பொள்ளாச்சி.நவ.22. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருசக்கர வாகன மோட்டார் பந்தயங்கள் நடைபெற்றது.அடுத்த ஆண்டு ஜுன்மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த பந்தயங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு 2010.ஜுன் மாதம் கோவையில் நடைபெறவுள்ளது.இதுகுறித்த செய்திகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் பிரச்சார யுக்திகளில் ஒன்றாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று இருசக்கரவாகனங்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளை கோவை மாநகராட்சிஉறுப்பினரும் தென்மண்டல தலைவருமான பைந்தமிழ்பாரி கொடியசைத்து துவங்கி வைத்தார்.மேலும் நகர திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ்,மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் சாந்திதேவிதர்மராஜ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
50 சி.சி. மற்றும்100 சிசி என இருபிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழகம் மட்டுமின்றி,பல்வேறு மாநிலங்களிலுமிருந்தும் வந்திருந்த 200.க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.பந்தய தூரத்தை கடப்பதற்காக வீரர்கள் காட்டிய வேகமும்,சாகசமும் பார்வையாளர்களை பிரமிக்கவைத்தன.
குறைந்த விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாலையில் நடைபெற்ற விழாவில் ரொக்கப்பரிசுகளும்,வெற்றிக்கோப்பைகளும் வழங்கப்பட்டது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment