பொள்ளாச்சி.நவ.22 கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள வெள்ளிமுடி மலைவாழ்மக்கள் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு,சாதிச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியுPன்போது 26 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்பில் வசித்துவருபவர்களுக்குரிய சாதிச்சான்றிதழ்கள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். இதன்படி முதற்கட்டமாக வெள்ளிமுடி மலைவாழ்மக்கள் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கும் விழா பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இதில் பயிற்சிக் கலெக்டரான பிரசாந்த்,தனிவட்டாட்சியர் சாந்தாதேவி,வனச்சரகர் லட்சுமணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பகுதி மக்கள் 26 பேருக்கு,சாதிச்சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றிய அன்பழகன் மற்றும் பிரசாந்த் ஆகியோர்,கல்வியின் அவசியம் குறித்தும், அதன்பயன்கள் குறித்தும் மலைவாழ்மக்களிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்து,தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சியை பார்க்க,மின்வசதி உள்ளிட்ட,தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்து தருமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து விருந்தினர்களை கௌரவிக்கும் வகையிலும்,அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மலைவாழ்மக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி,அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.
No comments:
Post a Comment