பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.!
பொள்ளாச்சி.ஆக.13 தமிழக எல்லைப்பகுதிகளில் மருத்துவக்கழிவுகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளை தொடர்ந்து கொட்டி தமிழகத்தை தனது குப்பபைத்தொட்டியாகப் பயன்படுத்திவரும் கேரளஅரசுக்கு கண்டணம் தெரிவித்தும், இதுகுறித்து மத்திய மாநிலஅரசுகள் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கோவைமாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு உட்பட தமிகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் லாரிகள் மூலம் இறைச்சிக்கழிவுகள்.மருத்துவக் கழிவுகள் வேதிப் பொருட்களின் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொட்டிச் செல்லும்போக்கு பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது என்றும்,
இதன்மூலம் தமிழகத்தை தனது குப்பைத்தொட்டியாக கேரளஅரசு பயன்படுத்திவருவதாக பெரியார் திராவிடர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறு கழிவுகளை லாரிகள் மூலம் கேரளாவிலிருந்து கொண்டுவரும்போது அவற்றை தமிழகத்திற்குள் அனுமதிக்கும் சோதனைச்சாவடிகளின் அதிகாரிகள் இங்குள்ள நீர்வளம்,நிலவளம் ஆகியவை மாசுபடுவதற்கு துணைபோகும் அவலநிலையும் தொடர்கிறது என்றும்,
எனவே இப்பிரச்சினையில் மத்திய மாநிலஅரசுகள் தலையிட்டு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பெரியார்திராவிடர்கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 100.க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழக்த்தொண்டர்கள் மற்றும் ம.தி.மு.க,ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment