குடிநீர் கேட்டு
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முற்றுகை.!
பொள்ளாச்சி.நவ.18 கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகத்தை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் உள்ளிட்ட 9.வது வார்டு பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும்,இதனால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது என்றும் புகார் தெரிவித்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் இன்று காலிக்குடங்களுடன் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.
புpன்னர் நகாராட்சி ஆணையர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால்,தங்கள் குழந்தைகளைக்கூட பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத நிலை நீடித்துவருகிறது என்றும்.இதனால் தங்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது என்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறினர்.
இதனையடுத்து உடனடியாக அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி ஆணையர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.குறிப்பு-பொள்ளாச்சியை மையமாகக் கொண்டுதான்,கோவை,திருப்பூர், ஈரோடு,கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் விவசாயநிலங்கள் பாசனம் பெறுகின்ற,ஆழியாறு பரம்பிக்குளம் பாசனத்திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆழியாறு,பரம்பிக்குளம்,சோலையாறு ஆகிய பிரதான அணைகளும் நிரம்பியே உள்ளன.
No comments:
Post a Comment