பொள்ளாச்சி,கிணத்துக்கடவு பகுதியில் தென்னை சாகுபடிக்கு அடுத்ததாக தக்காளி சாகுபடியும் அதிகம்.பல நூறு ஏக்கர்களில் தக்காளி பயிரிடும் விவசாயிகளுக்கு வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே நல்ல விலை கிடைக்கிறது. மற்ற சில மாதங்களில் தக்காளியின் விலை கிலோ 0.50 பைசாவிற்கு இறங்கி விடுகிறது.இதுபோன்ற நேரங்களில் விளைவித்த தக்காளியை குப்பையில் போடுவதும், அல்லது செடியிலிருந்து பறிக்காமலே விடுவதும் வாடிக்கையான ஒன்று.
எனவே நல்ல விலை கிடைக்காத போது,தக்காளியை பதப்படுத்தி வைக்கவும்.விலை வரும்போது அதனை விற்கவும் வசதியாக பொள்ளாச்சி,கிணத்துக்கடவு,உடுமலை பகுதி விவசாயிகள் பயன் பெறும் வகையில் இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு ஒன்ற கட்டித்தர தமிழக அரசு முன்வரவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment