பொள்ளாச்சி.நவ.8 தொடர்மழையின காரணமாக பொள்ளாச்சியை அடுத்துள்ள சண்முக புரம் ஆஞ்சனேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால்,கோவில் பூசாரிகள் 3 பேர் மற்றும் காவலாளி ஒருவரும்,கோவிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் சென்று அவர்களை மீட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது சண்முகபுரம்.இங்குள்ள பாலாற்றங்கரையேரத்தில் ஆஞ்சனேயர் கோவில் அமைந்தள்ளது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இப்பகுதியல் பெய்த கனமழைகாரணமாக இன்று காலை திடீரென இக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
ஆனால் இன்று அதிகாலை தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ள கோவிலுக்குள் சென்றிருந்த கோவில் பூசாரிகள் 3 பேரும்,இரவுநேரக்காவலாளி ஒருவரும் எதிர்பாராத வகையில் கோவிலைவிட்டு வெளியேற முடியாமல் போனது.மேலும் வெள்ளம் கோவிலை சூழ்ந்ததால் கோவிலின் கோபரத்தின் மீது ஏறி அவர்கள் உயிர்பிழைத்தனர்.
இதனையடுத்து கோபுரத்தின் மீதிருந்து,அவர்கள் எழுப்பிய குரலைக்கேட்ட அருகாமையிலிருந்த பொதுமக்கள்,உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதனால் சிறிதுநேரம் அப்புகதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் அவர்களை மீட்டனர்.
இதனிடையே பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் வருவாயக்கோட்டாட்சியர் அன்பழகன் உட்பட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று மீட்புப்பணிகளையும்,பாதுகாப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தினர்.
No comments:
Post a Comment