pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Wednesday, February 17, 2010

நீதி வேண்டும்..,இளம்பெண் அனிதா புகார்..!

ஏமாற்றிவிட்ட காதலனை,திருமணம் முடித்துவைக்கக்
கோரி,சார்ஆட்சியரிடம் மனு.!

பொள்ளாச்சி.பிப்.17. நான்கு வருடமாகக் காதலித்துவிட்டு,தன்னை ஏமாற்றிவிட்ட காதலனை தனக்கு திருமணம் முடித்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி,சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு தன்பெற்றோருடன் வந்து, இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பொன்மலையூர் பகுதியைச் சேர்ந்த வாசுவின் மகள் அனிதா.இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறி,அனிதாவை தனிமையில் வரவழைத்து,அனிதாவை மிரட்டி தகாதஉறவு வைத்துக் கொண்ட சசிக்குமார்,பின்னர் அவரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனை அடுத்து பொள்ளாச்சி அனைத்துமகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அனிதா,புகார் கொடுத்து பலதினங்களாகியும்,மகளிர் காவல் நிலையப் போலீசார் உரியநடவடிக்கை எடுக்கவில்லையென்றும்,ஒருதலைப்பட்சமாக விசாரணை மேற்கொண்டு சசிக்குமார் மீத எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும்,மகளிர் காவல்நிலையப் போலீசார் மீது குற்றம்சாட்டிய அனிதா,இன்று-17.2.10-மாலை- பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து,புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் மகளிர் காவல்நிலையப் போலீசார் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,தன்னை ஏமாற்றிய காதலனை தனக்கு திருமணம் செய்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனிதா தெரிவித்திருந்தார்.
தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் வந்து இளம்பெண் ஒருவர், தன்னைக்காதலித்து ஏமாற்றிய காதலனை தனக்கு மணம்முடித்து வைக்கவேண்டும் என்று கோரி மனுஅளித்த சம்பவம்,இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment