட்டங்கள் போன்ற ஆயுதங்களால் அவர்களைத்தாக்கி ஓட்டுவேட்டையும் நடத்துகின்றனர். இந்த ஓட்டுவேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால்,உடனே காட்டுவேட்டை தொடங்குகிறது.
மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதால்தான்,அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக, ப.சிதம்பரமும்,மன்மோகன்சிங்கும் கூறிவருவது கடைந்தெடுத்த பொய்.அடுக்கடுக்காய் தொடங்கப்படும் மறுகாலனியாக்கத் தாக்குதல்களால் வாழ்க்கை பறிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு,எதிர்த்துக் கேட்டால் ஒடுக்கப்பட்டு கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள்.இதை அரசு அறிந்தே இருக்கிறது.இந்த வெடியின் திரியும் அதனைப்பற்ற வைக்கும் பொறியும்,நக்சல்பாரிகள்தான் என்ற உண்மையும் அரசுக்கு தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக்கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது.
மறுகாலனியாக்க எதிர்ப்பின் கூர்முனையாகஇருக்கும் நக்சல்பாரி இயக்கத்தை முறியடிக்க முயல்கிறது. “ஆப்ரேஷன் கிரீன்ஹன்ட்” என்ற நக்சல்வேட்டையின் நோக்கம் இதுதான்.
No comments:
Post a Comment