pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, February 25, 2010

பி.ஏ.பி.காண்டூர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை.. !


பொள்ளாச்சி.பிப்.25 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பி.ஏ.பி. எனப்படும்,பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட காண்டூர் கால்வாயில் ஏற்படும் நீர் சேதாரத்தை தடுக்கும் வகையில்,இக்கால்வாயை முற்றிலுமாகப் புதுப்பித்துதரவேண்டும் என்று,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி,உடுமலை மற்றும் திருப்பூர்,ஈரோடு,கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்,பி.ஏ.பி.திட்டத்தின்கீழ்,உடுமலை திருமூர்த்தி அணைவழியாக பாசனவசதிபெற்றுவருகின்றன.
இந்நிலையில்,இப்பாசனத்திட்டத்திற்கு அடிப்படையாக பரம்பிக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் நீர்,சர்க்கார்பதி மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 49.3 கி.மீ தூரத்திற்கு உடுமலை திருமூர்த்தி அணைவரையுள்ள காண்டூர் கால்வாய் வழியே செல்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலையின் அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே அமைந்துள்ள இக்கால்வாயின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த மரங்களின் வேர்கள் துளைப்பதாலும்,அவ்வப்போது ஏற்படும் சிறுஅளவிலான நிலச்சரிவுகளின் காரணமாகவும், கால்வாயின் பெரும்பகுதி கடுமையான சேதத்திற்குள்ளாவதும், அதனை பொதுப்பணித்துறையினர் சீரமைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறு சேதமுற்ற பகுதிகளால் சர்க்கார்பதியிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டால்,திருமூர்த்தி அணைக்கு 700 முதல் 750 கனஅடிநீர் மட்டுமே சென்று சேர்கிறது.
எனவே இக்கால்வாயினை வலுவான நிலையில் பொதுப்பணித்துறையின் மத்pப்பீட்டின்படி,ரூ.125 கோடி செலவில் முழுமையாக புதுப்பித்துதர வேண்டும் என பி.ஏ.பி.விவசாயிகள் சார்பில்,திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment