கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு,மற்றும் உடுமலை பகுதிகளில் சுமார் 500.க்கும் மேற்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல வகையான கயிறுகள் மட்டுமின்றி,மெத்தைகள், பூந்தொட்டிகள்,தரை விரிப்புகள் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஏராளாமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றும் வருகிறது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் ரூ.1000 கோடிக்கு வர்த்தக இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக கேரளா மாநிலம் கொச்சி அல்லது தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால்,கூடுதல் பொருட்செலவும், காலவிரயமும் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது.
எனவே, பொள்ளாச்சியை மையப்படுத்தி container fright station எனப்படும் சரக்கு பெட்டக முனையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்றும்,இதற்க்கு மாநில அரசும் உதவு வேண்டும் என்றும் நார்ப்பொருட்கள் உற்ப்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment